டிஎன்பிஎஸ்சி பொதுதமிழ் கேள்விகள் படிங்க வெற்றி பெறுங்க

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெல்ல தமிழ் கற்போம் , கற்பிப்போம் வெற்றி பெறுவோம் . ..
ஆறுமனமே ஆறு அந்த ஆறு கட்டளை ஆறு என்பதை போல் வெற்றி பெற தமிழில் வேண்டும் நூறு அதுதான் இறுதி இலக்கு

சார்ந்த பதிவுகள்:
அகஒழுக்கம்

1 குறிஞ்சி – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
2 பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
3 முல்லை- இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
4 மருதம் – ஊடலும் ஊடல் நிமித்தமும்
5 நெய்தல் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பெண்ணின் பருவம் 7 அறிந்துகொள்வோம் அது மிகவும் முக்கியமான குறிப்புகளில் ஒன்றாகும்
1 பேதைப் பருவம்- 5 வயது முதல் 7 வயது வரை
2 பெதும்பை- 8 வயது முதல் 11 வயது வரை
3 மங்கை- 12 வயது முதல் 13 வயது  வரை
4 மடந்தை – 14 வயது முதல் 19 வயது வரை
5 அரிவை -20 வயது முதல் 25 வயது வரை
6 தெரிவை – 26 வயது முதல் 31 வயது வரை
7 பேரிளம் பெண் – 32 முதல் 40 வயது வரை

திருமுறைகள் மொத்தம் எத்தனை
விடை 12
1,2,3 திருமுறைகள் பாடியவர் – திருஞான சம்பந்தர்
4,5,6 – திருமுறைகள் பாடியவர் – திருநாவுக்கரசர்
7 ம் திருமுறை –சுந்தரர்
8ம் திருமுறை பாடியவர் – மாணிக்கவாசர்
9ம் திருமுறை பாடியவர் – பலர்
10ம் திருமுறிய பாடியவர்- திருமூலர்
11ம் திருமூலர் பாடியவர்- பலர்

12ம் திருமுறை பாடியவர் – சேக்கிழார்

Post a Comment

0 Comments