தமிழ் இலக்கணத்தின் ஹலைட்ஸ் பகுதி 3!

சொல்:
இலக்கிய வகையில் சொல் நான்கு வகைப்படும் 
இலக்கன வகையில் சொல் நான்கு வகைப்படும். 

இலக்கிய வகை      
இயற்சொல் 
திரிச்சொல் 
திசைச்சொல் 
வடச் சொல் 

இலக்கண வகை
பெயர் சொல் 
வினைச் சொல் 
இடைச்சொல்
உரிச்சொல் 


இலக்கிய வகை: 
இயற்சொல்:
 எல்லாருக்கும் பொருள் புரியும் வகையில் அமைந்துள்ள தமிழ்சொற்கள்  

எ.காட்டாக :
காற்று, நிலவு,  ஞாயிறு, பலகை- பெயர்சொற்கள் 
வந்தான், படித்தான், கற்றான்- வினை இயற்சொற்கள் 

திரிச்சொல்: 
கற்றவர்களுக்கு மட்டுமே பொருள் விளங்ககூடிய வகையில் அமைந்த சொற்கள் 

எ.கா: பீலீ- மயில்தோகை, உகிர்- நகம், ஆழி- கடல், எயிறு, பல, வேய்-மூங்கில்  
மடி- சோம்பல், நல்குரவு- வறுமை, மேதி- எருமை - பெயர் திரிச்சொற்கள் 

வினாவினான் கேட்டான், முடுக்கினான்- செலுத்தினான், விளித்தான்- அழைத்தான், நோக்கினார்- பார்த்தார், போற்றி  வணங்கி-வனை திரிச்சொற்கள்

திசைச்சொல்:
 தமிழ்நாட்சைச் சூழ்ந்துள்ள பிறபகுதிகளில் இருந்து வந்து தமிழில் வளங்கும் சொற்கள் 
எ.கா: கேணி, கிணறு, பெற்றம் -பசு 

வடச்சொல் : 
வடமொழிச் சொற்கள் சம்ஸ்கிருதம் திரிந்தும் திரியலும் தமிழில் வந்து வழங்குவதை வடச்சொல் என்பர் 

எ.கா : 
கமலம், தாமரை
விஷம் (விடம்)-நஞ்சு
புஷ்பம்( புட்பம்) மலர்

இலக்கண வகை: 
பெயர்சொல் :
பெயரையும்,  இடத்தையும் குறிக்கும்  சொற்கள் 
எ.கா: அம்மா, ராமு, சென்னை, மதுரை, கண்ணன், கண்ணகி, மாதிரி , மணி

வினைச் சொல்: 
செயலை  இயக்கத்தினை குறித்து  வரும் சொற்கள் . 
எ.கா: ஓடினாள், வெட்டினான், கடந்தாள், வந்தான், 

இடைச் சொல்: 
இணைப்பச்  சொல்லாக வரும் சொற்கள் இவை தனியாக வராது பெயர்சொல் மற்றும் வினைச் சொற்கள் சார்ந்தே வரும். 

எ.கா: உம், மற்று, போல, ஆல்

அண்ணணும், தம்பியும், - உம் இடைச்சொல்

உரிச்சொல்: 
பலவகைப்பட்ட பண்புகளைக் கொண்டு பெயர்ச்சொற்கள் வினைச் சொற்களை விட்டு நீங்காது செய்யுளுக்கே உரிமை  பெற்று வருவன ஆகும். 

எ.கா மாநகர், மாதவர், உறுபசியால், ஆலயம் தொழுவது சாலவும் நன்று = ஆல உரிச்சொல்

பகுபதம், பகாபதம்: 
ஒரு  எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துக்கள் சேர்ந்து நின்றோ பொருள் தருமாயின் சொல் எனப்படும். ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தந்தா அஃது ஒரெழுத்து  ஒரு மொழி எனப்படும். 

ஓரெழுத்து ஒருமொழி  மொத்தம் 42 உள்ளன. எ.கா கைம் தை, பை, தீ, வை

நாற்பத்திரண்டு உள்ளன. 

எ.கா: பகுபதம-பிரிக்ககூடும்
           பகாபதம் - பிரிக்க இயலாது


மேலும் படிக்க:

போட்டி தேர்வுக்கான மொழிப்பாட ஹைலைட்ஸ் பகுதி 2!

Post a Comment

0 Comments