ஐஏஎஸ் கனவை கொண்டவர்களா நீங்கள் உங்களுக்கான பதிவு இது, ஐஏஎஸ் தேர்வுக்கு படிக்கத் தேவையான தகுதிகளாக நம்மிடையே இருக்க வேண்டியது நேர மேலாண்மை, இலக்கை குறிப்பிட்ட காலத்தில் அடைய கால நேரத்தை திட்டமிட்டு படித்தல், திட்டமிட்டு படித்தல், ரிவிசன் செய்தல், முந்தய ஆண்டு தேர்வு கேள்விகளை ரிவிசன் செய்து படித்தல் போன்றவற்றை முறையாக சரியாக தொடர்சியாக செய்ய வேண்டும்.
ஐஏஎஸ் தேவை பொருத்தவரையில் நாம் வெற்றி பெறும் எண்ணம் கொண்டவர்கள் எனில் முதலில் யூபிஎஸ்சி தேர்வின் அனைத்து படிகளையும் அறிந்து கொள்ள வேண்டும். அதைவிட நம்முடைய அடிப்படை சூழல்கள், தகுதிகள், பிராக்டிக்கல் டிஃபிகல்டி எல்லாம் ஆராய்ந்து களத்தில் இறங்குதல் அவசியம் ஆகும்.
டைம் பிக்சிங்:
குடும்பம் மற்றும் உங்களது வேலை போன்றவற்றை அறிந்து உங்கள் வெற்றிக்கான காலகட்டத்தை நிர்ணயித்துப் படியுங்கள். குறிப்பிட்ட கால வரை உங்களுடைய முழு நேரமும் ஐஏஎஸ் தேர்வுக்கு முதலீடு செய்கின்றீர்கள் எனில் அந்த காலகட்டத்தை முறையாக சரியாக, விழிப்ப்புணர்வுடன் அந்த தேர்வுக்காக அந்த குறிப்பிட்ட தேர்வை வெல்ல மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் நீங்கள் ஐஏஎஸ் தேர்வை வெல்ல ஒதுக்கிய காலத்திற்குள் வென்றிருக்க வேண்டும்.
எக்காரணத்தைக் கொண்டும் திட்டமிட்ட நேரத்தை மீறி அதிக காலத்தை ஐஏஎஸ் கனவிலே மூழ்கி நேரத்தை வீணடிக்காதீர்கள். இது உங்களை பயப்படுத்த தெரிவிக்கவில்லை பயத்துடன் கூடிய எச்சரிக்கையை உங்களுக்கு உணர்த்த முயல்கின்றோம்.
உங்கள் தகுதி:
ஐஏஎஸ் தேர்வை வெல்வதற்கு உங்களிடம் இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதி நேர மேலாண்மை, ஒதுக்கிய நேரத்தை சரியாகப் பயன்படுத்துதல், குடும்பச் சூழல், ஐஏஎஸ் தேர்வுக்கு நீங்கள் படிக்கச் செலவிடும் காலம் வரை உங்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டிய பணத் தேவை ஆகியவை உங்களிடம் போதுமானதாக இருக்கின்றதா என்பதைப் பார்த்து களத்தில் இறங்குகள்.
இதெல்லாம் ஒரு தகுதியா எனில் ஆம் நாம் படிப்பது ஒரு பக்கம், நமது திறன்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் நம்மைச் சுற்றியுள்ள சூழல்களை சரிப்பார்த்து அதற்கு தகுந்தால் போல் திட்டமிட்டு படிக்க களத்தில் இறங்க வேண்டியது அவசியம் ஆகும்.
குடும்பச் சூழல் மற்றும் எதிர்பாரத் சூழல்கள் மாறினால் என்ன செய்வது, பெற்றோர்கள் நமக்கு கொடுக்கும் நேரம் காலம் அதற்கடுத்த நாம் வேலைக்குச் சென்று படிக்க வேண்டுமா அல்லது எதிர்ப்பாரதா உடல் நலக்குறைவு போன்றவை ஏற்பட்டால் என்ன செய்யலாம். வேலைக்குப் போக வேண்டுமெனில் மீதம் எவ்வளவு நேரம் கிடைக்கும் அதனை எப்படி படிப்புக்கு பயன்படுத்தலாம் இவை அனைத்தும் திட்டமிட்டு ஆலோசித்துப் சரியான முறையான விடை கிடைத்தப் பின்பு ஐஏஎஸ் படிக்க களத்தில் இறங்குகள்.
நீங்கள் கல்லூரி படிக்கும் ஐஏஎஸ் கனவு கொண்ட மாணவர்கள் எனில் எந்த ஆண்டாக இருந்தாலும் பராவாயில்லை அடிப்படை செய்திதாள்களான தி இந்து, தினமணி, தி எக்காமிக்ஸ் டைம்ஸ், மற்றும் அரசின் வெளியீடான ஆண்டுமலர் புத்தகம் ஒன்று வாங்கி படிக்கத் தொடங்குங்கள் அத்துடன் அரசின் இதழ்களான ரூபாய் 10 மதிப்பு கொண்ட குரு சேஷத்திரா அத்துடன் யோஜ்னா இரண்டையும் படிக்கத் தொடங்கி விடுங்கள். இவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். தமிழில் திட்டம் என்ற ரூபாய் 10 மதிப்புள்ள புத்தகம் வாங்கி படியுங்கள் யோஜ்னா, குரு சேத்திராவில் உள்ள தலைப்புகளை படிக்கத் தொடங்குகள், இவை உங்களை கல்லூரி படிப்பு முடித்ததும், ஐஏஎஸ் தேர்வில் உங்களை ஒன்று அல்லது இரண்டு அட்டமிட்டில் ஐஏஎஸ் தேர்வை ஜெயிக்க வைக்கும்.
