கார்கில் போர் வெற்றி தினம் இன்று !

கார்கில் போர்
இந்தியாவின் ஜம்மு மாநிலத்தில் கார்கில் நகரின் அருகில் 1999இல் போரானது நடைபெற்றது. அறிவிப்பின்றி ஊடுருவிய பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொணட எதிர் நடவடிக்கையே  விஜய் நடவடிக்கை என அழைக்கப்படுகின்றது. 


மே மாதம் 1999 இல் பாகிஸ்தான் இந்தியாவின் கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி நுழைந்ததன் விளைவே நடைபெற்ற போராகும். போரின் ஆரம்பித்தல் பாகிஸ்தான், பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள் மீது சுமத்தியது. ஆனால் அதனை இந்திய ராணுவ வீரர்கள், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் அவர்கள் பாகிஸ்தான் ராணுவவீரர்கள் என்பதை கண்டுபிடித்து அறிவித்தனர்.  பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் ராணுவதளபதி அஷ்ரப் ரஷீத் தலைமையில் போரில் ஈடுப்பட்டிருந்தது உறுதியாக தெரிந்தது. 


இந்திய வான்படை:
இந்திய வான்படையினர்   போரில்  சிறப்பாக செயல்பட்டு தரைப்படைக்கு உதவியதுடன் எதிர் நாட்டு ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட  இந்திய தடைப்பகுதியை மீட்டது. 

போரின் போக்கு: 
கார்கிலில் நடைபெற்ற இந்த போரானாது  உயர்ந்த மலைத் தொடரில் மிகுந்த பனி சூழலில்  இரு நாடுகளிடையே முதன் முதலில் அணு ஆயுத  சக்திகள்  கொண்ட முதல் போர் எனில் அது இந்தியா, பாகிஸ்தானிடையே நடைபெற்ற பேராகும். 

1947 ஆம் ஆண்டின் பிரிவினைக்கு முன், கார்கில் பகுதி லடாக்கின் பல்திஸ்தான் மாவட்டத்தோடு இணைந்திருந்தது.  உலகின் பல உயர்ந்த மலைகளைக் கொண்ட கார்கில் பகுதி, பல இன மொழி மற்றும் சமய வேறுபாடுடைய மக்கள் வாழும் பகுதியாக இருந்தது.  1947க்கு பின்  கார்கில் காஷ்மீர்ருடன் இணைக்கப்பட்டிருந்து. 1971  இந்தியா பாகிஸ்தான் போரில்  இந்தியா வெற்றி பெற்றது. இதன்படி சிம்லா ஒப்பந்தம் நடைபெற்றது. 

சிம்லா ஒப்பந்தம்:  
சிம்லா ஒப்பந்தபடி  இரு நாடுகளும் எல்லைத்தாண்டிய மோதல்களில் ஈடுப்படக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. கார்கில் நகரம் ஸ்ரீநகரில் இருந்து 2015 கி.மீ தொலைவில் இந்தியாவுக்குட்ப்பட்ட பகுதிகளின் வடக்கு எல்லையில்  இருந்தது.  இமயமலை அருகில் மிதமான வானிலையுட்ன் கார்கில் இருக்கும் மேலும் அது கோடைகாலங்களில்  குளிராகவும், குளிர்காலங்களில் நீண்ட மிகவும் குறைந்த வெப்பநிலை கொண்டிருக்கும். 


ஸ்ரீநகருடன் லேவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH-1D, கார்கில் பாதையில் செல்கின்றது. பாகிஸ்தான் தன்னுடைய ஊடுருவலை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள முகடுகம் மூலம் நடத்தியது. அங்கு இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு தளங்கள் தரைமட்டத்தில் இருந்து சுமார் 5000 மீட்டர் 16000  அடி உயரத்தில் அமைந்துள்ளன. முஷ்கோ பள்ளதாக்கு, திரஸ் நகரம், படாலிக் பகுதி கார்கிலின் வடகிழக்கு பகுதி  மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதியாகும். 

