போட்டி தேர்வுக்குள் இருக்கும் போட்டா போட்டிக்கேற்ப படியுங்கள்!..

டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி  போன்ற தேர்வுகளில் நீங்கள் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கான தேர்வுக்கால குறிப்புகள் கொடுத்துள்ளோம் அதனை   பின்பற்றி  விவரங்களை தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் தெரிந்து கொள்ளுங்கள்.தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு பகிருங்கள். 

போட்டித் தேர்வு நேரத்தில் தேர்வுக்கு படிக்கும் நேரத்தை மேலாண்மை செய்வது எவ்வளவு முக்கியமோ,  அவ்வாறே திட்டமிட்டு பாடங்களை படிக்க வேண்டியது அவசியம் ஆகும். 


எந்த பாடத்தில் இருந்து முக்கியமான கேள்விகள் வரும் என்ற கணிப்பு தெரிந்து வைத்து படியுங்கள், எல்லா பாடமும் படியுங்கள் ஆனால் எல்லா பாடத்திலும் வரும் கேள்விகளைவிட சில குறிப்பிட்ட பாடங்களில் இருந்து மட்டும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து கேள்விகள் கேட்கப்படும். அதனை தேர்வர்கள் முக்கியமாக அறிந்திருக்க வேண்டும். 

ஒரு பாடத்தில் எந்தப் பகுதி முக்கியம் என்பதை  தெரிந்திருக்க வேண்டுமே அதற்கு,  முந்தய ஆண்டு கேள்விகள் நன்றாக தரவாக விரல் நுணியில்  வைத்திருக்க வேண்டும். முந்தய ஆண்டுகளின் கேட்கப்பட்ட தேர்வுகளின்  படிக்க வேண்டும். முந்தய ஆண்டு வினா-வங்கி புத்தகத்தை கையில் வைத்து செயல்பட வேண்டியது அவசியம். போட்டி தேர்வுக்கு மிக முக்கிய அத்தியாவசியமானது ஆகும். 

போட்டி தேர்வு இன்றைய காலகட்டத்தில் அதிக அளவில் போட்டிகள் நிறைந்து   காணப்படுகின்றன.  போட்டிகளுக்கு ஏற்ப  ஸ்மார்ட் ஆக  படிக்க வேண்டியது அவசியம் ஆகும். 

பாடங்களின் முக்கியத்துவத்துடன் படித்ததும், ரிவிசன் மற்றும் டெஸ்ட் பேட்ச் போன்றவற்றுடன் படித்தவற்றை நினைவில் வைத்து கொள்ளவும்.  படித்தவை நினைவில் இருக்கும் நிச்சயம் இருக்கும் படித்தவை நினைவில் இல்லை என்றால் நீங்கள் படிக்கும் பாடத்தில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது காரணம் ஆகும். ஆகவே தேர்வர்கள் எதைப் படித்தாலும் கவனமுடன் இருந்து முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள் தேர்வை வெல்லுங்கள். 


மேலும் படிக்க:

திட்டமிடுதல் ரிவிசன் செய்தல் போன்றவை தேர்வை வெல்ல வைக்கும்!

Post a Comment

0 Comments