மூன்று நாட்கள் தமிழகத்தில் கனமழை- வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் மேலும் 3 நாட்கள் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானில மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மதுரை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம், சேலம், தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மிதமான மழை பெய்யும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வந்தவாசி - 12 செ.மீ., போளூர் - 9 செ.மீ., ஆரணி - 8 செ.மீ., ஆம்பூர் - 7 செ.மீ., ஆண்டிப்பட்டி - 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.  தமிழகத்தில் பெய்யும் கன மழை காரணமாக  ஆறு, குளம் போன்ற பகுதிகளில் நீர் பரப்பு அதிகரித்துள்ளது. மழை நீர் சேகரிப்பின் அவசியமாகும்.  மழை காலத்தில் சேகரிக்கப்படும் நீரினாது  மழையில்லா  காலங்களில் உதவும்.

Post a Comment

0 Comments