நிலவில் விக்ரம் போனாலும் இஸ்ரோவின் ஆய்வுண்டு ஆர்பிட்டரும் உண்டு!

இந்தியாவின்  இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை நிலவில் தரையிறக்கும் பணி செப்டபர் 7 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் தொடர்ந்து பயணித்து  லேண்டரானது  நிலவில் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் தூரத்தில், பூமியுடனான கட்டுப்பாட்டை விக்ரம் லேண்டர் இழந்தது.
நாடு முழுவதும் அந்த பரப்பரப்பான நேரத்தில் இஸ்ரோ லேண்டரை தொடர்பு கொள்ள முடியாமல் தடைப்பட்ட நேரத்தில் நாட்டில் பல்வேறு விவாதங்களும், ஆதரவு ஊக்கத்திற்கும் இடையே, இடைவிடாது செயல்பட்டு கொண்டிருக்கின்றது இஸ்‌ரோ, இஸ்ரோவின் செயல்பாட்டை அது அடைந்த  உயரத்தையும், அதன் சந்திராயன் 2 சாதனையைப்  பார்த்த பிரமித்த அமெரிக்காவின் நாசா உலக நாடுகளைப் போல் ஆதரவு கொடுத்து இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவின் லேண்டர் நிலவில் தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் லேண்டர் இருப்பது, ஆர்பிட்டார் மூலம் கண்டறியப்பட்டது. இதனால் தொடர்ந்து விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். நாசாவும், இஸ்ரோவுக்கு உதவியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்தும், தொடர்பு கொள்ள முடியாமல் போராடியது.

விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் இன்று நிறைவடைகிறது. புவியின் 14 வெப்ப நாட்கள் முடிவதற்குள் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி, ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. புவியின் வெப்ப நாட்கள் இன்றுடன் செப்டம்பர் 19, முடிகிறது. நாளை முதல் 14 புவி இரவுகள் நிலவின் தென் பகுதியில் துவங்க உள்ளது. அந்த சமயத்தில் நிலவில் உறை வெப்பநிலை மைனஸ் 240 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக இருக்கும். என்பதால் அதீத குளிர் வெப்பநிலையில் எலக்ட்ரானிக் பொருட்களான லேண்டர் விக்ரம் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியன செயல்படமுடியாது.



விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்குவதில் ஏற்பட்ட கோளாறுளை சரி செய்ய நிபுணர்கள் குழுவான்து  ஆய்வு செய்து வருவதாகவும், விக்ரமின் ஆயுட்காலம் நாளை மறுநாளான செப்டம்பர், 20ஆம் தேதியுடன்  முடிவடைகின்றது என்பதை  இஸ்ரோ தெரிவித்திருந்தது.
 
மேலும் இஸ்ரோவின் விக்ரம் லேண்டர் பழுதானாலும், இஸ்ரோவால் நிலவில்  ஆர்பிட்டரை கொண்டு   தொடர்ந்து நிலவை சுற்றி பயணித்து,  ஆய்வுகளை தொடர முடியும், எனவும் தெரிவித்துள்ளது. ஆர்பிட்டரின் ஆயுட்காலமானது 7 ஆண்டுகள் 6 மாதம் ஆகும். இதனால் இஸ்ரோவின் அடுத்தடுத்த ஆயுவுகள் தொய்வின்றி நடைபெறும் நூலியில் விட்டத்தை நெருங்கித் தொடும் வல்லமை இஸ்ரோவுக்குண்டு  வாழ்த்துவோம் .

Post a Comment

0 Comments