அஸ்டோன் டர்னர் இன் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஆஸ்திரேலியா அணி 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த ஆஸ்திரேலியா அணிக்கு புவனேஸ்வர் குமார் அதிர்ச்சி கொடுத்தார் . பின்ச்ஐ பௌல்ட ஆகி வெளியேற்றினார் . அடுத்து வந்த ஷான் மார்ஷ் 6 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பௌல்ட ஆக்க ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள்க்கு 2 விக்கெட்களை இழந்தது.

ஆஸ்திரேலியா அணியின் சரிவை தடுத்த ஜோடி

3 ஆம் விக்கெட்க்கு ஜோடி சேர்ந்த கவாஜா மற்றும் ஹன்ட்ஸ்கோம்ப் பொறுமையாக ஆடினர் . மேலும் விக்கெட் விழுந்தால் ஆஸ்திரேலியா அணி ஆபத்தில் சிக்கி கொள்ளும் என்ற நிலையை புரிந்து ஏதுவான பந்துகளை மட்டுமே அடித்து ஆடினார். இந்திய கேப்டன் எந்த பந்து வீச்சாளரை மாற்றி பார்த்தும் பயன் இல்லை. அவர்களின் இலக்கை அறிந்து அவர்களின் பணியை செவ்வென செய்தனர். முதலில் கவாஜா அரைசதம் கடக்க பின்பு ஹன்ட்ஸ்கோம்ப் அரைசதம் கடந்தார். இருவரும் அதன் பிறகு தங்களுடைய கியரை மாற்றி வெற்றி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறினர். கவாஜா 91 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த மாக்ஸ்வெல் அதிரடியாக 23 ரன்கள் குவித்து குலதீப் யாதவ் ஆல் வெளியேற்றப்பட்டார். அடுத்து அஸ்டோன் டர்னர் களம் புகுந்து அதிரடியில் மிரட்டினார்.

ஆஸ்திரேலியா அபார வெற்றி


ஒரு புறம் அஸ்டோன் டர்னர் இந்திய பந்து வீச்சாளர்களை நெய்ய புடைத்து எடுத்துகொண்டு இருந்தார். மறுபுறம் ஹண்ட்ஸ்காம்ப் சதம் விளாசினார். ஹன்ட்ஸ்கோம்ப் 117 ரன்கள் சேர்த்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் கே ல் ராகுல் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்து வந்த அலெக்ஸ் கேரி 21 ரன்கள் சேர்த்து பும்ரா வேகத்தில் வெளியேற ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைபட்டது. அதிரடியில் மிரட்டிய அஸ்டோன் டர்னர் கடைசி வரை களத்தில் நின்று ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற உதவினார். அஸ்டோன் டர்னர் 43 பந்துகளில் 84 ரன்கள் குவித்ததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்களும் குலதீப் , புவி மற்றும் சாஹல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இதனால் போட்டி 2 - 2 என்ற நிலையில் சமநிலையில் உள்ளது. ஆட்ட நாயகனாக அஸ்டோன் டர்னர் தேர்வு செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments