பெற்றோர்களே எவ்வளவு கஷ்டப்பட்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்த்து சமுதாயத்தில் அவர்களை ஒரு நிலைக்குக் கொண்டு செல்ல மிகவும் கஷ்டப்படுகிறீர்கள், ஆனால் சில பிள்ளைகள் உங்கள் கஷ்டங்களை புரிந்து கொண்டு உங்கள் கனவுகளை நினைவாக்குகின்றனர். சில பிள்ளைகள் பெற்றோர்களின் கனவுகளை சுமையாகக் கருதுகின்றனர் மேலும் சில பிள்ளைகள் பெற்றோர்களின் கனவை நனவாக்க படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் நுழைவு தேர்வு போன்ற தேர்வுகளில் தோல்வியுற்றால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எடுக்கும் தவறான முடிவு பெற்றோர்களுக்கு மட்டுமல்ல இந்த சமுகத்திற்கே அது சவாலா இருக்கின்றது.
எதிர்நீச்சல் அடிக்க கற்றுக் கொடுங்கள்:
இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாட்டில் பழமையும் புதுமையும் ஒருசேர பின்ப்பற்றப்படுகின்றது. பிள்ளைகளுக்காக பெற்றோரும் பெற்றோர்க்காக பிள்ளைகளும் வழக்கங்களில் மாற்றங்கள் புகுத்து இருத்தரப்பினரும் ஒரு சேர பயணிக்கும் இக்காலக்கட்டங்களில் நாம் பிள்ளைகளை வீரமானவர்களாகவும் எதையும் தாங்கும் திறன் படைத்தவர்களாக உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சமாளிக்கும் திறன், வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடிக்க கற்று கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
தோல்வி பாடம் கற்றுகொள்ளுங்கள் மாணவர்களே :
மாணவர்கள் தோல்வியை பற்றிய பயமின்றி செயல்பட பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து மாணவர்களின் எதிர்காலத்தினை கட்டமைக்க வழிவகுக்க வேண்டும்.
பக்கத்து வீட்டு சக மாணவனோடு உங்கள் பிள்ளைகளின் திறனை ஒப்பீடு செய்யாதீர்கள் அது மிகமோசமான விளைவு கொடுக்கும். எந்தவொரு பாடம், விளையாட்டு தேர்வானாலும் தோல்வி பற்றிய பயமின்றி செயல்படும் மாணவர்களை உருவாக்குங்கள்.
தோல்வியை எதிர்கொள்ளும் பாடம்:
நீட் NEET போன்ற நுழைவு தேர்வுகளில் ஒரு முறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் பலமுறை தேர்வு எழுதி வெற்றி பெற்றுவிடலாம். ஆனால் வாழ்வில் உயிர் போனால் மீண்டும் வராது. முகமது கஜினி இந்தியா மீது 17 முறை போர் தொடுத்து 16 முறை படையெடுத்து செல்வங்களை கொள்ளையடித்தார்.
தானத்தில் சிறந்தவன் அங்க தேச மன்னன் கர்ணன் குலத்தில் தாழ்ந்த தேரோட்டியின் மகன் என்பதால் வில்வித்தை பயில அவரை அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் தனக்கு ஏற்பட்ட பல தடைகளை தகர்த்தெறிந்து வித்தையில் சிறந்து விளங்கினார். இவ்வாறு பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள்.
எதையும் எதிர்கொள்ளும் துணிவு:
மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமுதாயம் இணைந்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி துணையாக இருக்க வேண்டும். தேர்வு என்பது ஒரு பொருட்டே அல்ல ஒரு முறை தோற்றாலும் மீண்டும் எழுதி அதில் வெற்றி பெறலாம். தேர்வில் தோற்றால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை என்பதை உங்கள் பிள்ளைகளின் மனதில் பதிய வையுங்கள்.
மதிப்பெண்ணை மட்டும் வைத்து ஒருவரை சிறந்த மாணவர் என்று கூறிவிட முடியாது. தேர்வில் தோற்ற பலரும் வாழ்க்கையில் சிறந்து விளங்கியுள்ளனர். மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையல்ல மதிப்பெண்ணையும் தாண்டி பல விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன.
பெற்றோர்களே மாணவச் செல்வங்கள் ஆகிய உங்கள் பிள்ளைகளிடம் உற்ற நண்பனாக அன்பும் பாசமும் ஊட்டி தன்னம்பிக்கை கதைகள் கூறி அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் நிச்சயம் இந்த சமுதாயத்தில் உயர்ந்து நிற்பார்கள். மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிடாமல் உங்கள் பிள்ளைகளின் தனித்திறனை அறிந்து தினமும் அதனை எடுத்து கூறி பாராட்டி " காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு" என்பது போல் அவர்களை பேணி பாதுகாத்திடுங்கள்.
Written by Toll free.N
Written by Toll free.N
4 Comments
Super...
ReplyDeleteGood super
ReplyDeleteமிகவும், நன்று.
ReplyDeleteதங்களின்,ஊக்கமூட்டும் தொகுப்பு
கருத்திற்க்கு நன்றி.
மிகவும், நன்று.
ReplyDeleteதங்களின்,ஊக்கமூட்டும் தொகுப்பு
கருத்திற்க்கு நன்றி.