ஆயில் பாத் எடுக்கப் போறிங்களா அப்ப இதப் பாருங்க!

எண்ணெய் குளியல் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து உடல்  சூட்டை குறைக்கும் ஒன்றாகும். முன்னோர்கள் பயன்படுத்திவந்த இந்த முறையானது அவர்களை  ஆரோக்கிய மிக்கவர்களாக்கியது. அதனால் தான் அந்த காலத்தில் மருத்துவ மனைகள் தேவையின்றி இருந்தது. 

உச்சி முதல் பாதம் வரை நல்லெணெய்  உடல் முழுவதும் பூசி குறைந்த துணி உடுத்தி தேய்க்க வேண்டும்.  துணியில் எண்ணெய் படும் என்றால் அதற்கு தகுந்தால் போல் பார்த்து உடை உடுத்தி எண்ணெய் தேய்க்கவும்.

மருத்துவம் இன்று வியாபாரச் சந்தையில் இருக்கின்றது. முறையான  வாழ்கை முறையைப் பின்பற்றினால்  அவசரச் சிகிச்சைக்கு மட்டும் மருத்துவமனை  போனால் போதும். இல்லையெனில் மிகுந்த அதிக செலவு செய்து, ஆரோக்கியம் கெட்டு அலைச்சல் மட்டுமே மிஞ்சும். 

எண்ணெய் குளியலானது குறிப்பிட்ட சில நாட்களில்தான் செய்ய வேண்டும். பிறந்தநாள், நட்சத்திர திதி நாள் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. அமாவாசை, பௌர்ணமி மாதம், வருடப் பிறப்பு ஆகிய நாட்களில்   எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. ஏன் என்றால் இந்நாட்கள் எல்லாம் குளிர்ச்சியான நாட்கள் ஆகும் குளிர்ச்சியான நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது உடலிற்கு தேவையான சக்தி கிடைக்காது. புதன், திங்கள், வியாழன்  ஆகிய நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என நம் முன்னோர்கள்  கூறியுள்ளனர்கள். 



எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் வெய்யில் பட வெளியில் நின்றால் சிறப்பாகும். இல்லை எனில்  வீட்டில் சூர்ய கதிர்கள் படும் இடத்தில் நிக்கலாம். அல்லது பாத்ரூமில் அரைமணி நேரம் நின்றாவது பின் குளியுங்க சூரிய கதிர்கள் கொஞ்சமாவது  உடலில் கிடைக்கும்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் உடலில் சோர்வு இருக்கும். அந்நாளில் தூங்கமல் இருக்க வேண்டும், நகம் வெட்டக்கூடாது, இளநீர் குடிக்க கூடாது.  மேலும் வெறும் நல்லெண்ணெய் மட்டும் உடலில் தேய்த்து குளித்தால் போதுமானது ஆனால் சிலர் எண்ணெயை மிளகு, பூண்டு, சிறிய வெங்காயம் போன்ற எண்ணெயில் காய்ச்சிப் பயன்படுத்துவார்கள். அதுவும் உடலுக்கு நல்லதுதான். 

மேலும்  படிக்க:

தீபாவளி முதல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை பழக்கமாக்குங்க!

Post a Comment

0 Comments