தமிழ் இலக்கண ஹைலைட்ஸ் பகுதிகள் 4 படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்!

 டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கு  இலக்கண 
குறிப்புகள் மற்றும் சொற்களுக்கு கொடுக்க வேண்டிய பொருளை நன்றாகப் படித்து பயனைப் பெறலாம். மொழியை சிறப்பாக படித்து அவற்றை நாம் பின்ப்பற்றி  மொழி அறிவைப் பலப்படுத்தி  தேர்வை வெல்லலாம். 

பகுபதம்  4 வகைப்படும்:
பகுதி, விகுதி,இடைநிலை, சந்தி, சாரியை, விகார என்றெல்லாம் பிரிக்க இயலாத சொற்கள் ஆகும்.

இயலாத சொற்கள்:
பெயர்ப் பகாபதம் - மரம், நீர், நாய், காடு, கரை
வினைப் பகாபதம்- உண், தின், காண், எடு, ஓடு
இடைப் பகாபதம் - தில், பிற, உம், விட, ஆல், போல, மற்று
உரிப் பகாபதம்- சால, மா, நனி,  கடி, உறு, தவ

பகுபதம் 2 வகைப்படும்:

பிரிக்க முடிந்த சொற்கள் அதாவது பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி சாரியை விகாரம் எனபகுபத உறுப்புகள் அமைய பிரிக்க முடிந்த சொற்கள் பகுபதம் எனப்படும்.

பெயர்ப் பகுபதம் :
பொன்னன் - பொருள் பெயர்ப்பகுபதம்
மதுரையான்- இடப்பெயர்ப்பகுபதம்
கார்த்திகையான்- காலப் பெயர்ப்பகுபதம்
தலையன், கண்ணன்- சினைப் பெயர்பகுபதம்
இனியன்- குணப் பெயர்ப்பகுபதம்
ஓட்டுநர்- தொழிற் பெயர்ப்பகுபதம்

வினைப்பகுபதம்:
 2 வகைப்படும்

தெரிநிலை வினைப்பகுபதம்- எ.கா: படித்தான்
படித்தான்= படி+த்+த்+ஆஅன் - தெரிநிலை

குறிப்பு வினைப்பகுப்பதம்= 
எ.கா: அவன் பொன்னன்
பொன்னன்= பொன்+ன்+அன்  - குறிப்பு
த்,க்,ப் போன்ற எழுத்துக்கள் சந்தியாகவும் அன், ஆ போன்ற எழுத்துக்கள் சாரியையாகவும் வரும்.




இடைநிலை:
நிகழ்கால இடைநிலைகள்:

கிறு, கின்று, ஆநின்று
உண்கிறான்- உண்+கிறு+ஆன்
ஊண்கின்றான்-உண்+ கின்று+ஆன்
உண்ணாநின்றான்- உண்+ஆஅநின்று+ஆன்

இறந்தகால இடைநிலைகள்: த், ட், ற், இன்

செய்த் செய்+த்-ஆன்
உண்டான்- உண்+ட்+ஆன்
கற்றான்-கல்+ற்+ஆன்
ஓடினான்-ஓடு+இன்+ஆன்

எதிர்கால இடைநிலைகள்(ப்,வ்)

உண்டான்- உண்+ப்+ஆஅன்
செய்வான்- செய்+வ்+ஆன்

எதிர்மறை இடைநிலைகள்: (இல்,அல், ஆ)

கண்டிலன்-காண்(கண்) +ட்+இல்+அன்
செல்லன்மின்-செல்+அல்+மின்
கூறான்- கூறு+ஆ+அன்
விகாரம்= பகுதி திரிந்து வருவதும், சந்தி திரிந்த வருவது விகாரம் ஆகும்.
தந்தான்= த+த்(ந்)+த்+ஆன்- ந் ஆனது விகாரம்

வேற்றுமை:
வேற்றுமை என்பது பெயரை வேறுப்படுத்தும் அல்லது எழுவாயை வேறுப்படுத்தும்'

வேற்றுமை எட்டு வகைப்படும்:
முதல் வேற்றுமை:
எழுவாய் வேற்றுமை ஆகும். வினைமுற்று பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய  ஒன்றினைப் பயனிலையாகக் கொண்டு முடியும்.

முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை
எ.கா: முகிலன் வந்தான், அவர்கள் சென்றான்

இரண்டாம் வேற்றுமை:
இது, ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை, ஆகிய அறுவகைப் பொருட்களில் வரும்.

 வளவன் பள்ளியை கட்டினான் -ஆக்கல்
சோழன் பகைவரை அழித்தான் - அழித்த
தேன்மொழி கோவிலை அடைந்தால்- அடைதல்
குழகன் சினத்தை போன்றவள் - நீத்தல்
கயல்விழி குயிலைப் போன்றவள்-ஒத்தல்
கண்ணன்செல்வத்தை உடையவன்- உடைமை

இரண்டாம் வேற்றுமை  உருபு ஐ ஆகும்

மூன்றாம் வேற்றுமை:
 (பெயர்பொருள் கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப் பொருளாக  வேறுபடுத்துவது)

கருவி, கருத்தா என இரு பொருள்களில் வரும்
கருவி -முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்
கருத்தா- இயற்றுதல், கருத்தா, ஏவுதல் கருத்தா என இருவகைப்படும்
எ.கா:  நாரால் கயிறு  திரித்தாள்- முதற்கருவி 
கையால் கயிறு திரித்தான் - துணைக்கருவி 
திருக்குறள் திருவள்ளூவரால் இயற்றப்பட்டது-இயற்றுதல் கருத்தா
கோவில் அரசனால் கட்டப்பட்டது- ஏவுதல் கருத்தா 
ஒரு எழுவாயின் செயலுடன் பிரிதொன்றினது செயலும் உடனிகழ்வது உடனிகழ்ச்சிப் பொருள் ஆகும். 

தாயோடு குழந்தை சென்றது
நாயோடு சொல்லும் சொல்லுருபுகளாக வரும் 
எ.கா நூல்கொண்டு தைத்தான் 
ஆறுமுகனுடன் வள்ளி மயில் செனறாள்
மூன்றாம் வேற்றுமை உருபுகள் - ஆல், ஆன், ஒடு, ஓடு

நான்காம் வேற்றுமை:
கொடை, பகை,  நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை  எல்லை பல பொருட்களில் வரும். 
எ.கா:
புலவர்க்கு பரிசு கொடுத்தார்- கொடை
நோய்க்கு படை மருந்து - பகை
பாரிக்கு நண்பர் கபிலர் - நட்பு
வீட்டுக்கு ஒரு பிள்ளை- தகுதி 
வளையலுக்குப் பொன்- பொருட்டு
கூலிக்கு வேலை - பொருட்டு
அனிதாவுக்கு மகன் அன்பரசு- முறை
திருத்தணிக்கு வடக்கு வேங்கடம் - எல்லை 

பொருட்டு நிமித்தம் போன்றவை  சொல்லருபுகளாக வரும். 

எ.கா: கூலியின் பொருட்டு வேலை செய்தான்
வேலையின் நிமித்தம் அயலூர் சென்றான் 
 'கு ' என்ற உருபுடன் ஆக சேர்ந்து வரும்
எ.கா: கூலிக்காக வேலை செய்தான் 

ஐந்தாம் வேற்றுமை:
பெயர் பொருளை நீங்கல், ஒப்பு, எல்லை,  ஏதுப் பொருட்களாள வேறுபடுத்தும்.

