ஆசிய விளையாட்டு போட்டிகளின் குறிப்புகள் 2018!!!!!!!

ஆசிய விளையாட்டுகள்:
ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் கனவைக் கொண்டு இந்தியா இவ்வாண்டு களம் இறங்கியது அவற்றில் குறிப்பிடத் தக்க அளவில் வெற்றியும் கண்டுள்ளது. இந்த ஆண்டின்  சிறப்பு அம்சமாகக் குறிப்பிட வேண்டுமெனில் அது நமது ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் என்று கூறலாம்.  

2017 ஆம் ஆண்டு இந்தியாவின் விளையாட்டுத் துறை  அமைச்சராக  நியமிக்கப்பட்ட  ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டில் 2004 ஆம் ஆண்டில் வெள்ளி வென்று சாதித்தவர். 

இந்த ஆண்டு ஆசியன் விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்குப் பக்கபலமாக இருந்து அவர்களுக்கு உற்றதுணையாக இருந்துள்ளார் என்று கூறலாம். இதற்கு முன்னர்  இருந்த விளையாட்டு அமைச்சர்கள்  பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஆனால்  ராஜ்யவர்த்தன்ரத்தோர் சிங்கின் செயல்பாட்டினை நாம் பாராட்டியாக வேண்டும். இவ்வாறு தகுதியுள்ளோர் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு தருவோர்கள்  நாட்டிற்கு தேவையான அமைச்சர்கள் ஆவார்கள்.  தான் ஒரு அமைச்சர் என்றாலும் தனது ஆதரவுக்காக ஆசிய விளையாட்டு அரங்கம் வரை சென்று  செயல்பட்ட விதம்  மிகவும் பெருமையான ஒன்றாகும். இவ்வாறு செயல்படும் அமைச்சர்கள்   பதவியில் அமரும்போது வெற்றியும் விவேகமும் தானாகவே அமையும்.


 முதல் முதலில் 1951 ல் நடைபெற்றது.
நான்கு வருடத்திற்க்கு ஒரு முறை விளையாடப்படுகிறது.
இதனை ஒருங்கிணைக்கும் குழு: Asian Games Federation.
18 வது ஆசிய விளையாட்டு: இந்தோனேசியாவில் நடைபெற்றது.
2018 ஆசியா விளையாட்டு போட்டியின் நோக்கம்: ENERGY OF ASIA.

நடைபெற்ற நாட்கள்: 18 ஆகஸ்டு 2018 முதல் 2 செப்டம்பர் 2018 வரை.
ஆசிய விளையாட்டு போட்டிகளின் வரலாற்றில் முதன் முறையாக ஒரு நாட்டின் இரண்டு நகரங்களில் நடைபெற்றது. இந்தோனேசியவின் ஜகர்தா, பெலெம்பாங் நகரங்களில் நடைபெற்றது.


தொடக்க மற்றும் இறுதி நிகழ்ச்சிகள் ஜகர்தாவில் உள்ள ஜிலொரா பங்க் கர்னோ என்ற மைதானத்தில் நடைபெற்றது. 

2018 ல் (MOSCAT) நடைபெற்ற போட்டியின் சின்னம் மூன்று: 
Bhin bhin(ஒரு வகை பறவை), atung(ஒரு வகையான மான்), kaka(காண்டாமிருகம்).
மொத்தம் 58 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது, இதில் மொத்தம் 45 நாடுகள் பங்கு பெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் இந்திய நாட்டின் கொடியை ஏந்தி விளையாட்டு வீரர்களுக்குத் தலைமை தாங்கியவர் (Flag bearer) நீரஜ் சோப்ரா.

நிகழ்ச்சியின் இறுதி விழாவில் இந்திய நாட்டின் கொடியை ஏந்தி விளையாட்டு வீரர்களுக்குத் தலைமை தாங்கியவர் (Flag bearer) ராணி ராம்பால்.

