பட்டுப் போன்று கூந்தல் பளப்பளக்க கற்றாழை கண்டிசனர் வீட்டிலியே செய்யலாம் வாங்க!

கண்ணுக்கு மை அழகு
பெண்ணுக்கு அழகு புன்னகை
புன்னகை கொண்ட பெண்ணவளக்கு அழகுக்கு அழகு சேர்பது  கார்கூந்தல்.

அவசர உலகில் எல்லாமே பாஸ்ட்புட் வேகத்தில் மாற்றம் பெற்று வருகின்றன். பண்டைய காலம் முதல் இன்று வரை மாறாத ஒன்று எனில் அது அழகுக் கலை. பாரம்பரிய மிக்க இந்தியாவில் இயற்கையாக தங்களுக்கு தேவையான அனைத்தையும் வீட்டிலேயே செய்து அழகுப்படுத்தி கொண்டனர். இன்றும் அதன் போக்கு மாறவில்லை ஆனால் அழகுக்கலை என்பதை இயற்கையாக செய்தார்கள். இன்று அதற்கு என பார்லர்கள் சந்தையில் ரசாயனப் கலப்பூ பூச்சுக்களால் பெண்கள் அதிக பக்க விளைவை சந்திக்கின்றனர். 


கணினி யுகத்தில் நேரமில்லை, என இன்ஸ்டென்டாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமக்கு தேவையானவற்றை செய்து கொள்ள நேரமின்றி எந்திர உலகில் ஓடி கொண்டிருக்கின்றோம்.   பெண்கள் எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் தங்கள் அழகை பராமரிக்க மெனக்கெடுவார்கள். பெண்களின்  அழகை பெருக்கூட்டும் வழிமுறைகளை கொண்ட  காஸ்மெட்டிக்ஸ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெண்களை நோக்கி படையெடுத்து கொண்டே இருக்கின்றது. அதற்கு தகுந்த போல் சமுக ஊடகங்களில் யூ டியூப் சேனல்களில் ஆளாளுக்கு ரேட்டிங்குகள்  கொடுத்து கொண்டே போகின்றனர்.

என்னதான் பணம் செலவு செய்து  காஸ்மெட்டிக்குகள் வாங்கி குவித்தாலும் இயற்கை அழகுக்குள்ள மவுசு என்பது தனிச்சிறப்பு பெறுகின்றது.  நாம் ஏற்கனவே கற்றாழையை வைத்து சரும பொழிவு  சீரம் மற்றும் கூந்தலுக்கான சீரம் செய்தோம். இந்த பதிவில் கற்றாழையை வைத்து கண்டிசனர் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என தெரிந்து கொள்வோம். சிலேட் குச்சி உங்களுக்கான இயற்கை அழகு குறிப்பினை வீட்டிலேயே  நீங்கள் எளிதில் குறைந்த செலவில் செய்து கொள்ள இது போன்ற பல்வேறு குறிப்புகளை கொடுக்கவுள்ளது  இதனைதொடர்ந்து படியுங்க.

தேவையான பொருட்கள்:
கற்றாழை:
கற்றாழை  மனித வாழ்வுக்கு மகத்தான இயற்கை கொடை ஆகும். மருத்துவ குணத்துடனும், அழகு சாதன பொருளாகவும், ஆண்மிகத்திலும் கற்றாழையின் பயன் அதிகம் காணப்படுகின்றது. கற்றாழையை எப்படி கண்டிசனராக பயன்படுத்தலாம் என்பதை  அறிவோம்.

இயற்கை கண்டிசனர் செய்ய  தேங்காய் பால் மிகவும் அவசியமாகின்றது. தேங்காய் எண்ணெய் பாராம்பரியமாக  கூந்தலுக்கு பயன்படுத்தி வருகின்றோம். கண்டிசனர் செய்ய சிறிய முற்றிய தேங்காயை கொண்டு அதனிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணியினை வைத்து அரைத்து  பாலினை எடுத்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் எடுக்கும் பொழுது தேங்காய் தண்ணிரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வைட்டமின் இ கேப்சூல் இது அனைத்து அழகு சாதனப் பொருட்களிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
செய்முறை:
மேலே குறிப்பிட்ட தேங்காய் பால் அறை மூடி அல்லது முழு தேங்காய் தண்ணீரை உங்கள் தலைமுடி நீளத்திற்கேற்ப  எடுக்கலாம். அத்துடன் ஆலோவீரா ஜெல் மூன்று ஸ்பூனை பாலுடன்  கலக்கவும் மேலும் இரண்டு அல்லது மூன்று வைட்டமின் இ கேப்சூல்களை கலந்து பாட்டிலில் சேமிக்கவும். மேலும் இந்த கலவையை பிரிட்ஜில் வைத்தும் ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
சிறந்த ஹேர் பேக்காகவும் இதனை  தலையில் தடவலாம். 

இயற்கை  தேங்காய், கற்றாழையும் இணைந்து தலைமுடிக்கு  பளபளப்பு நல்ல ஒரு வளர்ச்சியை கொடுத்து கூந்தலினை பாதுகாக்கின்றது.  கற்றாழை கண்டிசனரை வீட்டிலேயே செய்து பயன்படுத்தி பட்டுபோன்ற கூந்தல் அழகை பெறலாம்.

வீட்டிலேயே செய்யும் கண்டிசனரை சாம்பூ வைத்து அலசிய பின் தலையில் மயிற்கால்கள் முதல் நுணி வரை தடவி 10 முதல் 20 நிமிடம் வைத்து அலசினால் கூந்தல் பொலிவுடன் ஆரோக்கியமாக இருக்கும்.  நல்ல ஊட்டத்துடன் கருமையாக வளரும். 

வீட்டிலேயே செய்யும் அழகு சாதனப் பொருளான கண்டிசனரை பயன்படுத்தும்பொழுது அதிக கைவிட்டு பயன்படுத்த வேண்டாம். கண்டெய்னர் அல்லது  பாட்டிலில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தவும்.  வீட்டிலுள்ள அனைவரும் பயன்படுத்தலாம். இக்குறிப்பினை படித்துப் பார்ப்பதோடு பயன்படுத்தவும்.  

Post a Comment

0 Comments