போட்டி தேர்வுக்கான மொழிப்பாட ஹைலைட்ஸ் பகுதி 2!

ஒற்றளபெடை:
ஓசை குறையும் போது  ஒற்றெழுத்துக்கள் அளபெடுப்பது

ஒற்றளபெடையில்  மெல்லின எழுத்துக்கள் ஆறும், இடையின எழுத்துக்கள் நாலும் (ர்,ழ், தவிர) ஆய்த எழுத்து ஒன்று என பதினோறு எழுத்துக்கள் அளபெடுக்கும்.

வல்லின எழுத்துக்கள் ஆறும் க், ச், ட், த், ப், ற் மற்றும் இடையின எழுத்துக்களில் இரண்டும் (ர், ழ்) என எட்டு 8 எழுத்துக்கள் ஒற்றளபெடையில் அளபெடுக்காது.

ஒற்றளபெடை- 1 மத்திரை அளவைப் பெறும்.

குற்றியலுகரம்:
ல்+ஊ+ குறைந்து ஒலிக்கும் உகரம்
குற்றியலுகரம்= குறுமை+இயல்+ உகரம்

"உ"ஆனது தன்னுடைய ஒரு மாத்திரைய்லிருந்து அரை  மாத்திரையாக குறைந்தொலிப்பது குற்றியலுகரம்.

குற்றியலுகரத்தின் மாத்திரை அளவு 1/2 மாத்திரை அளவு ஆகும்.

சொற்களின் இறுதியில் ஆறு வல்லின மெய் எழுத்துக்கள் 'உ' கரத்துடன் சேர்ந்துவரும் போது குறைந்து ஒலிப்பது ஆகும்.

கு (க்+உ), சு (ச்+உ), டு(ட்+உ) து (த்+உ), பு(ப்+உ), று (ற்+உ)

குற்றியலுகரம் 6 வகைப்படும்:

 நெடில் தொடர்க்   குற்றியலுகரம்,

உயிர் தொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
வன் தொடர்க் குற்றியலுகரம்
மென் தொடர்க் குற்றியலுகரம்
இடைத் தொடர் குற்றியலுகரம்




நெடி தொடர்க்குற்றியலுகரம்:

ஊயிர்நெடில், உயிர்மெய் நெட்டெழுத்துக்களை அடுத்து வரும் கு,சு,டு,து, பு, று

இரண்டே எழுத்துக்களைப் பெற்று வரும்.

எ.கா:- ஆடு, காடு, மாது, கோபு, ஆறு, நாகு, காசு, சோறு, ஏது, கோடு

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்:

ஆய்த எழுத்துக்களைத் தொடர்ந்து  கு, சு, டு, து, பு, று

எஃகு, அஃது, இஃது, கஃசு

உயிர்தொடர்க்குற்றியலுகரம்:
உயிர் எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் க, சு, டு, து, பு, று,

எ.கா: அழகு, அரசு, பண்பாடு, உனது, உருபு,  பாலாறு, தேனாறு, வலது, இடது,

ழ்+அ=ழ், ப்+ஆ=பா, ன்+அ=ன, ர்+உ=ரு

வன்தொடர்க் குற்றியலுகரம்:
வல்லின மெய்களைத் தொடர்ந்து  வரும் கு, சு, சு, டு, து, பு, று,

எ.கா: சுக்கு, எட்டு, பத்து, துட்டு,  பட்டு, கச்சு, பப்பு, குப்பு, குப்பு, அப்பு, தற்று,
பெற்று 

மென்தொடர்க் குற்றியலுகரம்:

மெல்லின மெய்களைத் தொடர்த்து வரும் கு, சு,டு,து,பு,று

எ,கா: சங்கு, அஞ்சு, மஞ்சு,அங்கு, வண்டு, நண்டு, தொண்டு, சந்து, வந்து, பொந்து

இடைதொடர்க் குற்றியலுகரம்:

