டிஎன்பிஎஸ்சியின் வேளாண்மைத்துறையில் வேலைவாய்ப்பு!

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான பணிவாய்ப்பு வெளியீடு, டிஎன்பிஎஸ்சியில் அறிவிக்கப்பட்டுள்ள அக்ரிகல்சர் ஆபிஸர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

டிஎன்பிஎஸ்சியில் அறிவிக்கப்பட்டுள்ள அக்ரிகல்சர் ஆபிசர் பணிகளின் மொத்த எண்ணிக்கை  580 ஆகும். 



அஸிஸ்டெண்ட் அக்ரிகல்சர் ஆபிசர் பணிக்கு கல்வித்தகுதியாக  12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட அக்ரிகல்சர் பாடத்தில் டிப்ளமோ படிப்பினை அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் படித்து முடித்திருக்க  வேண்டும். 

18 முதல் 30 வயதுவரையுள்ளோர் மட்டுமே பொதுபிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் விண்ணப்பிக்க முடியும. மற்ற பிரிவினருக்கு  வயது  வரம்பில்லை. 

ஏஏஒ  பணிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 20,600 முதல் 65,500 வரை பெறலாம்.

எழுத்து மற்றும், நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். 

பணியின் பெயர்
ஏஏஒ
வயது வரம்பு
18-30 வயது வரை
கல்வித் தகுதி
10+2+2 டிப்ளமோ
பணியிடங்கள் எண்ணிக்கை
580
சம்பளம்
ரூபாய் 20,600-65,500 வரை பெறலாம்
பணியிடம்
தமிழ்நாடு


அதிகாரப்பூர்வ அறிவிக்கை விதிமுறைகளை முழுமையாக படித்துப் பார்த்து தகுதியும் விருப்பமும் உள்ளோர், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பத்தினை முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.

வேளாண்மைத்துறையில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி  ஜனவரி 27, 2019 வரை ஆகும். 

எழுத்து தேர்வு தேதி தாள் 1, ஏப்ரல் 7, 2019  காலை 10.00 மணிமுதல் நண்பகல் 1.00 மணி ஆகும்.

எழுத்து தேர்வு தேதி தாள் 2,  ஏப்ரல் 7, 2019 நண்பகல் 2.30 மணிமுதல் நண்பகல் 4.30 மணி ஆகும்.
அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பு லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம். 



மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments