பெருந்தலைவர் கர்ம வீரரால் நாம், நமக்காக கர்ம வீரர் காமராஜர்!...

கர்ம வீரர்  காமராஜரின் 116வது பிறந்த தினமான இன்று கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களிடையே தமிழகம் முழுவதும் கல்வி வளர்ச்சி  நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்திய விடுதலைப் போராட்டவாதி தமிழத்தின் முன்னாள் முதல்வர் தலைவருக்கெல்லாம் தலைவராக அதாவது தலைவர்களை உருவாக்கும் தலைவராக தலைசிறந்த மனிதராக  காமராஜர்  வாழ்ந்தார். 


காமராசர் பிறப்பு:
1903-ஆம் ஆண்டு ஜூலை 15 இல் சாதரண  குடும்ப்பத்தில் பிறந்தார். சாதரண கட்சிதொண்டனாக காங்கிரஸில் இணைந்து கடுமையாக உழைத்து உயர்ந்த நிலையை அடைந்தார்.  வணிக குடும்பத்தில்  பிறந்து வளர்ந்த காமராஜ் அவர்கள்  ஆறு வயதில் தந்தை இறந்தபின் தன்னுடைய மாமாவின்  கடையில் பணியாற்றினார். 


காமராசரும் விடுதலை வேட்கையும்: 
காமராசர்  டாக்டர் வரதராஜ் போன்ற விடுதலைப் போராட்ட வீர்ர்களின் வீர உரையால் மிகுந்த எழுச்சி அடைந்து இளமை காலத்தை நாட்டு விடுதலைக்காக அர்ப்பணித்தார். இந்திய நேசனல் காங்கிரஸில் இணைந்து 1920 களில் உப்புச் சத்தியா கிரகத்தில் பங்கு கொண்டு சிறப்பாக  செயல்பட்டார்.

1930 ஆம் ஆண்டு ராஜ கோபாலாச்சாரி தலைமையில் நடைபெற்ற  உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என நாமக்கல் கவிஞரின் வரிகளுக்கு வாழ்வு கொடுத்த இளையோர்களில் இவரும் ஒருவராயிருந்தார். அப்பொழுது கைது செய்யப்பட்ட காமராஜ், ஒத்துழையாமை இயக்கம் மற்றும் வைக்கம்  சத்தியாகிரகம், நாக்பூர் கொடி சத்தியாகிரகம் போன்றவற்றில் எழுச்சியுடன் பங்கேற்ற காமராசர் சென்னையில் வாள் சத்தியாகிரகம் மற்றும்  நீல் சிலை சத்தியாகிரகத்தில் தலைவாராக தலைமை தாங்கினார். 

ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் வீரமுடன் அகிம்ச்சை போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு முறை சிறை சென்று வந்தார்.  ஒன்பது ஆண்டுகள் நாட்டுக்காக சிறையில் வாழ்வை கழித்து வாழ்ந்தவர் காமராசர் ஆவார். 

காமராஜர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். மேலும் அவர் இந்திய விடுதலை வீரர் மற்றும் அரசியல் போக்கை மாற்றக்கூடிய கிங்  மேக்கராக மக்களால் மதிக்கப்படுகிறார். இந்தியா விடுதலை பெற்றதும் முதன் முதலாக  தேசிய கொடியை காமராஜ்  அவர்கள் சத்திய மூர்த்தியின் வீட்டிலே ஏற்றி தனது குருவுக்கு மரியாதை செலுத்தி பணியை தொடர்ந்தார். 

தமிழகத்தின் தலைசிறந்த முதல்வர்: 
தமிழகத்தின் தலைசிறந்த முதல்வர், தன்னலமற்ற தியாகி, என பல முகங்களை கொண்ட  காமராஜ் அவர்கள்  1953 ஆம் ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்றார். 

தன்னலமற்ற தலைவராக இருந்த காமராஜ் அவர்கள்  முதல்வராக சிறப்பாக செயல்பட்டார். தனது அமைச்சரவையில் எதிர் போட்டியாளர்களை கொண்டு வந்து பெருமிதபடும்படியாக செயல்பட்டார். 
குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டு, மூடப்பட்ட 6000 பள்ளிகளை திறந்து வைத்து கல்வி கண் திறந்தார். பள்ளி குழந்தைகளுக்கு இலவச  மதிய உணவு திட்டம் வழங்கச் செய்து ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கணியாக இருந்த கல்வியை எளிதாகப் பெறச் செய்தார். காமராசரின் மத்திய உணவு வழங்கும் திட்டம்  அடுத்த வந்த அனைத்து தலைமுறைகளும் கல்வி கற்கச் செய்தது.

