தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புண்டு!

தமிகழத்தில் மேலும் மழை பெய்ய வாய்ப்புண்டு, வாவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களிடம்  வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான வரை  மழை  பெய்யலாம்.
 
மேலும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக அறிவித்தார்.



கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 15செ.மீ, திருச்சி புல்லம்பாடி, அரியலூரின் ஜெயங்கொண்டத்தில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

சென்னையை பொருத்த மட்டில்  ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் வடப்பகுதி மற்றும்  புதுச்சேரி கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என புவியரன் கூறினார்.

Post a Comment

0 Comments