சமூக வலைதளங்களினால் சரிந்து போகுமா இந்திய கட்டமைப்பு. கண் பார்த்து பேச அஞ்சிய கட்டமைப்பு கொண்ட தேசம். விழிகளின் வீர்யத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறை இன்று வீணாகி கொண்டிருக்கின்றது.
கட்டுக்கடங்காத சுதந்திரத்தின் காரணமாக கடிவாளமில்லாமல் சமுதாயம் தவிக்கின்றது. இன்றைய இணைய உலகில் எல்லாம் இலவசம் எதுவும் செய்யலாம் என்பதால், பயம், பொறுப்புணர்வு என்ற உணர்வு 90% சதவீகித இளைஞர்களிடையே இருப்பதில்லை.
ஸ்மார்ட் போன்களின் வரவு நாளைய சமுதாயத்திற்கு சாபகேடாக இருக்கின்றது என்பது உண்மை.
பிறப்பிலிருந்து இறப்பு வரை சமுதாயத்தில் ஒவ்வொரு நிகழ்வையும் கொண்டாடத்துவங்கும் நம்மிடையே, நவீன காலமாற்றம் சார்ந்த இருக்க வேண்டிய விழிப்புணர்வு என்பது இருப்பதில்லை.
ஆண், பெண் இருவரும் இன்றைய காலகட்டத்தில் நீயா நானா எனும் அளவில் போட்டி போட்டுக் கொண்டு ஆப்களை பயன்படுத்தி வீணாகிப் போகும் அளவிற்கு சமூகப் போக்கு தரிகெட்டு ஓடுகின்றது.
விழிப்புணர்வு அவசியம்:
பெற்றோர்கள், பிள்ளைகள் என அனைவருக்கும் இந்தியாவில் முதல் தேவையானது விழிப்புணர்வு அது சரியாக கிடைக்க வேண்டும். எந்த அளவிற்கு மொபைல் போனினை பாதுகாப்பாக பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு அது நன்மை பயக்கும்.
பள்ளி மாணவர்களுக்கு தேவையானதை செய்கின்றனவோ இல்லையோ ஆனால் தேவையில்லாத வசதிகளை கொடுக்கத் தயாராகின்றனர். இது நவீனயுகத்தின் டிரெண்டாக இருக்கின்றது.
இன்றைய இணையப் பயன்பாடானது ஆபாசமும், அராஜகமும், அமைதியைக் குலைக்கும் ஆயுதமாக இருக்கின்றது என்பதை நாம் நிச்சயம் உணர வேண்டும்.
பள்ளியிலும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சந்திப்பைவிட தற்கால கட்டத்தில் வாட்சப் குழு பயன்படுத்துகின்றனர். நேரில் சந்தித்து குறைகளை கேட்டு சரிசெய்து கொண்டிருந்த பெற்றோர்க்கு இது இன்னும் வசதியாகப் போச்சு ஆனால், இதன் பயன்பாடு இன்றைய பிள்ளைகளிடம் பெருகி வருவதற்கு பள்ளியும் பெற்றோரும் காரணமாகின்றனர் இதனை உணர வேண்டும்.
தேசியத்தை யாரோ தங்களது வர்த்தக தீனிக்காக பின்னிருந்து இயக்கி இந்திய மூலைகளை மறைமுகமாக மழுங்கச் செய்கின்றனர். நாட்டில் உண்மைகளை எடுத்து சொல்ல வேண்டிய ஊடகமும் உதவாக்கரையாக இருக்கின்றது.
நல்லது அல்லது எது எனறு சரிப்பார்த்து செய்ய வேண்டிய அரசும் இன்று செய்வதரியாது திகைத்து நிற்கின்றது. பொழுதை போக்க பயன்படுத்தப்படும் பல ஆப்கள் நம் வாழ்வுக்கு ஆப்பு வைப்பவையாக இருக்கின்றன.
திறமைகளை வெளிப்படுத்தும் தளங்கள் என அறியப்படும் பல களங்கள் பிள்ளைகளை வளப்படுத்தப்பவையாக இருக்க வேண்டும். மேலும் சரியான காலகட்டத்தில் எல்லாம் அமைகின்றதா என்பதை சரிபார்த்து செய்ய வேண்டிய பொருப்பில் நாம் இருக்கின்றோம்.

சமூக ஊடகங்களின் தாக்கம் மாணவர்கள் மற்றும் பலரின் வாழ்க்கையைப் பதம் பார்த்து கொண்டிருக்கின்றது. இதனை நாம் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.
மேலும் படிக்க:
மேலும் படிக்க:
0 Comments