இந்திய விமானப்படையின் வெற்றிக்கு முழு காரணம் வீரமரணம் அடைந்த வீரர்களுக்காகவே இந்த சாகசமானது நிறைவேற்றப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பயன்படுத்திய நூற்றுக்கணக்கான கிலோக்களின் குண்டுகள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்து செய்திகள் கதைகள் முன்னப்பின்ன வருகின்றன அது மேலும் நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்களை உண்டு செய்து வருகின்றது.
விலைமதிப்பற்ற 40 மேற்பட்ட வீரர்களின் உயிர்களின் விலைக்கு முன்பு இந்தியா செலவிட்ட தொகைகள் எல்லாம் பெரிதல்ல அதற்காகவே நாம் பெருமைப்பட வேண்டும். இது போன்ற தைரியமான முடிவை காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்டிருந்தால் இந்த முடிவு எடுத்திருக்குமா என்று அதன் கடந்தகால வரலாற்றுப் பக்கங்களை புரட்டி பாருங்கள் புரியும்.
இந்தியா பயன்படுத்திய மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் செவ்வாய் காலை 3.30க்கு தொடங்கி அடித்தது சுமார் 90 நிமிடத்தில் சரமாரியாக முடித்து தள்ளியது இந்திய விமானப்படை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
பயங்கரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நாட்டுக்காக வீரமரணம் அடைந்த வீரகளின் உயிர்க்காக 2 கோடியென்ன ஆயிரம் பேர் கூட களத்தில் இறக்கி சண்டைப் போடலாம். அப்பொழுதுதான் இந்தியா என்றால் என்ன, அது அமைதியான நாடு எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க சார்,, என்று பேசிய நாடுகளுக்கு எல்லாம் புரியும். நேற்று முதல் நம்மை சுத்தியுள்ள நாடுகள் எல்லாம் கதிகலங்கியிருக்கும்.
இதிலிருந்து சீனாவுக்கு இந்தியா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ள, பேச்சு பேச்சா இருக்கனும், கோட்டை தாண்டி வராத என்று மறைமுகமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments