இந்திய விமானப்படையால் தகர்த்து எரியப்பட்ட பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு, மீண்டும் பயிற்சியை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இது காஷ்மீருடன் இந்தியாவின் பல்வேறு குறிவைத்து செயல்படவுள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
காஷ்மீரில் கடந்த பிப்.14 ஆம் தேதி புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது வெறியாட்டத்தில் இந்தியா 40 ஜவான்களை இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றயதை அடுத்த, இந்தியா இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்ட பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அளித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு மீண்டும் பயிற்சியை துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், காஷ்மீர் மட்டும் அல்லாமல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் வகையில், இங்கு 40 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பாகிஸ்தானின் முழு ஆதரவும் உள்ளது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான சட்டவிதி 370 நீக்கம் மற்றும் உலக அளவில் இந்திய ஆதரவு அதிகம் இவை அனைத்தும் பாகிஸ்தானை எரிச்சல் அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். ஜெய்ஸ் இ முகமது, அப்துல் ராவுப் போன்ற ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டங்களை வகுத்து பயிற்சி வழங்கப்படுகின்றது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் மட்டும் அல்லாமல், நாட்டின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த பயிற்சி பெற்று வருகின்றனர். பாலகோட் தவிர்த்து, மன்ஷேரா, குல்பூர் மற்றும் கோட்லி பகுதிகளிலும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர் என்ற உளவுத்துறை தகவல்கள் திடுக்கிட செய்கின்றன. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அனுப்படுவார்கள் காஷ்மீர் மற்றும் நாட்டின் முக்கிய தொழில் மற்றும் மக்கள் மிகுந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற தகவலால் அரசு முழு மூச்சுடன் பாதுகாப்பு நடவடிக்கையில் மாற்றம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
0 Comments