இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்ற ஒரு தேசம் !!!!!

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்ற ஒரு தேசம் ,
உரிமை இழந்தோம் உணர்வை இழக்கலாமா என்ற ஒரு தேசம் “””
என்னடா மூவி டயலாக்கா இருக்கேன்னு பாக்குறிங்களா அது ஒரு உண்மை நிகழ்வின் நிலைப்பு . வானில் இருந்து வட்டமடித்து பறந்த அமெரிக்க கழுகு கியூப விளைநிலங்களை நாசம் செய்தது .
அமெரிக்காவின் ஆணவ ரசாயண மழையால் நனைந்து நாசமாய் போயின கியூப நாட்டு விளைநிலங்கள் , விளைந்த  பொருட்களை விற்க முடியாமல் பொருளாதார தடையை விதித்து மூச்சிவாங்கி நின்றது கியூபா.
விக்கித்து போகட்டும் என்றிருந்த நாட்டை விளைநிலமாக்கினார்கள் கியூப மக்கள் அத்துடன் குடிக்க  தண்ணீரின்றி , பச்சிளங் குழந்தைகளுக்கு பால்கொடுக்க பாலின்றி மிகுந்த வெறுமையான நிலையில் இருந்தது தேசம் ஆனால் வீழ்ந்த போதும் வீழவில்லை தேசத்தின் தேடல்,,,
கியூபாவின் முன்னேற்றத்திற்காக காஸ்ட்ரோவின் கம்பீரத்திற்க்காக ஒட்டுபோட்ட் கோட்சூட்டை ஒன்பது வருடம் போட்டார்கள், பல்லுபோன பாட்டிமார்கள் வங்கி கற்றார்கள் . பழ அறுப்பவர் பாடசாலைக்கு சென்றார் ,காலையில் பள்ளியில் கற்றதை மாலையில் மக்களுக்கு கற்றுகொடுக்கும் மாணவ கூட்டம், காலை கல்வி போதித்து மாலை விவசாயம் செய்த ஆசிரியக்கூட்டம் என்று கியூபாவின் மக்கள் சுயசிந்தனையுடன் செயல்படுகின்றனர்.
மருந்துகள் இல்லாமல் அல்லல் பட்ட கியூபாவிலிருந்து அதிக தரம்வாய்ந்த மருத்துவர்கள் வருடந்தோறும் வருகின்றனர். என்ன இது புதிராக இருக்கின்றது என்ன சொல்ல வருகிறேன் என்ற குழப்பம் தேவையில்லை இது அனைத்தும் கியூபாவின் சாதனைகளாகும் . அமெரிக்க சதியை வீழ்த்தி வெற்றி பெற்றவர்கள் கியூப மக்கள் அதற்கு என்ன காரணம் என்ற யோசனையா அதனை  விரிவாக அறிந்துகொள்ளலாம் .
கியூபாவின் வரலாற்றினை புரட்டினோம் அதனை இந்திய இளைஞர்கள் கற்றுகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் போராட்ட நிகழ்வுகளை இங்கு பதிகிறோம் . நன்றாக படிங்க இந்திய இளைஞர்களே பிறகு அறிவீர்கள் வாழ்வின் இரகசியத்தை சொகுசு வாழ்கையிம் மத்தியில் நாம் ….

 இன்னும் கியூபாவும் சர்க்கரை கிண்ணத்துடன் இருக்கும் காஸ்ட்ரோவைவும் படிக்க நிறைய இருக்கு பாப்போம் அடுத்தடுத்து... உலகம் இவரை கம்யூனிஸ்ட்வாதி என்றது அமெரிக்காவுக்கு அலர்ஜி கொடுக்கும் எதையும் எங்கள் கொள்கை என்பார் நம்மவர் காஸ்ட்ரோ.
  



Post a Comment

2 Comments

  1. அருமை நன்றி தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்

    ReplyDelete