தங்கங்களே முதலுதவி என்பது உயிர் காக்கும் சேவையாகும் இது குறித்து அனைவரும் அறிந்து பாதுகாத்தல் மிகச் சிறந்த மனித உதவியாகும். இதனை முழுமையாக உள்வாங்கி படித்து உங்கள் நட்புகளுடன் பகிருங்கள்.
தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகும்.
மூச்சுதிணரல்:
மூச்சு திணரலால் பாதிக்கப்படட் நபர் இருமினால் உடனடியாக ஆபத்திலை ஆனால் தொண்டையில் ஏதாவது பொருள் அடைந்திருந்தால் உடல் நீலம்நிறமாக மாறும் அவரால் பேச முடியாத நிலை உருவாகும்.
அவரிடம் மூச்சுவிடக் கடினமாக இருக்கின்றதா என கேட்டு, பேச முடியவில்லை என்றாலும் தலை அசைத்து பதிலுரைப்பார். மாரடைப்பு ஏற்பட்டாலும் இதே அறிகுறிகள் இருக்கும் ஆனால் அவரால் பேச முடியும். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
மயக்கம்:
மயக்காமான நிலையை ஒருவர் தலை லேசாகி சுற்றுவது போலிருந்தால், சோர்வு வாந்தி தோல் வெளுத்து காணப்படுவது மயக்கம் வருவதற்கான அறிகுறியாகும்.
மயக்கம் வருவதை தவிர்க்க முன்புறமாக சாய வேண்டும்.முழங்காலுக்கு கிழே தலையை சாய்த்து கொள்ள வேண்டும்.
இதயத்தை விட கீழே இருக்கும் பொழுது மூளைக்கு அதிக இரத்தம் கிடைக்கின்றது. அதையும் மீறி நினைவிழந்து ஒருவர் காணப்பட்டார் எனில் தலையை விட கால் பகுதி உயர்ந்திருக்கும் நிலையில் படுக்க வைக்கவும் உடைகளை தளர்த்தி ஈரத் துணிகளை முகம் மற்றும் கழுத்தில் போடவும் இதன் மூலம் சுய நினைவு இதன் மூலம் சுயநினைவு திரும்பினால் உடனே மருத்துவரைப் பார்க்கவும்.
வலிப்பு:
வலிப்பு ஏற்படட் ஒருவருக்கு கை கால் வெட்டி வெட்டி இழுக்கும் உடல் நிலமானால் ஆபத்து நாக்கில் எச்சில் பெருகும் நாகை கடித்துக் கொள்ளும் அபாயம் உண்டு,
சுற்றியுள்ள ஆபத்தான எல்லாப் பொருட்களையும் அப்புறப் ப்டுத்த வேண்டும். தலைக்கு தலையணை போன்று எதாவது வைக்கவும், பாதிக்கப்பட்ட்வருக்கும் எந்த திரவத்தையும் கொடுக்ககூடாது.
மூச்சிழந்தால் சுவாசக் குழாயில் தடையிருக்கிறதா எனப் பார்க்கவும் காற்றோட்டம் செய்யவும் பதற்றப் படாமல் இருக்கவும். முடிந்தவரை உடனே
மருத்துவரிடம் கொண்டு செல்லவும்.
விஷம் அருந்தியிருந்தால் :
மருத்துவரை அழைக்கவும் என்ன விஷம் குடிக்கக் கொடுக்காதீர்கள் மருத்துவர் ஆலோசனையின்றி வாந்தி வைக்காதீர்கள் பாதிக்கப்படட்வர் தானாக வாந்தி எடுத்தால் சுவாசம் தடைபடாமல் பார்த்துக் கொள்ளவும்.
கார்பன் மோனாக்சைடு காரணமாக பாதிக்கப்பட்டால் நோயாளிக்கு உடனே சுத்தமான காற்று கிடைக்கச் செய்யவும்.
நெருப்பும் காயம்:
நெருப்புக் காயம் பட்டவுடன் குறிர்ந்த நீரில் நனைக்கவும். தொற்று ஏற்படாமல்
பார்த்துக் கொள்ளவும் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் மிக ஆழமான நெருப்புக் காயங்களுக்கு குளிர்ந்த தண்ணீர் ஆப்பத்தாகிவிடும்
அப்படி செய்தால் பாதிக்கப்பட்டவருக்கு அதிர்ச்சி உண்டாகும்.
மேலும் படிக்க:
0 Comments