சப்போட்டா விதைகள், நல்லெண்ணை ஆகியவற்றை பயன்படுத்தி பொடுகை கட்டுப்படுத்தும் தைலம் ஒன்றை தயாரிக்கலாம். சப்போட்டா பழத்திற்குள் இருக்கும் விதைகளை எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நல்லெண்ணையை வாணலியில் சிறிதளவு எடுத்து காய்ச்ச வேண்டும். எண்ணை காய்ந்ததும், அதில் பொடி செய்து வைத்துள்ள சப்போட்டா விதைகளை சேர்க்க வேண்டும்.
சப்போட்டா விதைகள் ஈரம் உள்ளவையாக இருக்கும் என்பதால் அதை அப்படியே எண்ணெயில் போட முடியாது. எனவே அதற்கு முன்னதாக அதை சிறிதளவு எண்ணெயில் வறுத்து எடுத்து உலர் தன்மையோடு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை பொடி செய்வதோ, நேரடியாக எண்ணெயில் சேர்ப்பதோ எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும். தற்போது சப்போட்டா விதை பொடியுடன் நன்றாக காய்ச்சிய நல்லெண்ணை எடுத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.

தலை குளிப்பதற்கு முன்னதாக இந்த தைலத்தை தலையில் நன்றாக தேய்த்து சுமார் 15 நிமிடங்கள் ஊரவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து இந்த தைலத்தை பயன்படுத்துவதன் மூலம் தலையில் உள்ள பேன், பொடுகு உள்ளிட்டவற்றின் தொல்லையில் இருந்து விடுபடலாம். இவ்வாறு சப்போட்டாவின் பழம் மட்டுமின்றி அதன் இலைகள், விதைகள் கூட மருத்துவ குணங்கள் கொண்டதாக விளங்குவதை நாம் பார்க்கலாம்.
சப்போட்டா பழம் சாப்பிட உதவும் தெரியும் அதுபோலவே சப்பாட்டாவின் விதையும் ஆரோக்கியத்தை சேர்த்து அழகுபடுத்தவும் உதவுகின்றது.
மேலும் படிக்க:
0 Comments