பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடி ஜி!

இன்று செப்டம்பர் 17, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 69வது  பிறந்த தினம். மோடியின் பிறந்த தின வாழ்த்துக்களை நாடு முழுவதுமுள்ள மக்கள் சமுக வலைதளத்தில் வாழ்த்துக்களை பரிமாறி டிரெண்டிங்காகியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது ஆகும்.

இந்திய பிரதமர் மோடி குஜராத் மாநிலம் மெக்சானா மாவட்டத்தில் உள்ள வாட்நகரில் 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்தார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர், 6 குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தவர் ஆவார். சிறு வயதில் ரயில் நிலையத்தில் மோடி தேநீர் விற்று வந்தார். மேலும் சகோதரர் உடன் சேர்ந்து, பேருந்து நிலையம் அருகே தேநீர் கடை ஒன்றை நடத்தி வந்தார்.

8 வயது முதல், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கினார். மோடி வாட்நகரில் மேல்நிலைக் கல்வியை முடித்தார். தனது 20 வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுப்பத்தி முழு நேர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஆர்.எஸ்.எஸ்சில் சிறப்பாக தொண்டாட்டி வருகையில். 1985 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். வட மாநிலங்களில் பிஜேபியின் தீவிர செயல்பாட்டாளராக இருந்து வந்தார்.

குஜராத், இமாச்சல பிரதேசத் தேர்தலில் பிரச்சாரங்களில் சிறப்பாக செயல்பட்டு அத்வானியின் கவனத்தை ஈர்த்தார். பல்வேறு கட்சிப் பொறுப்புகளை வகித்து வந்தார். மாநிலத்தின் பொறுப்புகள் பல வகித்தப் பின் 2001 இல் குஜராத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார், தொடர்ந்து 2002, 2007, 2012 என 4 முறை குஜராத் மாநில முதலமைச்சராக இருந்துள்ளார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாட்டின் 14வது பிரதமராக மோடி பதவியேற்றுக் கொண்டார். 2019 ஆம் ஆண்டில்  மக்களவைத் தேர்தலை வென்று பிரதமராக மீண்டும் பதவியேற்று செயல்பட்டு வருகின்றார்.
மோடியின் 69 வது  பிறந்தநாள் கொண்டாட்டமானது மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக தொண்டர்களாள் கொண்டாடப்படுகின்றது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான் சட்ட விதி 370 நீக்கப்பட்ட சாதனையை நினைவு கூர்ந்து  கொண்டாடி வருகின்றனர். இதனை அடுத்து மோடி தனது பிறந்தநாளான இன்று குஜராத் சென்றுள்ளார். குஜராத் மோடியின்  பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலைகட்டியுள்ளது.  மோடி தாய் ஹீரா பென்னிடம்  ஆசிர்வாதம் பெறுகிறார்.  மோடியின் பிறந்த நாளானது சேவை நாளாக பிஜேபி  தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Post a Comment

0 Comments