1500 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர், சுயத்தின் விடிவெள்ளி சுட்டுவிட்டார் சூரியனை !!

நம்மிடம் 1500 ஏக்கர் நிலம் உள்ளது என்று வைத்துகொள்ளுங்கள்  நாம எப்படி இருப்போம் ஜஸ்ட் இமேஜின் தட், நம்மளோட ரேஞ்சு என்னாவா இருக்கும்.

ஆனால் ஒரு மனுசர் சொத்துபத்தெல்லாம் விட்டுட்டார். தன்நாடு தன் தேசம், தன் மக்கள் என்று வாழ்ந்தார். தன்னை சுற்றி வாழும் மக்களுக்காக தன் பிள்ளை பொண்டாட்ட்டியையும் கவனிக்கவில்லை.

 தன்னுடைய தேசத்தைமீட்க தன்னையே அர்ப்பணித்தார் தன் குடும்பத்தைவிட அதிகமாக தன் மக்களைப் பற்றி யோசித்தார்.  
"
இராமன் ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும் எனக்கு ஒரு கவலையில்லை நான் தாண்டா என் மனசுக்கு ராஜா ….."
 என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கெல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கும் இவருடைய வாழ்க்கை,
ஆனால் உண்மை அந்த குட்டிதீவுகென்று குதுகலவாழ்வை கொண்டுவந்தவர் மாபெரும் மனிதர் காஸ்ட்ரோ,,,,,,,,ஃபிடல் காஸ்ட்ரோ ,,,,,,
எதிரி நாட்டுமக்களிடமே என் தேச மக்களை நாங்கள் காக்க வேண்டும் என்று வாதிட்டார்,

பஞ்சு மெத்தையில் பண்ணை வீட்டு மகனாக பிறந்து  பாதிரியார்  வீட்டில் தங்கி படித்து பரப்பரபில்லாமல் வாழ்ந்தவர், பணிவோடு இருந்த காஸ்ட்ரோவின் 8 மணிநேர தொடர்ந்தாற்றும் வீரவுரைகள் கேட்போரை கவரும், அவரது  புரட்சி போராட்ட நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அந்த நாட்டு மக்கள், இளைஞர்கள் உணரும்படி செய்தார்.

உடன் உழைக்க சொல்வேன் அதில் பிழைக்க சொல்வேன் ஒரு தவறு செய்தால் அது தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று வாழ்ந்தவர் அந்த இரும்பு மனிதர்…. நாற்பதாண்டு காலம் புரட்சி போராட்டம் ஒரு பக்கம் புரட்சி வெற்றி பெற்ற பின்பு நாட்டின் மீது  விழுந்த பொருளாதார தடை, விளைநிலங்களின் மீது விசப்பொடி தூவி நிலத்தின் உயிர்ப்பை இழந்து தவிர்த்த மக்கள் ஒரு பக்கம். கரும்பு அறுவடை முடித்து சர்க்கரை மலையாய் கிடந்தது தேசமெங்கும் விற்பனை பொருட்கள் விற்கசந்தையின்றி நின்றனர்.
உரிமையை இழந்து உடமையை இழந்து உணர்வை மட்டுமே மீதி  வைத்திருந்த  தேசத்தை வைத்து தான் உலகை ஈர்த்தார் காஸ்ட்ரோ .. தன் போராட்டத்தில் உடன் இருந்த உலக போராளி சேவுடன் இணைந்து புரட்சிக்கு பின் புரட்சி செய்தார் .

  கியூப கிண்ணம் காஸ்ட்ரோவின் சின்னம் 


பொருளாதார தடைகளை பொருட்ப்படுத்தவில்லை , விளைநிலங்களை சரிசெய்தார், குடிக்க பால் இல்லை, நோய்க்கு மருந்தில்லை விளைந்த விளைச்சலை வாங்க ஆளில்லை, இதற்கிடையில் மக்களுக்கு கல்வி அறிவு கொடுக்க வேண்டும், வங்கி கற்க வேண்டும் ,விவசாயம் செய்ய வேண்டும் , நோய்க்கு மருந்து வேண்டும் . மக்களை எழுச்சியடையச் செய்ய வேண்டும் இவ்வாறு அனைத்து வேண்டும்களையும் பெற்றார் காஸ்ட்ரோ ,,,

மக்களுக்கு புரியவைத்தார்,  மக்களை சிந்திக்க வைத்தார் செயல்பட வைத்தார் விதிகளை கடுமையாக்கப்பட்டன ஆனால் விளைந்தது எல்லாம் மக்களுக்கு உடமையாக்கப்பட்டன, காஸ்ட்ரோவோடு இணைந்து கியூபா என்ற சர்க்கரை கிண்ணத்தையும்  காஸ்ட்ரோ என்ற விரையம் இல்லா காட்டாற்றாறு வெல்லத்திற்கு இன்னும் நிறைய டிரெயிலர்கள் கொடுக்கலாம் ஆனால் இனி வரும் பதிவுகளில் நாமும் காஸ்ட்ரோவுடன் பயணிப்போம்… காஸ்ட்ரோவோடு புரட்சி செய்வோம் , அவரோடு போராடுவோம் அவரது களத்தில் நாமும் நிற்போம் இத்தோடு டிரெயிலர் ஓவர் இனி அடுத்து அமெரிக்காவின் சிம்ம சொப்பண வாழ்வை இனிதே ஆராய்வோம் … 

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்ற ஒரு தேசம் !!!!!

Post a Comment

0 Comments