இந்திய ராணுவத்தில் வேலை வேண்டுமா!...

இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவுக்கு இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டது. தகுதியும், விருப்பமுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
மத்திய அரசின் இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் பின்வருமாறு
 ஆண்கள் – 175, பெண்கள் - 14
 சென்னையில்   ஒடிஏவில் பயிற்சி நடைபெறும்.

இப்பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள  வயதானது 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதியாக சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், ஏரோநெட்டிக்கல், கம்ப்யூட்டர் என பொறியியல் பாடத்தில் பல்வேறு  துறைகளில் காலியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறையில் பொறியியல் பட்டம் முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ராணுவத்தில் பணிபுரிந்த கணவனை இழந்த விதவைமார்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப பிரிவுக்கு இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். அவர்கள் தொழில்நுட்பம் அல்லாத பிரிவுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. விதவை பெண்களுக்கு தொழில்நுட்ப பிரிவில் 1 காலியிடமும், தொழில்நுட்பம் அல்லாத பிரிவுக்கு 1 காலியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

தகுதியுடைய தேர்ச்சிப் பெறுவோர்கள் 49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். சென்னை ஆபீசர் டிரைனிங் அகாடமியில் (ஒடிஏ)  பயிற்சிகள் பெறலாம்.

விண்ணப்பம்:
ஆன்லைணில் விண்ணப்பங்களை செலுத்தலாம்.
 விண்ணப்பதாரர்கள் அதிகாரப் பூர்வ தளத்தில் கிளிக் செய்துwww.joinindianarmy.in
 விண்ப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிப்பை முழுமையாகப் படித்தப் பின்பு விண்ணப்பிக்கலாம்.

http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/tech_54.pdf
இந்தியன் ஆர்மி பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகஸ்ட் 22, 2019 ஆகும். 

Post a Comment

0 Comments