இடையின எழுத்துக்களைத்  தொடர்ந்து வரும் கு, சு, டு, து,பு, று

எ.கா கொய்து, எய்து, சார்பு, முழ்கு, பாழ்கு, வல்து, செல்து, எள்கு, தள்று,

குற்றியலிகரம்:

குறியந்தொலிக்கும் 'இ' கரம்
குறுமை+இயல்+இகரம்+ குற்றியலுகரம்

நிலைமொழியின் ஈற்று எழுத்தான இறுதி எழுத்து குற்றியலுகரமாக  அடுத்து வருமொழியின் முதலெழுத்து யகரம் வரின்  உகரம்  இகரமாகத்  குற்றியலிக மாக திரிந்தது.

நாகு+யாது= நாகியாது
 
வீடு+யாது= வீடியாது        = உகரம் இகரமாக திரிந்துள்ளது

வரகு+யாது= வரகியாது

மியா என்னும் அசைச்சொல்லில் உள்ள இகரமும், தன் ம்+இ= மீ
மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும்

கேண்மியா, சென்மியா

முற்றிய லுகரம்: 
தனிக்குறிலை அடுத்துவரும் கு, சு, டு, து, பு, று
எ.காட்டு: பகு, குடு, தபு, பெறு, சிறு, 

காணு, உண்ணு, உருமு இவற்றில்  ஈற்றிலுள்ள மெல்லின உகரங்கள் முற்றியலுகரங்கள் ஆகும். 

எழு, தள்ளு, கதவு, அள்ளு, அல்லு, வெற்றி  ஈற்றிலுள்ள இடையின உகரங்கள் ஈற்றிலுள்ள மெல்லின இடையின  உகரங்கள் ஆகியவை முற்றியலுகரங்கள் ஆகும். 

ஐகாரக்குறுக்கம்: 
ஐ ஆனது சொல்லின முதல், இடை, கடையில் வருமபொழுது தனக்குரிய மாத்திரையிலிருந்து குறைந்து  ஒலிப்பது. 

ஐம்பது ஐந்து - முதலில் வந்து 11/2 மாத்திரையாக குறைந்து ஒலிக்கிறது 

தலைவன், வளையம்- இடையில் வந்து 1 மாத்திரையாக குறைந்து ஒலிக்கின்றது. 

கடலை, நடலை - கடையில் வந்து 1 மாத்திரையாக குறைந்து  ஒலிக்கிறது

ஔகாரக் குறுக்கம்: 
'ஔ' ஆனது சொல்லின் முதலில் மட்டுமே வந்து தன் மாத்திரையிலிருந்து குறைந்து 1 1/2 மாத்திரையாக குறைந்து ஒலிப்பது 
எ.கா: ஔவை, ஔடதம், வௌவால் 

மகரகுறுக்கம்: 
'ம்' ஆனது தனக்குரிய 1/2 மாத்திரைலிருந்து 1/4 மாத்திரையாக குறைந்து ஒலிப்பது

எ.கா: 
போலும் - போல்ம்- போன்ம்
மருளும்-மருள்ம்- மருண்ம்
'ன' கர 'ண' கரங்களின் அடுத்துள்ள 'மகரம்' தன் மாத்திரையிலிருந்து குறைந்து  ஒலிக்கின்றது. 

ஆய்த குறுக்கம்: 
ஃ எழுத்து குறைந்து ஒலிப்பது 

நிலைமொழியில் தனிகுறிலை அடுத்துவரும் ல, கர, 'ள' கரங்களின் வருமொழியிலுள்ள தகரத்தோடுத்  சேரும்  பொழுது ஆய்தமாகத் திரியும். 

எ.கா: கல்+தீது- கஃறீது,இல்+தீது- இஃறீது
முள்+தீது முஃடீது, பல்+தீது- பஃறீது


மேலும்  படிக்க: 

Post a Comment

0 Comments