முதலுதவி செய்ய அடிப்படை விழிப்புணர்வு குறிப்புகள்!

பள்ளி, கல்லூரிகள், தொழில்  அமைப்புகள், கண்காட்சிப் பகுதிகள் மக்கள் கூடும் பொது இடங்கள் மற்றும் ஊடகங்களில் முதலுதவி எவ்வாறு செய்ய வேண்டும். என அடிப்படை விழிப்புணர்வு அனைவரும் அறியும் வண்ணம் கொடுக்க வேண்டும்.  இதனை செயல்படுத்துவதன் மூலம் உயிர்காக்கும் செயலை எளிதாக்கலாம். இதுகுறித்து சிலேட் குச்சி விளிப்புணர்வு மக்கள் பெற இங்கு தினசரி தொகுத்து கொடுக்கும்.

பயிற்சி பெற்று எந்தநேரமும் தயார் நிலையிருத்தல் முக்கியம் ஆகும். செயல் திறனை கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும். முதலுதவி பெட்டியை  பொருத்துவரை உபகரணங்களிலோ தங்கியிருக்காமல் செயல்பாட்டில்வைக்க வேண்டும். 

அமைதியாகவும் நிலையை முழுமையாகவும்  செயலபடுத்துதல் மூலம் எவ்வாறு  சிறந்த முறையில் செய்யலாமென தீர்மானிக்க உதவியாக இருக்க முடியும். 



அவசரகால நிலைமையின்போது தலைமைத்துவத்துடன் செயல்படுவது சிறப்பு ஆகும். 

முதலுதவி செய்யும்பொழுது மக்கள் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

காயம்பட்டவரை  தேவையின்றி அசைக்ககூடாது காயங்கள் ஏற்படா வண்ணம் செயல்பட வேண்டும். 

உடனடி செயல்பாடு:

முதலுதவி  உடனடியாக தேவைப்படுவோர்கள் குறித்து கிழே அறியலாம்.

சுவாசம் நின்றுவிட்டால்
அதிகளவு இரத்தம்  வெளியேறுபொழுது 
சுயநினைவற்ற மயக்க நிலையில் ஏற்பட்டால் 
உடலில் நஞ்சு கலந்துவிட்டால் 

சுய நினைவில்லாதவர்களுக்கு உணவோ பானமோ கொடுக்ககூட்டாது. 

காயம்பட்டவருக்கு முதல் உதவி செய்யும்பொழுது ஆம்புலன்சை அழைத்தல் மற்றும் அடிப்பட்டவரின் முகவரி அறிந்து தகவல்கள் கொடுத்தல்
அவ்வாறே விபத்தில் அடிப்பட்டவரை நனையாமல் குளிராமல் போத்தி பாதுக்காக்க வேண்டும், 
சுடுதண்ணீர் கொண்டு ஒத்தபம் கொடுத்து வெப்ப மூட்டுவதை தடுக்க வேண்டும். 

காயம்பட்டவருக்கு தொற்று ஏற்படாமல் இருக்க காயங்களை மூடி வைக்க வேண்டும்.  காயம்படட் உறுப்பினை அசைக்க கூடாது. 


மேலும் படிக்க:

உயிர்காக்கும் சேவையில் முதலுதவி!

Post a Comment

0 Comments