2020 உலகப் போட்டிக்கு பஜ்ரங் புனியா தகுதி

கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் 2020 ஆம் ஆண்டிற்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி பெற்றார். கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்ததை அடுத்து ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்கும் வாய்ப்பினை பெறுகிறார். பஜ்ரங் புனியா ஏற்கனவே உலக போட்டியில் 2013-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும், 2018-ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இம்முறையில் பஜ்ரங் புனியா பதக்கத்தினை வெல்ல வேண்டும்  என்ற உறுதியில் செயல்படுவார். அடுத்த இந்தியப் பதக்கத்திற்கு இனி தயராக  களம் இறங்குவார்.  வாழ்த்துக்கள் பஜ்ரங் ஜி,

பெண்களுக்கு நடைபெற்ற பிரீஸ்டைல் பிரிவில் 62 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் 7-10 என்ற புள்ளி கணக்கில் நைஜீரியாவின் அமினாட் அடினியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

Post a Comment

0 Comments