போர் துளிகள்:
1998இல் நடைபெற்ற  ஊடுருவல்களின் மூலம் சியாச்சின் பனிமலையில் இருக்கும் இந்திய படையினரை பின் வாங்க வைத்து காஷ்மீரில் நடந்துவரும் கிளர்ச்சியையும் பெரிதாக்க திட்டமிட்டு பாகிஸ்தான் நடத்தியது.  


1999 மே 3இல் கார்கிலில்  பாகிஸ்தான் ஊடுருவல் அங்குள்ள மேய்ப்பர்கள் மூலம் தெரியவந்தது. 
மே 5இல் இந்திய ராணுவத்தின் ஐந்து விரர்கள் வேவு  பார்க்கச் சென்றவர்களை பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர். 
மே 9 பாகிஸ்தான் குண்டு வீச்சில் கார்கில் ஆயுத கிடங்கினை சேதப் படுத்தியது.
மே மாதம் 15 இந்தியப் படை காஷ்மீர் பள்ளத்தாக்கு படைகளை கார்கில் பகுதிக்கு அனுப்பியது. 

1999 மே 26 இல் இந்திய வான்படை தாக்குதலை பாகிஸ்தானுக்கு எதிராக தொடங்கியது.  இந்திய வான்படையின் மிக்-21 மிக்-27 என்ற போர் விமானங்கள் வீரர்களுடன் தாக்குதலுக்குள்ளானது. மே 28 ஆம் நாள் இந்திய வான்படையின் எம்ஐ -17 விமானத்தை பாகிஸ்தான் வீரர்கள் சுட்டனர். 

வான்படை லெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் வீரர்கள் போர்கைதியாக பிடிப்பட்டார். 

ஜூன் 1 இல் பாகிஸ்தான் இந்தியாவின் NH-1A நெடுஞ்சாலை குண்டுவீசி தாக்க்கப்பட்டது.  ஜூன் 5 இல் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தான் இந்தியாவில் ஊடுருவியுள்ளனர் என்ற உண்மை உறுதியானது. இந்திய ராணுவம் வீரியத்துடன் தாக்குதலை தொடர்ந்தது. படாலிக் பகுதி நிலைகளை இந்தியா கைப்பற்றியது.  

அமெரிக்கா போன்ற நாடுகள் பாகிஸ்தானை போர் நடவடிக்கையை நிறுத்த மிகுந்த அறிவுரை வழங்கியது.  இந்திய ராணுவம் முக்கிய நிலைகளன்களை வென்றது. கார்கிலில் மும்முனை தாக்குதல் நடத்தி டைகர் ஹில் பகுதியை மீட்டது. மேலும் ஜூபார் என்ற இடத்தை கைப்பற்றியது. ஜூலை 11 இல் பாகிஸ்தான் படை  பின்வாங்கி சென்றது. ஜூலை 14 இல் இந்திய வெற்றி ஆவார். 

கார்கில் பிரச்சனை முடிவுக்கு வந்தது. முற்றிலுமாக இந்திய ராணுவம் அறிவித்தது. இந்திய தரைப்படையினரில் ஆவேச  தாக்குதல் அதனுடன் வான்ப்படை சஃபேத் சாகர் நடவடிக்கை தரைப்படைக்கு உபயோகாமாக இருந்தது. 

தல்வார் நடவடிக்கையின் மூலம் இந்திய கடற்படை பாகிஸ்தான் துறைமுக காராச்சியை முற்றுகையிட தயாராகியது.  இந்திய கடற்படை மேற்கு மற்றும் கிழக்கு படைப்பிரிவுகள் இணைந்து செயல்பட்டன. பாகிஸ்தானின் கடல் வர்த்தகம் நசியும் அபாயம் ஏற்பட்டது. 

