யூபிஎஸ்சியின் ஐஏஎஸ் கனவு நிறைவேற!...

ஐஏஎஸ் கனவு கொண்டவர்களுக்காக சிலேட்குச்சி தகவல்கள் மற்றும் தலைப்புகளை கொடுக்கவுள்ளது தொடர்ந்து படியுங்க

ஐஏஎஸ் கனவு கொண்டவரா நீங்கள், வாங்க ஐஏஎஸ் கிரேஸ் குறித்து  தெரிந்து  கொள்வோம். இந்தியாவைப் பொருத்தவரை ஐஏஎஸ் கிரேஸ் இல்லாத ஆட்கள் அரிது, படிக்கிறார்ளோ இல்லையோ, ஆனால் அது குறித்து  சினிமா படங்களில் நாம்  நிறைய பார்த்து இருப்போம்.

ஐஏஎஸ் கனவுக்கு அடிப்படையாக நாம் என்ன செய்ய வேண்டியது  நேர மேலாண்மை மற்றும் முடிவெடுத்தலில் தெளிவு, கால நேரம்  ஆகியவற்றை இலக்கு நிர்ணயித்து  நாம் கொண்டு செயல் பட வேண்டும்.

இலக்கை நிர்ணயித்தால் உயிர் போனாலும் பரவாயில்லை ஆனால்  நிர்ணயித்த இலக்கை நாம் அடைய வேண்டிய  பயணத்தை நாம் கொண்டு செல்ல வேண்டும். 

ஐஏஎஸ் தேர்வானது நாடு  முழுவதுமுள்ள  தேர்வாளர்களுக்கான நடத்தப்படும் தேர்வாகும். முதன்நிலை, முக்கிய மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 



ஐஏஎஸ் போட்டி தேர்வில் முதன்நிலை தேர்வானது பொது அறிவு மற்றும் ஆப்ஸ் என்ற இருதாள்களை கொண்டது. 

முதல்நிலை தேர்வில் இரண்டு தாள்கள் ஒரே நாளில்  காலை, மதியம் என இரண்டு வேளை நடக்கும். 

முதல் தாள் காலை  10 மணிக்கு தொடக்கி  2 மணி நேரம் நடைபெறும். இரண்டாம் தாள் மதியம் 2 மணிக்கு  தொடங்கி   4 மணி வரை நடைபெறும். 

யூபிஎஸ்சி என அழைக்கப்படும்  யூனியன்  பப்ளிக் சர்வீஸ் கமிஸன் நடத்தும் இந்த தேர்வானது ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ்  உள்ளிட்ட 22  பதவிகளுக்கு தர வரிசை அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். 

முதன்நிலை தேர்வில் வெற்றி பெற்று முக்கிய தேர்வில்  தேர்ச்சி பெறவில்லையெனில் மீண்டும் முதன்நிலை என அழைக்கப்படும் பிரிலிம்ஸிலிருந்து அடுத்த ஆண்டுதான் எழுத முடியும். அதற்குதான்  நேர மேலாண்மை கால இலக்கு வைத்து செயல்பட வேண்டும். 

இன்னும் பல குறிப்புகள் தகவல்கள் தொடர்ந்து பதிவிடுகின்றோம். படியுங்க

Post a Comment

0 Comments