சுயத்தின் விடிவெள்ளி சுட்டெரிக்கும் சூரியனை
சுட்டுவிட்டார்… ஸ்பெயினின் படைவீராரக கியூபாவுக்கு
வந்து சென்றவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் தந்தை ஏஞ்சல் ரஷ் காஸ்ட்ரோ. ஏஞ்சல் படைவீராகராக
கியூபாவின் சர்க்கரை நிலங்களில் ஓயாமல் உழைக்கும் மக்களால் செழித்த கியூபா அறுவடை செய்த
ஸ்பெயின் மற்றும் அமெரிக்க ஆதிக்கத்தில் இருக்கும் கியூபாவிலும் ஒளிரும் கியூபாவின்
அழகில் மிதந்து போனார் , கியூபாவில் வேலை முடித்து ஸ்பெயின் போன பின்பும் கியூபாவில்
எதோ இழந்து வந்த நினைவு அதனையோட்டி அங்கே வாழ்வு நடத்த குடிபெயர்ந்தார் காஸ்ட்ரோவின்
தந்தை ஏஞ்சல் ரஷ் காஸ்ட்ரோ.
கியூப வாழ்வு :
கியூபா வந்தாகிவிட்டது இயற்கையின் அற்புத கொடையான
ஓங்கி உயர்ந்த கரும்பு நிலங்களில் ஓயாது உழைத்தார். அவருக்கு அதில் திருப்தி
இல்லை ஆனால் இந்த கரும்பை கொண்டுதான் வாழ்வென்பது புரிந்து வைத்திருந்தார். கரும்பு
காடுகளை சுற்றி வருகையில் வேலைக்கு ஆட்கள்
அனுப்பும் ஒரு முறையை கையாண்டு பணம் பெற்றார் . ஓயாது உழைத்து அடிக்கடி கலைத்து போகும்
விவசாயிகளுக்கு எலும்பிச்சை பழச்சாறு கொடுத்தார் அவர் எதிர்பாராத அளவில் லாபம் பெற்றார். மரங்களை கொண்டு மரச்சாமனங்கள் செய்தார். இவ்வாறு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் அவர் உழைத்தார்
இதன் பொருட்டு 1940 ஏக்கர் பண்ணை நிலங்களை அவரால் படிப்படியாக பெற முடிந்தது . ரஷ் ஏஞ்சலின் இரண்டாம் மனைவி லினா ரஷ்
காஸ்ட்ரோவின் மகனாக பிறந்தவர்தான் நமது ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் ரவுல் காஸ்ட்ரோ மற்றும் ஐந்து பெண் குழந்தைகள் உடன் பிறந்தவர்கள்
ஆவார்கள்.
சார்ந்த பதிவுகள்:
ஃபிடல் காஸ்ட்ரோ 1926 ஆகஸ்ட் 13 ஆம் நாள்
பிறந்தார் . அப்போது அவர் பெயர் அல்ஜெண்ட்ரோ காஸ்ட்ரோ ஆகும். ஃபிடல் காஸ்ட்ரோ நினைவு
தெரிந்த நாள் முதல் யோசித்தது நேசித்தது அவரது வீட்டைப்பற்றிதான் .
கோழி, வாத்து, கரும்பு தோட்டம், விவசாயம்
வேடிக்கை பார்த்து , பார்த்து வளர்ந்ததுதான பிஞ்சு உள்ளம். ஞாயிறுகளில் தான் வசித்து
வந்த பகுதிகளில் நடக்கும் சேவல் சண்டை காண்பதில் ஆர்வம் காட்டுவார் ஃபிடல். பிஞ்சு
வயதிலும் தன்னை ஒத்த வயதினர் செருப்பில்லாமல் , உடுக்க நல்ல உடையில்லாமல் அவதிப்படுவது
கண்டு பிஞ்சு உள்ளம் தாயிடம் ஏன் இந்த நிலை இவர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்
நான் இப்படியிருக்கிறேன் என்று பல கேள்விகள் கேட்ப்பார் காஸ்ட்ரோ அன்று முதல் புரட்சி
தீ வெடிக்க ஆரம்பித்ததோ என்னவோ !! ஆனால் ஐந்திலே வளைந்த உள்ளம் ஐம்பதிலே அபரித வளர்ச்சியை
கியூபா அடைய வைத்தார் காஸ்ட்ரோ . போராட்டத்தின் நுனி அந்த கேள்வியில் தொடங்கியிருக்கும்
ஆயுத நாயகனின் ஆற்றல் பிறப்பிடம் அதுவாகும் . அடுத்தடுத்து ஆயுத நாயகரின் அழங்கரிக்கப்பட்ட
பக்கங்களை காண்போம்,,
1 Comments
This comment has been removed by a blog administrator.
ReplyDelete