வடகிழக்கிலிருந்து வந்ததொரு தங்கபுயல் வருக வருக என வரவேற்கிறது சிலேட்குச்சி!

வந்தது  தங்கபுயல் வடகிழக்கிலிருந்து வருக வருக என வரவேற்கிறது சிலேட்குச்சி. 18 வயதான ஹிமாதாஸ் 18 மாத  காலப் பயிற்சியில் சர்வதேச தடகளப் போட்டியினை விளையாடி தங்கப் பதக்கம் வென்று சாதனை செய்து இந்திய இதயங்களில் இடம்  பெற்றுள்ளார்.


வடகிழக்கு எல்லை மாநிலங்களின் ஒன்றான அஸ்ஸாமில்  நாகயோன் மாவட்டத்தில் திங் கிராமத்தில் தில்லாக வளர்ந்தவர் ஹிமா தாஸ். பணம் படைத்த வீட்டில் பிறக்க வில்லை. ஆனால் பார்க்கே சோறு போடும் விவசாயி ரஞ்சித் தாஸின் மகளாக பிறந்தவர் ஹிமா தாஸ்.  பற்றாக்குறையான குடும்ப சூழலலிலும்   தன் கனவை பாதியாக்கவில்லை. கால்பந்தாட்டத்தில் கடகடவென ஓடிய புயலை பார்த்து தடகளப் போட்டியில் பங்கேற்று வெற்றி வாகை சூட பயிற்சியாளர் நிபுண் தாஸ் உதவிகரமாக இருந்தார். 

இரண்டு ஆண்டுகாலப் பயிற்சியில் தங்கம்: 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  ஓட்டப்பந்தய போட்டியில் பயிற்சியினை தொடங்கி 100 மீட்டர், 200 மீட்டர் என ஓடி 400மீட்டர் வரை ஓட தொடங்கினார். தொடர் பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பால் காமன்வெல்த் போட்டியில் ஆறாவது இடம்  பிடித்தார். அங்கு  மிஸ்ஸான தங்கத்தை பின்லாந்தில் மிஸ்ஸாக்காமல்  ஹிமா  வென்றார். 20 வயதுகுட்பட்டோர்க்கான தடகளப் போட்டியில் முதல் முறையாக தங்கம் பெற்று தேசத்தை தன் வேகத்தால் திரும்பச் செய்துள்ளார்.
2017 இல் பயிற்சி தொடங்கிய ஹிமாதாஸ்: 
2017 இல் ஜனவரி மாதம் நிபுண் தாஸிடம் பயிற்சி பெறத் தொடங்கிய ஹிமாதாஸ் 18 மாதம் பயிற்சியை  முழுமையாக ஈடுபட்டு தங்கம் வென்றுவந்துள்ளார். ஹிமாதாஸின் உடல்வாகு கடுமையான ஓட்டப்பயிற்சிக்கு தேவையான வலுவுடன் இருந்ததால் வெற்றி கொண்டார்.

கூட்டுகுடும்பத்தின் தங்க மகள்:
ஹிமாதாஸ் வீட்டுப்பகுதியானது அதிக வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதியாகும்.  அதனால் விவசாயம் வீழ்ச்சியடைவதும் நஷ்டத்தால் குடும்பம் நிதி இழப்பு ஏற்படுவதும் தவிர்க்க முடியாத நிலையாகும்.  ஹிமா தாஸின் பயிற்சியாளர் நிபுண்தாஸ்  பயிற்சிக்கான செலவை தானே ஏற்றுக்கொண்டு குடும்பத்தில் அனுமதியுடன் பயிற்சி அளித்தார். 

டீன் ஏஜ்   தங்க மங்கை: 
டீன் ஏஜ் கூட தாண்டாத தங்க மங்கை ஓட்டு போடும் வயதிலே வெற்றியை வசப்படுத்தியுள்ளார். மெத்தப் படித்த பணக்கார குடும்பத்தினை சேர்ந்தவர் இல்லை என்றாலும்  தன் திறனை மெருகேற்றச் செய்து வெற்றி பெற்று அடுத்து  வரும் இந்திய மங்கைகளுக்கு முன்னுதரணமாக திகழ்கின்றார்.

ஊடகங்களின் கொண்டாட்டம்: 
இந்திய ஊடகங்கள் ஹிமாவின்  வெற்றியை கொண்டாடியதன்  மூலம்  நாட்டின் மூளைக் முடுக்கெல்லாம் உள்ள  ஹிமாதாஸ்களுக்கு உற்சாகத்தை ஊட்டியுள்ளது. இது மேலும் பல ஹிமாக்களை வெளிவரச் செய்யும் என்பது உறுதியாகும். வடக்கிழக்கு தங்கப்புயலை வரவேற்பதில் சிலேட்குச்சி  பெருமிதப்படுகின்றது.

மேலும் படிக்க: 

Rani Karnavathi : The unsung queen

Post a Comment

0 Comments