குரூப் 1 வினாத்தாள் கணிப்பு தெரிந்து தேர்வுக்கு தயாராகுங்க!

குரூப் 1 தேர்வுக்கான கேள்வித்தாள் கணிப்பு அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும். மற்றும் கேள்விகள் குறித்த கணிப்புகள் தேர்வுக்கு உதவியாக இருக்கும். நன்றாகப் படியுங்கள் தேர்வை எளிதாக வெல்லுங்கள். 

கேள்வித்தாள் கணிப்பு :
கடந்த ஐந்து அல்லது மூன்றாண்டுகள் கேள்வித்தாள்கள் நன்றாக படிக்க வேண்டும் அதனை வைத்து கேள்விகளுக்கான முன்னுரிமைகள் தொகுக்க வேண்டும். அனைத்தும் படிக்க வேண்டும் தான், ஆனால் முன்னுரிமை முக்கியமானது உதாரணமாக குருப் ஒன் முதண்மை தேர்வு வெற்றி பெற 200 கேள்விகளிள் 50 கேள்விகள் கணிதமெனில் அதற்கு முன்னுரிமை கொடுத்து கட் ஆஃபில் பலர் வெல்கின்றனர். இவ்வாறு டிரிக்குகள் எனப்படும் நுணுக்கம் அறிந்து செயல்பட வேண்டும்.


அடுத்த கவனம் செலுத்த வேண்டியது 150 கேள்விகளிள் எது அதிகப்படியான எண்ணிக்கை கொண்டது எனில் நடப்பு மற்றும் அதனுடன் இணைந்த ஜிகே கேள்விகள் 30 முதல் 35 கேள்விகள், பின் அறிவியியல் 20 முதல் 25 கேள்விகள் வரை இடம் பெற்றிருக்கும் இதன்படி பார்த்தால் குருப் ஒன் தேர்வில் உங்கள் வசம் 90 கேள்விகள் கேட்கப்படும் பகுதிகள் தெரிந்துவிட்டது. மீதம் வரலாறு, பொருளியல், புவியியல், இந்திய அரசியலமைப்பு பகுதிகளில் 15 முதல் 20 வரை ஒவ்வொறு பாடங்களிலும் ஏற்றம் இறக்கங்களுடன் கேள்விகள் இருப்பினும் 15 முதல் 20 கேள்விகள் நிச்சயம் அமையும்.

இவற்றிலும் கேள்வித்தாளை நன்று ஆராய்ந்தால் தவிர்க்க முடியாத கேள்விகள் எப்பாடங்களில் கேட்கப்படுகின்றன என்பதை அறியலாம். ஒரு சிறிய உதாரணத்திற்கு இந்திய அரசியலமைப்பு பகுதியில் அடிப்படை உரிமைகள்,கடமைகள், முகவுரை, அரசியலமைப்பு உருவாக்கம் இவற்றில் நிச்சயம் இரண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன கேள்விகள் மாறுபடலாம் ஆனால் குறிப்பிட்ட பாடங்களில் கேள்வி அமைவது உறுதி, இவற்றை கணித்து செயல்ப்பட்டால் வெற்றி உறுதி இனி வரும காலங்களில் சிலேட்குச்சி தளம் தொடர்ந்து இவற்றை விளக்கும் .

பாடங்களில் சொந்த குறிப்பு, சிலேட்குச்சி தளம் போன்ற இணைய குறிப்புகள் , பொதுஅறிவு புத்தகங்களின் குறிப்புகள் போன்றவற்றை தொகுத்து வைக்க வேண்டும் தொடர்ந்து அவற்றை ரிவைஸ் செய்ய வேண்டும். மேலும் கேள்விகள் உருவாக்கி விடைத்தருவதை வாடிக்கையாக கொள்ள வேண்டும் அல்லது சிலேட்குச்சி தளம் போன்ற இணைய கேள்விகளை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.

மேலும் நாளிதழ்களிள் கேள்விகள் தரப்படுகின்றன அவற்றை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். சுய பரிசோதனை எனப்படும் செல்ஃப் டெஸ்ட் நம்மை மேம்படுத்தும் தேர்வில் வெற்றி பெற வைக்கும். ஆகவே உங்களது வெற்றிக்காக தொடர்ந்து படியுங்கள் சிலேட்குச்சி.

கேள்வித்தாள் குறிப்பு :
முந்தைய ஆண்டு கேள்விகள் அடங்கிய புத்தகங்கள் எளிதாக கிடைக்கின்றன . அவற்றை பாடவாரியாக பெறலாம். அவற்றை தொடர்ந்து சேகரிக்க வேண்டும். இதனை தொடர் பயிற்சி செய்ய வேண்டும். படித்தலுடன் அவற்றை டெஸ்ட் மூலம் நினைவு கொள்ள வேண்டும் . மேலும் சிலேட்குச்சி தொடர்ந்து  குறிப்புகளை வழங்கும். தினசரி சில தொகுப்புகளை பயிற்சியில் வழங்கும் அவற்றை தொடர்ந்து படியுங்கள் வெற்றிப் படிகள் உங்களுக்காக காத்து நிற்கின்றன பயணியுங்கள்.

“விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் வருமா வீட்டுகுயிலை கூட்டில் வைத்தால் பாட்டு பாடுமா “ என்ற வரிகளை நினைவில் கொள்ளுங்கள் இடம் , சூழல் கருதி செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் .

Post a Comment

0 Comments