தலையின் இழிந்த- மயிர் நீங்கல் 
பாலின் நிறம் கொக்கு- ஒப்பு 
சென்னையின்  மேற்கு வேலூர்- எல்லை 
அறிவில் மிக்கவர் ஔவை-ஏது

இருந்தும் நின்று, விட, காட்டிலும் போன்றவை 5 ஆம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாம். 
எ.கா:
வேலன் ஊரிலிருந்து வந்தான் 
கயல்வழி என்னை விடல் பெரியவள்.
தம்ழைக் காட்டிலும் சுவையான மொழி உண்டோ

5 ஆம் வேற்றுமை உருபுகள் இன், இல், ஆகியன, 'இல' ஆனது 5 - ஆம் வேற்றுமையில் ஒப்பு, நீங்கல், ஏதுப் பொருட்களில் வரும் . 7 ஆம் வேற்றுமையில் இடப் பொருளில் வரும். 

ஆறாம் வேற்றுமை:
கிழமைப் பொருளில் வரும். அது, அது என்பன ஒருமைக்கும், அ என்பது பன்மைக்கும் வரும். 

எனது வீடு
எனது வீடு
தை மாசி எனத் தமிழ் மாதங்கள் பன்னிரண்டு

6- வேற்றுமைச் சொல்லுருபு 'உடைய' என்பதாம். 
எ.கா: என்னுடைய வீடு
நண்பனுடைய சட்டை
6 வேற்றுமை உருபுகள் அது, அது, அ

ஏழாம் வேற்றுமை:
கண், கால், மேல், கீழ், உள், இல், போன்ற உருபுகளைப் பெற்று வருது. 

7-ம் வேற்றுமையில்  'இல்' இடப்பொருளில் வரும். 
எ.கா 
மணியில் ஒலி 
அவனுடைய என்மேல் வெறுப்பு 
பெட்டியில் பணம் உள்ளது
பெட்டிக்குள் சட்டை உள்ளது

எட்டாம் வேற்றுமை: விளி வேற்றுமை
படர்க்கைப் பெயரை  முன்னிலைப் பெயராக்கி அழைக்க எட்டாம் வேற்றுமை பயன்படுகிறது.

கண்ணா வா
கிளியே பேசு

1-ம் வேற்றுமை உருபு இல்லை 
2-ம் வேற்றுமை ஐ
3-ம் வேற்றுமை ஆல், ஆன், ஒடு,ஓடு
4-ம் வேற்றுமை கு
5- ம் வேற்றுமை இன், இல்
6- ம் வேற்றுமை அது, ஆது, அ
7-ம் வேற்றுமை  கண், மேல், கீழ், உள், கால், இல்
8- உருபு இல்லை

 வேற்றுமை                                  சொல்லுருபுகள் 

3-ம் வேற்றுமை               -   கொண்டு, உடன் 
4-ம் வேற்றுமை               - பொருட்டு, நிமித்தம் 
5-ம் வேற்றுமை               - இருந்து, நின்று, விட, காட்டிலும்
6-ம் வேற்றுமை               - உடைய  

மொழி :
மொழி மூன்று வகை உடையது, மொழி- சொல் என்று வரும்

தனி மொழி ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது 
எ.கா: வா, கண், செய்தான், மனிதன் நிலம் 

தொடர் மொழி: 
ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து வந்து பொருளை உணர்த்துவது

எ.கா: படம் பார்த்தான்
பசுவும், கன்றும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டு இருந்தன
பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு சென்றான்.

பொதுமொழி:
ஓரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அதே சொல் பிற சொற்களுடன் தொடர்ந்து நின்றோ, பிரித்து நின்றோ வேறு பொருளைத் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவதாகும்.
 எ.கா: அந்தமான்- தனி மொழி 
அந்த+ மான்- தொடர்மொழி

எட்டு- தனிமொழி
எள்+து - எள்ளை உண்- தொடர்மொழி  
எனவே அந்தமான், எட்டு, தாமரை, பலகை, வைகை, வேங்கை போன்றவை பொதுமொழியாகும். 

மேலும் படிக்க:

தமிழ் இலக்கணத்தின் ஹலைட்ஸ் பகுதி 3!

Post a Comment

0 Comments