பாஜகவின் மூத்த தலைவர், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும மோசமாகப் பாதிக்கப்பட்டு இன்று டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இறந்தார்.
முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினையால் கடந்த 9-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .
இதற்கிடையில் அவரின் அவரின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் அவரின் அவரின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டது.
அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து அறிய பிரதமர் மோடி, பாஜக மூத்ததலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் சென்று மருத்துவமனையில் சந்திதனர்.
ஆகஸ்ட் 10-ம் தேதியிலிருந்து ஜெட்லியின் உடல்நலன் குறித்து எய்ம்ஸ் நிர்வாகம் எந்தவிதமான தகவலும் வெளியிடவில்லை. இருப்பினும் ஜெட்லியின் உடல்நிலையை, நேற்று இரவிலிருந்து மிகவும் மோசமடைந்து வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன இந்த நிலையில் அவர் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை இன்று அறிவித்துள்ளது.
நாட்டின் நிதி அமைச்சராகவும், சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக இருந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இவர் ஜிஎஸ்டி போன்ற வரிக் கொள்கை நாடு முழுவதும் கொண்டுவர முக்கிய காரணமாக இருந்தவர்.
0 Comments