மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 வது ஒரு நாள் தொடரில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் 4 மாற்றங்கள் இருந்தன. தோனிக்கு பதிலாக ரிஷாப் பண்ட் , அம்பட்டி ராயுடுக்கு பதிலாக லோகேஷ் ராகுல் , ரவீந்தர ஜடேஜாக்கு பதிலாக யுஸ்வேந்தர் சாஹல் மற்றும் மொஹம்மது ஷமிக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் இடம் பெற்றனர். ஆஸ்திரேலியா அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. ஸ்டானிஸ் நீக்கப்பட்டு அஸ்டோன் டர்னர் மற்றும் நாதன் லயன் நீக்கப்பட்டு ஜேசன் பெஹரெண்டோரஃ இடம் பெற்றனர்.
இந்தியா முதல் விக்கேட்கு 193 ரன்கள் சேர்ப்பு
இந்திய அணியின் பேட்டிங்கை துவங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தங்கள் மீது ஏற்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்ககும் வகையில் இருவரும் ஆடினர். ஒரு புறம் ரோஹித் சர்மா ஆமை வேகத்தில் ஆட்டத்தை ஆட மறுபுறம் ஷிகர் தவான் அதிரடியில் மிரட்டினார். ஷிகர் தவான் அதிரடியாக ஆடியதால் ரன் ரேட் சீரான வேகத்தில் இருந்தது , மட்டுமின்றி ரோஹித் சர்மாவுக்கும் பந்துகளை விரயம் செய்யும் தலை வலி ஏற்படவில்லை. முதலில் ஷிகர் தவான் அரை சதம் கடக்க பின்பு ரோஹித் அரை சதம் கடந்தார். அரை சதம் அடித்த பின்பு தான் ரோஹித் சற்று அடித்து ஆட முற்பட்டார். மறுபுறம் ஷிகர் தன் வேகத்தை சற்று குறைத்தார். இருவரும் சதத்தை நெருங்கிய வேலையில் ரோஹித் 95 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து ஒன் டௌன் ஆக கே ல் ராகுல் களம் இறங்கினார். கே ல் ராகுல் பொறுமையாக ஆட மறுபுறம் தவான் வெடித்து சிதற ஆரம்பித்தார். அவர் சதம் கடந்து தனது அதிகபட்ச ரன்கள் ஆன 139 ரன்கள் கடந்து 143 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் கிளீன் பௌல்ட ஆகி வெளியேறினார். தவான் வெளியேறும் போது இந்திய அணி 38 ஓவர் முடிவில் 256 ரன்களுக்கு 2 விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது. அடுத்து வந்த விராட் கோலி 7 ரன்களுக்கு ஜே ரிச்சர்ட்சன் வேகத்தில் வெளியேறினார்.
இந்திய அணி 358 ரன்கள் குவித்தது
அடுத்து வந்த ரிஷாப் பண்ட் அதிரடியில் மிரட்ட கே ல் ராகுல் 26 ரன்களுக்கு ஜம்பா சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து சிறிது நேரத்தில் பண்ட் 36 ரன்களில் கம்மின்ஸ் வேகத்தில் வெளியேறினார். இந்திய அணி 46 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அடுத்து விஜய் சங்கர் ஜாதவுடன் இணைந்தார். ஜாதவ் 10 ரன்களுக்கும் புவனேஸ்வர் 1 ரன்னும் , விஜய் சங்கர் 26 ரன்களும் , சாஹல் டக் அவுட் ஆகி வெளியேறினர் . கடைசி பந்தில் பும்ரா 6 ரன் விளாசி இந்திய அணியை 358 ரன்கள் எடுக்க உதவினார்.
ஆஸ்திரேலியா அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்களும் , ஜே ரிச்சர்ட்சன் 3 விக்கெட்களும் , ஜம்பா 1 விக்கெட்டும் கைபற்றினர்.
0 Comments