மொழித்திறன்:
நீங்கள் தமிழில் சிறப்பு திறன் பெற்றிருக்கின்றீர்கள் தமிழில் புலமை கொண்டுள்ளீர்கள் ஆங்கிலத்தை விட தமிழில் இன்னும் சிறப்பாகச் செயலாற்றுகிறீர்கள் எனில் நல்லது. இருப்பினும் ஆங்கில அடிப்படை அறிவு அறிதல் அவசியம் அந்த அடிப்படையுடன் ஆங்கிலத்தில் புரிதல், எழுதுதல் போன்றவை முக்கியமானது ஆகும். ஆங்கில அறிவு என்பது புலமையைப் பற்றி நான் கூறவில்லை பேசுவதை புரிதலும், புரிந்ததை எழுதவும் தெரிந்தால் போதும் தயங்கி தயங்கி பேசினாலும் பரவாயில்லை அடிப்படையாக பேசவும் எழுதவும் தெரிந்தால் போதும் யூபிஎஸ்சி தேர்வுக்கு நீங்கள் தயாராகும் போது மீதம் உள்ள ஆங்கிலப் புலமையும் தானாகவே வந்தடையும்.
மொழிப்பாடத்தில் திறன் குறைவு எனில் பாதகமில்லை அதற்காக சரியான முறையாக முக்கியத்துவம் கொடுத்து கல்லூரிக் காலம் முதல் கற்றுக் கொள்ளுங்கள். கற்கும் பொழுது எல்லாம் புலப்படும்.
தேவையற்ற தயக்கம், வெட்கம், தாழ்வு மனப்பான்மையை விடுங்கள் தேர்வுக்கு தயாராக அடிப்படை முதல் படிக்கத் தொடங்குகள். ஏனெனில் பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். அதனை என்னதான் புரிந்தாலும் அதனை அடிப்படை ஆங்கிலத்தில் எழுத தெரிய வேண்டியது அவசியம். மொழி அறிவு குறைவு எனில் தேர்வை வெல்ல கால தாமதம் ஏற்படும். ஆங்கில அறிவு குறைவு என்பதால் காலதாமதம் கூறவில்லை அனைத்துப் பாடங்களும் புரிய நேரம் எடுக்கும் மேலும் திட்டமிட்ட காலத்தில் எதனையும் முடிக்க முடியாமல் திணறுவீர்கள் பயம் ஆட்கொள்ளும். இவையெல்லாம் எதிர்மறை சிந்தனைகளை உண்டாக்கும்.
தேர்வு எழுத அடிப்படைத் தகுதியாக டிகிரி முடித்திருக்க வேண்டும் என்பது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ஐஏஎஸ் கனவு தேர்வை வெல்ல நம்முன் உள்ள பிராக்டிகல் திறன்கள் என்னென்ன மேலும் தேர்வை வெல்ல இருக்க வேண்டிய அடிப்படை அம்சங்கள் எவையெவை என சிந்தித்து, ஆராய்ந்து அவரவர் தகுதிகளை எடைப் போட்டு படிக்கத் தொடங்க வேண்டும்.
நமது அடிப்படைத் தகுதிகள், ஐஏஎஸ் தேர்வை வெல்ல வேண்டிய அடிப்படைத் தகுதிகள் எதுவென திட்டமிட்டலுடன், உங்கள் குடும்பச் சூழல் பொருளாதார வசதி குறைவு எனில் குடும்ப்பத்தால் எவ்வளவு உங்களுக்கு உதவ முடியும் நீங்கள் என்ன செய்தால் உங்கள் படிப்பைத் தொடர்ந்து இலக்கை அடைய முடியும். சுயப் படிப்பா அல்லது பயிற்சி தளத்தில் படிக்கனுமா அதற்கான செலவு, புத்தக செலவு, ஊர்விட்டு ஊர் மாறி சென்றால் அதற்கான தங்கும் செலவு, எதிர்பாராமல் ஏற்பட போகும் உடல் நலச் செலவு, உங்களுக்கு உதவுவதால் குடும்பத்தில் ஏற்பட போகும் மாற்றங்கள் அனைத்தும் ஆலோசித்து அதற்கான விடை தெரிந்த பின் களத்தில் இறங்குகள்.
காலம் பொன்போன்றது கடமை கண் போன்றது, சுற்றியுள்ள சூழல்கள் நம்மை சுருட்டி வீசும் முன்பு நாம் இவையெல்லாம் சமாளிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். நாம் மேலே கூறிய அனைத்தும் ஐஏஎஸ் தேர்வர்களின் வெற்றி சூழலை பாதித்த காரணிகள் அவையெவையும் அடுத்தவரும் எவரையும் பாதிக்க கூடாது என்று எண்ணியே பிராக்ட்டிக்கல் டிஃபிக்கல்டியை நான் எடுத்து கூற வேண்டிய அவசியம் கருதி கூறுகின்றேன்.
மேலே கூறியவற்றில் ஏதேனும் மாறுக்கருத்து இருப்பின், அல்லது ஏதேனும் முரண்பாடு இருப்பின் கீழே கமெண்ட் பாக்சில் உங்கள் கருத்தை கொடுக்கலாம். நிச்சயம் அதற்க்கான விடையை அடுத்தப் பதிவில் தருகின்றேன்.
இன்னும் தொடர்ந்து அறிவோம்...
மேலும் படிக்க:
2 Comments
தமிழ் புலமை அதிகம் இருந்தும் ஆங்கிலத்தில் புலமை இல்லையென்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும், IAS தேர்வில் தேர்ச்சி பெற வழிமுறைகள் இருந்தால் அதையும் கூறுங்கள்
ReplyDeleteஅனைத்து வழிமுறைகளும் தெரிவிக்கின்றேன்
Delete