லிங்க வழிபாட்டின் பயன் மற்றும் சிறப்புகள்!

 தென்னாடுடைய சிவனுக்கு ஏராள பக்தர்கள் உண்டு.   சிவபெருமான் பற்றி அறிய முக்காலமும் போதாது ஆதியும் அந்தமுமாய விளங்கும் அகிலத்தின் நாயகன் சிவ பெருமான் குறித்து சிவன் பக்தர்கள் பெரியோர்கள் தெரிவித்த விளக்கங்களின்  தொகுப்பினை இங்கு கொடுத்துள்ளோம். 

சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் மூன்று வகைப்படும் என்றும் அவையாவன ஷணிக லிங்கம்,இஷ்ட லிங்கம், ஆத்ம லிங்கம் என்றும் வகைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.  இவை குறித்து அறிவோம்.

ஷணிக லிங்கம்:

ஷணிக லிங்கத்தின் சிறப்புகள் மற்றும் வழிப்பாட்டுளாக, நாள்தோறும் சிவ வழிபாடு நடத்திய பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். மிகவும் எளிதாக உருவாக்கப்படும். இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம்.


குருவிடமிருந்து லிங்கத்தை பெறலாம். இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம். கிழே குறிக்கப்பட்டுள்ள 16 வகை லிங்கங்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் லிங்களால் பெரும் அருள் கொடுக்கப்பட்டுள்ளது.

1. புற்றுமண் லிங்கம் - மோட்சம் தரும்

2. ஆற்றுமண் லிங்கம்- பூமிலாபம் தரும்

3. பச்சரிசி லிங்கம் - பொன், பொருள் தரும்

4. அன்ன லிங்கம் .- அன்ன விருத்தி தரும்

5. பசுவின் சாண லிங்கம் - நோய்கள் தீரும்

6.வெண்ணெய் லிங்கம் -மன மகிழ்ச்சி தரும்

7. ருத்ராட்ச லிங்கம் -  அகண்ட அறிவைத் தரும்

8. விபூதி லிங்கம் .- அனைத்து செல்வமும் தரும்

9. சந்தன லிங்கம் - அனைத்து இன்பமும் தரும்

10. மலர் லிங்கம் - ஆயுளை அதிகமாக்கும்

11. தர்ப்பைப்புல் லிங்கம் .- பிறவியிலா நிலை தரும்

12. சர்க்கரை லிங்கம் - விரும்பிய இன்பம் தரும்

13. மாவு லிங்கம் - உடல் வன்மை தரும்

14. பழ லிங்கம் - சுகத்தைத் தரும்

15. தயிர் லிங்கம் - நல்ல குணத்தைத் தரும்

16. தண்ணீர் லிங்கம் - எல்லா மேன்மைகளும் தரும்


இஷ்ட லிங்கம்:

இஷ்டலிங்கத்தின் மகிமை அவற்றினை எவ்வாறு உருவாக்கி பக்தர்கள் வழிபடுவார்கள் என்பதனை கிழே கொடுத்துள்ளோம்.



மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும். அவ்வாறு இதுவரை யார், யாருகு என்னென்ன லிங்கங்கள் கிடைத்தன என்பதை பார்போம்.

1. இந்திரன் - பத்மராக லிங்கம்

2. குபேரன் - ஸ்வர்ண லிங்கம்

3. யமன் - கோமேதக லிங்கம்

4. வருணன்- நீல லிங்கம்

5. விஷ்ணு - இந்திர நீல லிங்கம்

6. பிரம்மன் - ஸ்வர்ண லிங்கம்

7. அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் - வெள்ளி லிங்கம்

8. வாயு - பித்தளை லிங்கம்

9. அசுவினி தேவர்கள் - மண் லிங்கம்

10. மகா லட்சுமி - ஸ்படிக லிங்கம்

11. சோம ராஜன் - முத்து லிங்கம்

12. சாதுர்யர்கள் - வஜ்ஜிர லிங்கம்

13. பிராம்மணர்கள் - மண் லிங்கம்

14. மயன்- சந்தன லிங்கம்

15. அனந்தன் முதலான நாகராஜர்கள் - பவள லிங்கம்

16. தைத்தியர்கள், அரக்கர்கள் - பசுஞ்சாண லிங்கம்

17. பைசாசங்கள் -இரும்பு லிங்கம்

18. பார்வதி - வெண்ணெய் லிங்கம்

19. நிருதி - தேவதாரு மர லிங்கம்

20. யோகிகள் - விபூதி லிங்கம்

21. சாயா தேவி - மாவு லிங்கம்

22. சரஸ்வதி ..... ரத்தின லிங்கம்

23. யட்சர்கள் ..... தயிர் லிங்கம்


ஆத்ம லிங்கம்:

தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம் ஆகும். இவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.

1. மண்  - காஞ்சிபுரம் - ஏகாம்பர லிங்கம்

2. நீர் - திருவானைக்கா - ஜம்பு லிங்கம்

3. நெருப்பு - திருவண்ணாமலை - அருணாசல லிங்கம்

4. வாயு - திருகாளத்தி - திருமூல லிங்கம்

5. ஆகாயம் - சிதம்பரம் - நடராச லிங்கம்


Post a Comment

0 Comments