ஆங்கிலேயர் காலத்தில் 7% சதவிகிதமாக இருந்த கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையானது காமராஜர்  காலத்தில் 37% சதவிதமாக இருந்தது.

தொழிலாளர்கள் வளர்ச்சி: 
காமராஜர் கல்வித்துறையை மலரச் செய்தது போல் தமிழ்நாட்டின் மற்ற  துறைகளான தொழிற் துறை, நீர்பாசனத்துறை, மின் திட்டங்கள் போன்றவற்றை வளரச் செய்தார். தமிழகத்தில் தொழிற்துறைகளை வளர்த்து பல்வேறு நடவடிக்கைகள் சிறப்பாக செய்து  தொழிற் வளர்ச்சிக்கு வித்திட்டார்.

நெய்வேலி நிலக்கரி, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத்  ஹெவி எலக்டிரிக்கல், கல்பாக்கம் அணு மின்நிலையம், ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை  சேலம் இரும்பு உருக்கு ஆலை, பாரத் மிகு மின் நிறுவனம், இரயில் பெட்டி தொழிற்சாலை, நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலைகள் என பல்வேறு தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டு வளர்ச்சி அடைந்தது. மேலும் காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் இரண்டாம் இடம் பெற்று சிறப்பு பெற்றது. 


கால்வாய்த்திட்டம்: 
பவானி திட்டம், காவேரி டெல்டா, வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு,
நிர்பாசன திட்டங்களை ஏற்படுத்தி காமராஜர் வேளாண்மை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து நீர்ப்பங்கீடு செய்தார். 

கே-பிளான்:
விவசாயம், தொழிற் வளர்ச்சி, கல்வி வளர்ச்சியை முன்னிறுத்தி செயல்படுத்திய காமராசர். நாட்டின் அரசியல் எழுச்சி சக்தியாக, தலைவர்களை உருவாக்கும் தலைவராக இருந்தார். அதனால் தான் அவரை கிங் மேக்கர் என அழைக்கின்றோம்.  தேசப் பணியை  செயல்படுத்தி கட்சிப்பணியை வளர்க்க கே- பிளான் காமராசர் கொண்டுவந்தார். கட்சியின் மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு கட்சி பணியாற்றும் திட்டத்தை  கொண்டு வந்தார்.  மேலும் அதன்பேரில் அக்டோபர்2, 1963இல் தன்னுடைய முதலமைச்சர்  பதவியை ராஜினாமா செய்தார். 

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற காமராஜர் லால்பகதூர் சாஸ்திரியை நேருவுக்கு பின் 1964 இல் இந்திய பிரதமராக முன்மொழிந்தார்.
லால்பகதூர் சாஸ்திரியின் திடிர் மரணத்தை அடுத்து  48 வயதே நிரம்பிய நேருவின் மகளான இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த  பிரதமராக்கினார்.

அரசியலில்  சிறந்த முடிவுகளை  எடுத்து நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களில் தன்னிகரற்ற இடம் பெற்றார். இவ்வாறு வாழ்நாள் முழுவதும் தேசம் மற்றும் சமூக சேவையாற்றி தன்னை அர்பணித்த காமராசர் 1975, அக்டோபர் 2  இல் மரணமடைந்தார். 

காமராசரின் சொத்துக்கள்: 
மறைந்த  கறுப்பு காந்தி, எளிமையின் ரூபமான காமராஜ் சேர்த்து வைத்த சொத்துக்களின் மதிப்பினை கணக்கிட்டால் உலகின் எந்த தலைவரையும் அவருக்கு ஈடாக நாம் முன்மொழிய  முடியாது அந்தளவிற்கு அவர் தன்னை எளிமையாக திறந்த புத்தகமாக   வைத்திருந்தார். அவர் இறந்த பிறகு சில கதர் வேட்டிகள், சட்டைகள், ரூபாய் 150 மட்டுமே  சேர்த்து வைத்திருந்தார். திருமணமில்லை, வாடகை வீட்டிலேயே இறுதிவரை வாழ்ந்த காமராசர் நமது வாழ்வின் வழிகாட்டியாக திகழ்ந்து  நாயகனாக நமது மனதில் என்றும் நீங்கா இடம் பெற்று  வாழ்கின்றார். அவருக்கு நிகர் அவரே என்பது இன்று வரை எழுதப்படாத வரலாறாகவுள்ளது. 

அவரின் பிறந்த தினத்தை  கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் ஜூலை 15 தமிழ்நாட்டின்  பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில்  அவரைப்பற்றி படிப்பதுடன் அவரைப் போல் வாழ்ந்து காட்டுவோம் என உறுதி மேற்கொண்டு செயல்பட மாணவர்கள் முன்வர வேண்டும்.

Post a Comment

1 Comments