பள்ளி மாணவர்களுக்கான தேர்வு காலம் நெருங்கி கொண்டிருக்கின்றது. பொதுத் தேர்வு நேரத்தில் தேர்வுக்கு தேவையான நேர மேலாண்மை மற்றும் உடல் மற்றும் உளவியல் ரீதியாக பலப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுகளை பக்கமலமக சிலேட் குச்சி வழிநடத்தும்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லேயே
மார்ச் மாதங்கள் தேர்வு தொடங்கும் காலம் விருவிருவெனப் படிக்க வேண்டிய காலகட்டம். அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் சற்று நெருக்கடியான தருணமாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கான இருக்க வேண்டிய ஒரு நோக்கம் மதிபெண் வேட்டை. தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை எரித்துவிட்டு எவ்வளவு டாப்பர் மார்க் எடுக்கலாம் என்ற திட்டத்துடன் செயல்படுங்க மாணவர்களே.
நேரம், மனம், உடல், சுற்றுச்சூழல் போன்ற அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என மனஉறுதியுடன் படிங்க நீங்கதான் அடுத்த டாப்பர் ரேங் ஹோல்டர் என்ற வெறித்தனமானப் படிப்பு இருக்க வேண்டும்.
திட்டமிட்டு படிக்க வேண்டும். போட்டு வைத்த திட்டத்தை சரியாக செயல்படுத்த வேண்டியது நீங்கள்தான். வெற்றியின் பக்கத்திலே இருந்தால் போதாது வெற்றியை எவ்வளவு மதிபெண்ணில் பெறுகிறிர்கள் என்பது அவசியமான ஒன்றாகும்.
நீட் தேர்வு மற்ற நுழைவு தேர்வுக்கு படிக்கும் மாணவர்களே உங்களுக்கான காலக்கட்டம் இந்த தேர்வு காலம்தான் சிறப்பாக படியுங்கள்.
படிக்கும் நேரத்தில் இடையிடையே ஓய்வு எடுக்கவும். தேர்வு காலத்தில் உணவு, உடல் பயிற்சி, மனப் பயிற்சி ஆகியவற்றை செய்ய வேண்டியது அவசியமாகும்.
உங்களிடத்தில் எப்பொழுதும் அக்னி வெற்றி அக்னி பொறி தொடர்ந்து எரிய வேண்டும், அது உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.
கஜாப்புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களே உங்களுக்கான சோதனை காலம் இது ஆனாலும் உங்களால் நிச்சயம் சாதனைப் படைக்க முடியும். சரியாக திட்டமிட்டு படியுங்கள் வேதனையை எல்லாம் ஒன்று சேர்த்து உறுதியாக உழைத்தால் நிச்சயம் உழைப்பிற்கேற்ற ஊதியம் நீங்கள் எதிர்ப்பார்க்காமலே கிடைக்கும்.
பொழுதுபோக்கில் கவனச்சிதறல்கள் உண்டாகும் அதனை எல்லாம் தேர்வு காலம் முடியும் முடக்கி வையுங்க்ள். உங்களை முடக்க உலகத்தில் யாராலும் முடியாது என்ற வேட்கை ஒன்று உங்களிடம் இருந்தால் அது போதுமானது உங்கள் வெற்றியை உறுதி செய்யும்.
உயர்நிலை வகுப்பு பாடங்கள் படிக்கும் நீங்கள் அவற்றை உங்கள் வாழ்விற்கான பாடமாக உங்களை அடுத்த நிலைக்கு அழைத்து செல்லும் பாடமாக நினைத்துப் படியுங்கள், சலிப்பு வராது சாதிக்கும் வெறி வரும்.
சகமாணக்கர்களுடன் நட்பு பாராட்டி ஒருவருக்கொருவர் ஊக்குவித்துப் படியுங்கள் நிச்சயம் வெல்வது உறுதி.
நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடுங்கள் மாணவர்களே
நேரம் இது தேர்வு நேரம் இது காத்திருந்த காலம் இது,
கடமையை ஆற்றுங்கள் காலத்தைப் போற்றிப் பயன்படுத்துங்கள்
பொதுத் தேர்வினை வெல்லுங்கள்
0 Comments