ராணுவ வீரர்களுக்கு விருது: 

இந்த போரின் மூலம் இந்திய ராணுவப்படையின் ஆக்ரோசம் வீரம், செயல்படும் போக்கு அனைத்தும் இரண்டாம் முறையாக உலகுக்கு இந்தியா இந்த போரின் மூலம் நடத்தியது.  

போரில் ஜொலித்த நாயகர்களான கிரனேடியர் யோகேந்திர சிங் யாதவ்க்கு 18 கிரனேடியர் பிரிவில் பரம் வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தது. 

லெப்டினன்ட் மனோஜ்குமார்  பாண்டே, 1/11 கூர்கா ரைஃபில்ஸ், பரம் வீர் சக்ரா மறைவுக்கு பின்னர்

கேப்டன் விக்ரம் பத்ரா ,12,ஜெ,ஏ, கே ரைஃபில்ஸ் பர்ம வீர் சக்ரா மறைவுக்கு பின்னர் பெற்றனர்.

கேப்டன் அனுஜ் நாயர், 17,ஜெ.எ.டி.ரெஜிமென்ட், மகாவீர் சக்ரா மறைவுக்கு பின்னர்  பெற்றார். 

கேப்டன் அனுஜ்நாயார், 17,ஜெ.டி.ரெஜிமென்ட, மகாவீர் சகரா மறைவுக்கு பின்னர் பெற்றனர். 

மேஜர் ராஜேஷ் சிங் அதிகாரி, 18 கிரனேடியர் பிரிவு,  மகாவீர் சக்ரா மறைவுக்கு பின்னர் பெற்றார். 

மேஜர் சரவணன், 1, பீகார் படைப்பிரிவு, வீர்சக்ரா மறைவுக்கு பின்னர் பெற்றார். 

சுகுவாட்ரன் லீடர் அஜய் அஹூஜா, இந்திய வான்படை, வீர்சக்ரா மறைவுக்கு பின்னர் பெற்றார். 

ஊக்குவித்த ஊடகங்கள்: 
இந்தியா பாகிஸ்தான்  கார்கில் போர் 1999இல் நடைபெற்ற பொழுது தேசத்தின் நான்காவது தூண்களான ஊடகங்கள் தொலை காட்சிகள், வானொலிகள் மூலம் ஒளிப்பரப்பின் தேசத்தில் உள்ள தனியார், வெளிநாட்டு ஊடடகங்கள் அனைத்தும் இப்போர் குறித்து இந்தியாவுக்கு ஆதரவான செய்திகள் வெளியிட்டன. நாடு முழுவதும் மக்களிடையே தேசிய எழுச்சி பெற்றது. ஊடகங்கள் மூலம் ஏற்பட்ட அந்த எழுச்சி இந்திய ராணுவத்திற்கு ஆயிரம் மடங்கு பலத்தை கொடுத்தது.  இறுதியில் இந்திய தேசியம் வெற்றி பெற்றது. 

500 கணக்கானோர்  வீர மரணம், 1600க்கு மேல் வீரர்கள் காயமடைந்தனர். நாடே நம் நாட்டு ராணுவ  வீரர்களை  கொண்டாடியது. அன்று ஜூலை 26 இல் தொடங்கிய கார்கில் திவாஸ் இன்றும் என்றும் அஞ்சலியுடன் மரியாதை செலுத்தும் விதமாகவும் ராணுவ வீரர்களின் வெற்றியை கொண்டாடும்  விதமாக வருடம் தோறும் அரசும் பொது மக்களும் இந்த நாளை நன்றி பெருக்குடன் நினைவு கூர்ந்து கொண்டாடி வீரமரணித்தோர்க்கு அஞ்ச்சலி செலுத்தி வருகின்றோம். இந்த ஆண்டும் இந்திய வெற்றிடை சிலேட்குச்ச பெருமிதத்துடன் பதிந்து மரியாதை செலுத்துக்கிறது. வாழ்க  பாரதம் .

Post a Comment

0 Comments