அடுத்து நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்:
அடுத்து 2021ஆம் ஆண்டின் இளையோருக்கான ஆசியப் போட்டிகள் சுரபயா வில் நடைபெற உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான ஆசியப் போட்டிகள் சீனாவின் ஹங்க்ஜௌ, ஜ்ஹெஜியாங்க்ல் செப்டம்பர் மாதம் 10முதல் 25வரை நடைபெற உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மூன்றாவது நகரம் ஹங்க்ஜௌ. முன்னதாக 1990ல் பீஜிங்க், 2010ல் கௌங்க்ஜ்ஹொ ல் நடைபெற்றது.

பதக்க பட்டியல்:
சீனா தொடர்ந்து 10வது முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 
தங்கம் 132, வெள்ளி 92, வெண்கலம் 65 முறையே மொத்தம் 289 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.
ஜப்பான் தங்கம் 75, வெள்ளி 56, வெண்கலம் 74 முறையே மொத்தம் 205 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கொரியா (முதல் முறையாக வடக்கு மற்றும் தென் கொரியா இனைந்து விளையாடி உள்ளது) தங்கம் 49, வெள்ளி 58, வெண்கலம் 70 முறையே மொத்தம் 177 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியா தங்கம் 15, வெள்ளி 24, வெண்கலம் 30, மொத்தம் 69 பதக்கங்களுடன் 8வது இடத்தில் உள்ளது.

இந்திய வெற்றியாளர்கள்:
தங்கம் வென்றவர்கள்:
குண்டு எறிதல்(ஆண்கள்): டஜின்டெர்பால் சிங்க் தூர்- பஞ்ஜாப்.
ஈட்டி எறிதல்(ஆண்கள்): நீரஜ் சோப்ரா-ஹரியானா.
ட்டிரிபில் ஜம்ப்(Triple jump) (ஆண்கள்): அர்பிண்டர் சிங்க்- பஞ்ஜாப்.
ஹேப்த்லான்(Heptathlon)(பெண்கள்):ஸ்வப்னா பர்வான்- மேற்கு வங்காளம்.
800மீட்டர் ஓட்டப் பந்தயம்(ஆண்கள்): மஞ்சித் சிங்க்- பஞ்ஜாப்.
1500மீட்டர் ஓட்டப் பந்தயம்(ஆண்கள்): ஜின்சன் ஜொன்சன்-கேரளா.
4*400 தொடர் ஓட்டம்(பெண்கள்): ஹீமா டாஸ்(ஆஸ்ஸாம்-assam’s sports grand ambassodar), பூவன்மா மசெற்றியா ராஜு(கர்நாடகா), கயா கவட்(குஜராத்), கரொத் வெல்லுவா விஸ்மயா(கேரளா).
குத்துச் சண்டை 49கிலோ(ஆண்கள்): அமித் ஃபாங்கள்-ஹரியானா.
படகு ஓட்டுதல்(Quadruple sculls) (ஆண்கள்): சவார்ன் சிங்க் (பஞ்ஜாப்), சுக்ஹ்மீட் சிங்க் (பஞ்ஜாப்), ஓம் பிரகாஸ்(ராஜஸ்தான்), டட்டு பபான் ப்ஹொகனல்(மகராக்ஷ்டிரா).

துப்பாக்கி சுடுதல் (தங்கம் வென்றவர்கள்):
1).10மீட்டர் ஏர் பிஸ்டல்(ஆண்கள்): சௌரப்ஹ் சௌதரி(உத்திரப் பிரதேசம்).
2). 25மீட்டர் பிஸ்டல்(பெண்கள்)ள: ராஹி ஜீவன் சர்னொபட்(மகராக்ஷ்டிரா).
 டென்னிஸ்-இரட்டையர் (ஆண்கள்)- டிவிஜீ ஷரான், ரொஹன் மன்சன்டா போபன்னா.

