தமிழகத்தில் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்!

தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் மேலும் மக்களவை தேர்தலும் அன்றே நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். இடைத்தேர்தல் நடைபெறும் தேதி ஏப்ரல் 23ம் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது தொடர்பாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் தேதி குறித்த அறிவிப்பில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி அதற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
17வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி நிறைவடைகிறது. ஏழு கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்தல், தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 3 தொகுதிகள் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடைபெறாது என்றார்.

இதற்கிடையில் மக்களவை தேர்தல் உள்ளிட்ட, காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் நாள் தொடர்பான விவரங்களை, தலைமை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டது. அதில் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தேதி ஏப்ரல் 23, 2019 என குறிப்பிடப்பட்டிருந்தது.

தலைமை தேர்தல் ஆனையர் சுனில் அரோரா, தமிழகத்திற்கான இடைத்தேர்தல் நடைபெறும் நாள் ஏப்ரல் 18, 2019 என கூறிய நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட இந்த அறிக்கை குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கொடுத்தார்.

அப்போது அவர், தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் தேதியில் அச்சுப் பிழை நிலவுகிறது. விரைவில் இது சரிசெய்யப்படும். தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என அவர் உறுதியாக தெரிவித்தார்.

முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் : ஆந்திரா-25, அருணாசல பிரதேசம்-2, அஸ்ஸாம்-5, பீகார்-4, சட்டீஸ்கர்-1, ஜம்மு காஷ்மீர்-2, மஹாராஷ்ட்ரா-7, மணிப்பூர்-1, மேகாலயா-2, மிசோரம்-1, நாகாலாந்து-1, ஒடிசா-4, சிக்கிம்-1, தெலுங்கானா-17, திரிபுரா-1, உ.பி.,-8, உத்தரகாண்ட்-5, மேற்கு வங்கம்-2, அந்தமான்-1, லட்ச தீவு-1, மொத்தம் 91 தொகுதிகள். 

இரண்டாம் கட்டத்  தேர்தல்  நடைபெறும் மாநிலங்கள்: அஸ்ஸாம் (5 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), சட்டீஸ்கர் (3 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (2 தொகுதிகள்), கர்நாடகா (14 தொகுதிகள்), மகாராஷ்ட்ரா(10), ஒடிசா(5), உ.பி., (8), மேற்கு வங்கம்(3), மணிப்பூர் (1), தமிழ்நாடு (39), திரிபுரா(1), புதுசேரி (1) மொத்தம் 97 தொகுதிகள் 

மூன்றாம் கட்டத் தேர்தல்  நடைபெறும் மாநிலங்கள்: அஸ்ஸாம் (4 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), சட்டீஸ்கர் (7 தொகுதிகள்), குஜராத் (26 தொகுதிகள்), கோவா (2 தொகுதி), ஜம்மு காஷ்மீர் (1 தொகுதிகள்), கர்நாடகா (14 தொகுதிகள்), கேரளா (20 தொகுதிகள்) மகாராஷ்ட்ரா(14), ஒடிசா(6), உ.பி., (10), மேற்கு வங்கம்(5), தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி(1), டாமன் மற்றும் டையு(1) மொத்தம் 115 தொகுதிகள்

 நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறும்  மாநிலங்கள் : பீகார் (5 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (3 தொகுதிகள்), ம.பி., (6 தொகுதிகள்), மகாராஷ்ட்ரா (17 தொகுதிகள்), ஒடிசா (6 தொகுதி), ராஜஸ்தான் (13 தொகுதிகள்), உ.பி., (13 தொகுதிகள்), மேற்கு வங்கம் (8 தொகுதிகள்) மொத்தம் 71 தொகுதிகள் 
 
ஐந்தாம்  கட்டத் தேர்தல் நடைபெறும்  மாநிலங்கள் :   பீகார் (5 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (2 தொகுதிகள்), ஜார்கண்ட் (4 தொகுதிகள்), ம.பி., (7 தொகுதிகள்), ராஜஸ்தான் (12 தொகுதி), உ.பி., (14 தொகுதிகள்), மேற்கு வங்கம் (7 தொகுதிகள்), மொத்தம் 51 தொகுதிகள் 

ஆறாம் கட்டத் தேர்ல் நடைபெறும்  மாநிலங்கள் : பீகார் (8 தொகுதிகள்), ஹரியானா (10 தொகுதிகள்), ஜார்கண்ட் (4 தொகுதிகள்), ம.பி., (8 தொகுதிகள்), உ.பி., (14 தொகுதி), மேற்கு வங்கம் (8 தொகுதிகள்), தில்லி- என்சிஆர் (7 தொகுதிகள்), மொத்தம் 59 தொகுதிகள் 

ஏழாம் கட்டத் தேர்தலில்   நடைபெறும் மாநிலங்கள் : பீகார் (8 தொகுதிகள்), ஜார்கண்ட் (3 தொகுதிகள்), ம.பி., (8 தொகுதிகள்), மேற்கு வங்கம் (9 தொகுதிகள்), சண்டிகர் (1 தொகுதி), உ.பி., (13 தொகுதிகள்), ஹிமாச்சல் (4 தொகுதிகள்), மொத்தம் 59 தொகுதிகள்
மேற்குறிப்பிட்ட தொகுதிகள் அனைத்திலும் திட்டம்ப்படி தேர்தல் ஆணையம் திறம்பட பணியை செய்ய திட்டம்மிட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் இன்னப் பிற மாநிலங்களில் சட்ட மன்றத் தொகுகளின் தேர்தலையும் ஒரே கட்டமான நாடாளுமன்ற தேர்தலையும் நடத்தி வீண் செலவுகள் தேர்தல் அலைப்பறைகளை குறைக்கும் விதாமாக  தேர்தல் ஆணையம்  செயல்பாடுகள் உள்ளன குறிப்பிடத்தக்கது ஆகும்.
 அரசியல் தகிடுதத்தம் தொடர்ந்து நடை பெறும் நமது சமுதாயத்தில் மக்கள் தெரிந்தே  போட்டவர்களுக்கே ஓட்டு  போட வேண்டிய அவசியம் இல்லை. அகக்கண்களை திறந்து அறம் போற்றும் தேசியம் காக்க முற்படும் கட்சிகளைத் தேர்ந்தெடுங்கள். யாருக்கு ஓட்டு போட விருப்பமில்லையேல் நோட்டாவுக்காகவது ஓட்டைப் போடுங்கள் 
மேலும் படிக்க:

Post a Comment

0 Comments