நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சென்ற இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை பெற முடியவில்லை. லேண்டருடன் தொடர்பு கொள்ள தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வரும் இஸ்ரோவுடன் கைகோர்த்த அமெரிக்காவின் நாசாவும், ஹலோ விக்ரம் என குறுஞ்செய்தி அனுப்பி வைத்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
நாசா 2009 ஆம் ஆண்டு அனுப்பிய புலனாய்வு ஆர்பிட்டர் நிலவைச்சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இது விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேலே கடந்து சென்று அனுப்பவும், லேண்டருடன் சமிக்ஞை ஏற்படுத்தவும் முயற்சித்து வருகின்றது. இந்நிலையில் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியாமல், நாசாவும் தடுமாறுகின்றது நிலவின் தென்பகுதி பரப்பானது கரடுமுரடானது வெப்ப நிலையும் 14 நாட்களுக்கு ஒரு முறை மாறும் அதிகப்படியான வெப்பமும் இருக்கும்.
நாசாவால் தொடர்ந்து முயன்றும் லேண்டரின் இருப்பிடத்தில் இருந்தாலும் அதனுடன் எந்த தொடர்பும் செய்ய முடியவில்லை. நாசாவின் ஆர்பிட்டர் கேமரா (எல்.ஆர்.ஓ.சி) இலக்கு தரையிறங்கும் தளத்தைச் சுற்றி படங்களை எடுத்தது, ஆனால் லேண்டரின் சரியான இடம் தெரியவில்லை, எனவே லேண்டர் கேமரா பார்வையில் படவில்லை. அக்டோபர் 14 ஆம் தேதி எல்.ஆர்.ஓ தரையிறங்கும் அந்த தளத்தின் மீது பறக்கும், அப்போது வெளிச்சம் மிகவும் சாதகமாக இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.
0 Comments