கேட் தேர்வு எழுதுறிங்களா!.....

கேட் தேர்வு குறித்து தகவல்கள்  தேர்வர்கள் அறிந்துகொள்ள மாணவர்கள் . செப்டம்பர் மாதம் துவங்கி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தேர்வான கேட் தேர்வை, இன்ஜினியரிங் மற்றும் அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்றிருப்பவர்கள்  தங்களது பாடத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகள், மூலமாக மேற்படிப்பு அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றில் பணி வாய்ப்பை பெறவதற்கான குறிப்பினை படித்துப் பார்த்து பின்பற்றவும்.

இந்தியன் ஆயில், ஓ.என்.ஜி.சி, கெய்ல், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் தங்களது ஆபிசர்  பணியாளர்களை பணிக்கு எடுத்துக் கொள்ள கேட் தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. 
 
தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்களுடன் நேர்முகத் தேர்வில் பெற்றிடும் மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பணிவாய்ப்பு தரப்படுகிறது. 

இந்தியாவில் 37க்கும் மேற்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு தான் பணியாளர்களை மெரிட் மதிபெண்களை எடுத்துக் கொள்கின்றன. மேலும் கேட் தேர்வின் மதிப்பெண்களைக் கொண்டு சி.எஸ்.ஐ.ஆர்., போன்ற ஆய்வு நிறுவனங்களில் ஆய்வுப் படிப்பிலும் சேர முடியும். 

கேட் தேர்வில் தேர்சிப் பெற்றோர்கள் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்பே பெறுவோருக்கு பெலோஷிப் எனப்படும் உதவித் தொகையும் பெறப்படுகின்றது.  
 
கேட் தேர்வு எழுதுவது மூலம்  நாட்டின் புகழ் பெற்ற ஐ.ஐ.டி நிறுவனங்கள் மூலம் நடத்துகின்றன. இந்தத் தேர்வை ஐ.ஐ.எஸ்சி., மற்றும் 7 ஐ.ஐ.டி க்கள் இணைந்து நடத்தவுள்ளன 

இந்த ஆண்டுக்கான தேர்வை டெல்லி ஐ.ஐ.டி, நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
மொத்தம் 25 பாடங்களில் தேர்வு நடத்தப் படுகிறது இந்த ஆண்டு பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளது. கேட் தேர்வை வெல்ல  தேர்வர்களின்  பட்டப்படிப்பு பாடத்தில் இருந்து தேர்வை எழுதலாம். 
 
தேர்வு முறை:
ஒரே நாளில் 2 வேளைகளில் இந்தத் தேர்வு நடக்கும். முழுக்க கம்ப்யூட்டர்  தேர்வாக நடக்கும்.  தேசிய அளவிலான இந்தத் தேர்வு ஆண்டுக்கு ஒரு தடவை மட்டுமே நடத்தப்படுகிறது. 

ஆன்லைனில் இந்தத் தேர்வானது 3 மணி நேரம் தேர்வாக  நடக்கும். ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் 65 கேள்விகள் இடம் பெறும். மேலும்  ஒரு முறை இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

 ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தேர்வை நாடு முழுவதும் 10 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
 
தேர்வு தேதிகள்:
கேட் தேர்வு நடைபெறும் தேர்வுக்கான அட்டவணைகளை இங்கு பதிவிட்டுள்ளோம். அவற்றை பின்ப்பற்றி தேர்வுக்கு விண்ணப்பித்து, எழுதி தேர்ச்சி பெறவும். 

ஆன்லைனில் தேர்வுக்கு  செப்டம்பர் 3 முதல்   விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க  அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி செப்டம்பர் 24 ஆகும்.

கேட் தேர்வு பாடத்தை மாற்றி விண்ணப்பிக்கக் கடைசி நாள் அக்டோபர் 3 முதல் 4வது வாரம் வரை, 
தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள  விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி  நவம்பர் 15 ஆகும்.

மாதிரித் தாள் வெளியிடப்படுவது அக்டோபர் கடைசி வாரத்தில்
தேர்வுக்கான அழைப்புக்கு கடிதம் கிடைக்கப் பெறுவது ஜனவரி 3, 
தேர்வு நாள் பிப்ரவரி 1,2,8,9
தேர்வு முடிவு வெளியாகும் நாள் மார்ச் 16
இந்தத் தேர்வு எழுத வயதுத் தகுதி இல்லை.
 
 
 
கல்வித்தகுதி:
 கேட் தேர்வினை எழுதுவோருக்கான அறிவிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியாக
இன்ஜினியரிங் பட்டப் படிப்பு முடித்திருக்கவேண்டும். அல்லது கடைசி ஆண்டு இன்ஜினியரிங் படிப்பில் இப்போது படிப்பவராக இருக்க வேண்டும். அறிவியல் பட்ட மேற்படிப்பு முடித்திருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பில் குறைந்தது குறிப்பிட்ட சதவீதம் பெற்றிருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை
முழு விபரங்களை அறிய gate.iitd.ac.in/ இணைய தளத்தை பார்த்துக் கொள்ளவும்.

Post a Comment

0 Comments