இன்றைய நவீன உலகில் கைப்பேசி தான் எல்லா இடத்தையும் ஆக்கிரமித்துள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. சிறு குழந்தைகள் முதற்கொண்டு அதில் உள்ள செயலிகளை பயன்படுத்தி விளையாடும் அளவிற்கு இன்றைய தலைமுறையினரை இந்த கைப்பேசி அடிமையாக்கியுள்ளது, அந்த அளவிற்க்கு பயன்பாடு அதிகரித்துள்ளது.
தெருவில் நடக்கும் பொழுது, பேருந்தில் பயனத்தின் போது, அலுவலகத்திலும், கல்லுரியிலும் ஏன் தற்போது பள்ளி செல்லும் மாணவ/மாணவிகளும் கூட உபயோகின்றனர். சந்தையில் எந்த புது மொபைல் அறிமுகப்படுத்தினாலும் அதை வாங்கி உபயோகித்து பார்த்துவிட வேண்டும் என்று ஒரு கூட்டமே அலைமோதுகிறது. அந்த அளவிற்கு அதில் உள்ள பயன்பாடுகளும், செயலிகளும் நம்மை ஈர்க்கின்றது. இப்படி அன்றாட வாழ்வில் பாதி நேரத்தை ஆக்கிரமித்துகொள்ளும் கைபேசியின் ஆற்றல் சக்தியை சேமிக்க நாம் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக உபயோகிப்போம்.
உங்கள் மொபைலில் ஆற்றலை சேமிக்க தனியாக ஆஃப்ஸ்களை டவுன்லோடு செய்திருந்தால் அதனை தயவு செய்து நீக்கிவிடுங்கள். உண்மையில் எந்த ஒரு செயலியும் அப்படி பயன்படுவதில்லை.
குறைந்தது வாரம் இருமுறையாவது மொபைல் போனை ரீஸ்டார்ட் செய்யவும் அல்லது ஸ்விட்ச் அஃப் செய்து 5நிமிடம் கழித்து ஆன் செய்து உபயோகிக்கவும்.
வால்பேப்பர் பயன்படுத்தும்போது முடிந்தவரை அனிமேஷன் படங்களை உபயோகிக்காதீர்கள். ஏனெனில் இது அதிக ஆற்றலை ஈர்க்கும் தன்மையுடையது.
உங்களுடைய மொபைல் சார்ஜர் தவிர மற்ற சார்ஜர்களை பயன்படுத்தினால் பேட்டிரி பழுதாகிவிடும் என்று பலரும் கூறியிருப்பார்கள். ஆனால் உண்மையில் அது அப்படி இல்லை. மற்ற மொபைல் போன்களின் சார்ஜர் உபயோகிக்கும் போது சார்ஜ் சற்று மெதுவாக ஏறும் அவ்வளவு தான்.
தரமற்ற அல்லது மலிவு விலையில் கிடைக்கும் சார்ஜர்களை பயன்படுத்தின்னால் நிச்சயம் உங்கள் பேட்டரி பழுதாகிவிடும்.
பேக்கிரவுண்ட் ஆஃப்ஸ் எனப்படும் பின்புறத்தில் இயங்கும் செயலிகளை நீக்கினால் ஆற்றலை சேமிக்கலாம். இதனை Disable செய்துவைத்தால் ஆற்றலை சேமிக்கலாம்.
மேலும் தேவையற்ற அஃப்ஸ்களை நீக்கியும் சேமிக்கலாம். இதனை பின்வருமாறு செய்யலாம். Settings-> apps->app preference ->Frequent usage apps(instead of alphabhet order) இந்த வரிசையில் வைத்தால் தேவையற்ற நாம் உபயோகிக்காத அஃப்ஸ்கள் கடைசியில் இருக்கும் அதனை பயன்படுத்தி நமக்கு பயன்படாத ஆஃப்ஸ்களை நீக்கலாம்.
GPS location யை தேவையற்ற பொழுது ஆஃப் செய்து வைத்தால் ஆற்றலை சேமிக்கலாம்.
சார்ஜ் எப்பொழுதும் 0% வந்தால் தான் சார்ஜ் போடுவேன் என்ற வழக்கத்தை தயவு செய்து விடுங்கள். ஏனெனில் இது நிச்சாயம் உங்கள் பேட்ரியை பழுதாக்கும். 15-20% வந்தவுடன் சார்ஜ் செய்து பேட்ரியின் லைஃப் டைமை சேமிக்கலாம்.
இன்டர்நெட்டை ஆன் செய்தால் சார்ஜ் சிலருக்கு சட்டென்று குறையும் இதனை தவிர்க்க ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்க்கவும் மேலும் பேக்கிரவுண்டில் ஏதாவது தேவையற்ற டவுண்லோடுகள் இருந்தால் அதனை தவிர்க்கவும்.
மேற்கண்ட இவ்வழிமுறைகளை பின்பற்றி உங்கள் மொபைல் போனின் ஆற்றலை சேமித்து பேட்ரி லைஃப் ஐ அதிகரித்து பாதுகாப்பாக நல்முறையில் உபயோகித்து பயன்பெறுங்கள்.
WRITTEN BY ICON AUTHOR OF SLAEKUCHI: SRIMATHI
மேலும் படிக்க:

1 Comments
Wow...thanks and useful.
ReplyDelete