 மல்யுத்தம்:
65கிலோ(ஆண்கள்)(Freestyle): பஜ்ரங்க் புனியா (ஹரியானா).
50கிலோ(பெண்கள்)(Freestyle):வினெஷ் ஃபோகட் (ஹரியானா).

வெள்ளி பதக்கம் வென்றவர்கள்:
100மீட்டர்,  200மீட்டர்(பெண்கள்) - டுடெஸ் சண்ட்(ஓடிக்ஷா).
400மீட்டர் (ஆண்கள்)-மொஹம்மட் அனாஸ் யாஹிய(கேரளா).
400மீட்டர் (பெண்கள்)-ஹீமா டாஸ்(அஸ்ஸாம்)
800மீட்டர் (ஆண்கள்)-ஜின்ஷன் ஜொன்ஷன் (கேரளா).

நீளம் தாண்டுதல் (பெண்கள்) - நீனா வரகில்(கேரளா)
பூப்பந்து(badminton)(பெண்கள் ஒற்றையர்) - பி வி சிந்து
ஹாக்கி(பெண்கள்):  தலைவர்-ராணி ராம்பால்(ஹரியானா)
கபாடி(பெண்கள்):  தலைவர்-பயால் சௌஹரி.

துப்பாக்கி சுடுதல்:
10மீட்டர்- ஏர் ரைபிள்-ஆண்கள்-தீபக் குமார்.
50மீட்டர்- ரைபிள் 3- ஆண்கள்-சஞ்சீவ் ரஜ்புட்(ஹரியானா)
ட்ராப்- ஆண்கள்-லலக்க்ஷய்
டபூள் ட்ராப்- ஆண்கள்- ஷர்டுல் விஹான்(உத்திரப் பிரதேசம்).
ஸ்குவாக்ஷ்(பெண்கள்): ஜொஷ்னா சின்னப்பா (கர்நாடகா), சுனய்னா குருவிலா, தன்வி க்ஹன்ன, தீபிக்கா பல்லிக்கல்(தமிழ் நாடு)
வெண்கலப் பதக்கம் வென்றவர்கள்:
தட்டு எறிதல்(பெண்கள்): சீமா புனியா (ஹரியானா).
பூப்பந்து(பெண்கள் ஒற்றையர்): சாய்னா நெஹ்வால்(ஹரியானா)
1500மீட்டர் (பெண்கள்) : சித்ரா உன்னிகிருக்ஷ்ணன் (கேரளா).
குத்துச் சண்டை 75கிலோ(ஆண்கள்): விகாஸ் கிருக்ஷ்ணன்.(ஹரியானா)
டேபில் டென்னிஸ்(Mixed Double): ஷரத் அசன்டா(தமிழ் நாடு), மணிகா பட்ரா(டெல்லி)
டென்னிஸ் (ஆண்கள் ஒற்றையர்): P.குணேக்ஷ்வரன், பிராபாகரன்(தமிழ் நாடு).
ஹாக்கி(ஆண்கள்): அணி தலைவர்-ஸ்ரீஜேக்ஷ்(தமிழ் நாடு).
கபாடி(ஆண்கள்): அணி தலைவர்-அஜய் தாகுர்.

ஸ்க்வாஷ்:
ஆண்கள் தனி: சௌரவ் ஹொசல்
பெண்கள் தனி: ஜொஷ்னா சின்னப்பா, தீபிக்கா பில்லிகல்.

துப்பாக்கி சுடுதல்:

10மீட்டர் ஏர் பிஸ்டல்(ஆண்கள்): அபிஷேக் வர்மா.
10மீட்டர் ஏர் பிஸ்டல்(பெண்கள்): ஹீனா சிந்து (பஞ்சாப்)


WRITTEN BY  ICON OF SLATEKUCHI: SRIMATHI B AND  புதுயுகபாரதி சோபனா

Post a Comment

0 Comments