உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் பூனியா. பஜ்ரங் புனியா ஹரியானா மாநிலத்தின் கௌடான் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். 2013 முதல் 2018இன் உலக கோப்பையில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
கஜகஸ்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் 65 கி.கி., 'பிரீஸ்டைல்' பிரிவு அரையிறுதியில் தோற்ற இந்தியாவின் பஜ்ரங் பூனியா, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இன்று மங்கோலியாவின் துமுர் ஓசிரை எதிர்கொண்டார்.
போட்டியின் துவக்கத்தில் ஏமாற்றிய பஜ்ரங், மீண்டும் ஓசிர் பிடியில் சிக்க, முதல் பாதியில் 2-6 என்ற கணக்கில் பின்தங்கினார். பின் இரண்டாவது பாதியில் சுதாரித்துக் செயல்பட்டார் பஜ்ரங் 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் வென்றார். ஆனால் பஜ்ரங் அரை இறுதிப் போட்டியில் வெற்றியை தவறவிட்டார்.
இப்போட்டியின் வெற்றி மூலம் உலக சாம்பியன் போட்டியில் பஜ்ரங் புனியா தனது வெற்றியை பதிவு செய்துள்ளார். புனியாவுடன் பிரிஸ்டைல் பிரிவில் 57 கிலோ பிரிவில் பங்கேற்ற ரவி தாகியா வெண்கலம் வென்றார்.
மேலும் படிக்க:
0 Comments