குரூப் 1 பதவிகளும் அவற்றின் முக்கிய விவரங்கள்!

குரூப் 1 பதவிகள்:
குருப் ஒன் பதவிகள் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவை மாவட்ட பஞ்சாய்த்து அலுவலர் முதல் மாவட்டத்துணை ஆட்சியர் வரை பல்வேறு துறைகளை தன்னகத்தே கொண்டது குருப் ஒன், குருப் ஒன் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி வழங்குதலில் சில வழிமுறைகள் உண்டு. குருப் ஒன் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்குத் தங்களுக்கான பதவி வாய்ப்புகள் அறிந்திருத்தல் அவசியம் ஆகும். குருப் ஒன் தேர்வு மாவட்ட ஆட்சியர் (டிசி),காவல்துறை ஆணையர்(டிஎஸ்பி), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், வருமான வரி அலுவலர், மாவட்ட தணிக்கைத்துறைத்தலைவர், பிற்ப்படுத்த்ப்பட்ட மக்கள் நல்வாழ்வு செயலர் மற்றும் மாவட்டப்பதிவாளர் என துறைகள் உள்ளன.



இவற்றில் மாவட்ட ஆட்சித்துறைத்தலைவர் பதவி தேர்வில் வெற்றி பெற்றவர் உடனே அமர இயலாது மூன்று வருடம் துணை மாவட்ட ஆட்சியாளராகவோ மற்றும் அரசு தரும் அது சார்ந்த துறைகளில பணியாற்ற வேண்டும். இவ்வாறு பணியாற்றியப்பின் அவர் அடுத்த படிநிலையான மாவட்ட ஆட்சியாளராக பதவியில் அமர்வார் இது அனைத்து பதவிக்கும் பொருந்தும். இவ்வாறு ஒவ்வொரு துறைசார்ந்த குருப் ஒன் பதவிகளுக்கும் பயிற்சி காலங்கள் பதவிகளில் பணியாற்ற வேண்டும். இவற்றில் படிப்படியான உயர்நிலைகள் உண்டு.
டிசி பதவியானது செயலர் மற்றும் அரசு சார்ந்த துறை செயலர் பதவி வரை செல்லும். மற்றும் குருப் ஒன் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு துறையும் இவ்வாறு பயிற்சி காலம் அந்ததந்த பதவிக்கேற்றார் போல் இருக்கும். மேலும் அந்தந்த பதவிகளுக்கு பதவி உயர்வானது கிடைக்கும். குரூப் ஒன் பதவிகளுக்கான லிங்குகள் இங்கே கிடைக்கும்.

முன்னுரிமை:
டிஎன்பிஎஸ்சி தனது குருப் ஒன் அறிக்கையில் சில பதவிகளுக்கு படிப்பு முன்னுரிமை கொடுத்துள்ளது. இது டிஎஸ்பி போன்ற காவல்துறை ஆணையர் பதவிகளுக்கு கிரிமினாலஜி முடித்தவர்களுக்கு முன்னுரிமை தந்துள்ளது இவ்வாறே கமர்சியல் டேக்ஸ் ஆஃபிசர் வரி ஆணையர் போன்ற பதவிகளுக்கு கமர்சியல் லா, கம்ர்சியல் லா வித் டேக்ஸேசன் முடித்தவர்களுக்கு வழங்குகிறது. மேலும் இது வேலை வாய்ப்பு அலுவலர் பதவிகளுக்கு பொருளாதாரம், சமுகவியல் அல்லது புள்ளியல், உளவியல் பட்டம் பெற்றவர்கள் மற்றும் முதுநிலை சமுகவியலில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.

Post a Comment

0 Comments