ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

மத்திய அரசின் ஏர் இந்தியா  இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உடையோர் விண்னப்பிக்கவும்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அசிஸ்டென்ட் சூப்பர்வைசர் பதவியில் 170 இடங்களை நிரப்படுகின்றன.
காலியிடங்கள் நாடு முழுவதுமுள்ள மண்டலம் வாரியாக கிழக்கு 15, மேற்கு 80, வடக்கு 50, தெற்கு 25 என மொத்தம் 170 இடங்கள் உள்ளன.



கல்வித்தகுதியாக  ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் டேட்டா என்ட்ரி அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேசன் துறையில் ஓராண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது) (b) மூன்றாண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது ஏர்கிராப்ட் மெயின்டெனன்ஸ் இன்ஜினியரிங் அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். ஏவியேசன் தொடர்பான மென்பொருளில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பாக  33 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். மேலும் அந்தந்த பிரிவினருக்கு ஏற்ப  சலுகைகள் உண்டு
 ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் ஸ்கில் டெஸ்ட் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

 ஆன்லைனில் விண்ணப்பங்களை செலுத்தலாம்.

விண்ணப்பக்கட்டணமாக ரூ. 1000 செலுத்த வேண்டும்.
ஏர் இந்தியாவில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி நவம்பர் 5, 2019 ஆகும்.
தேவைப்படுக் தகவல்களை பெற அதிகாரப்பூர்வ லிங்கினை கிளிக் செய்யவும்  www.airindia.in/writereaddata/Portal/career/840_1_Notification-18102019-CORRIGENDUM.pdf


மேலும் படிக்க:

Post a Comment

0 Comments