வீட்டிலேயே கற்றாழை மூலம் ஹேர் சீரம் செய்வோம் !

கற்றாழையை   அருமருந்தாக அனைவருக்கும் உதவும் குணம் கொண்டது. எளிதாக அனைவருக்கும் கிடைக்ககூடியது. கற்றாழையை  கொண்டு தலை முடி வளர்க்கலாம். மேலும் பட்டு போன்ற பளப்பளப்பு பெறலாம். இதற்கு முன் கற்றாழையை வைத்து சரும பொழிவிற்கான சீரம்  செய்தோம்


தலைமுடி பராமரிப்புக்கு  வீட்டிலே கற்றாழையை கொண்டு சீரம் தயாரிக்க சிலேட்குச்சி மூலம் குறிப்புகள் வழங்குகின்றோம். கற்றாழையால் செய்யப்படும் சீரம் இயற்கையானது தலை முடி வளரவும், முடி கொட்டுவது குறைத்து   மயிற்கால்களுக்கு வலிமை கிடைக்கச் செய்வதுடன் பொடுகு உண்டாவதை தடுக்கிறது. 

கற்றாழை  இயற்கை அழகினை மெருக்கூட்டி பளபளப்பாக்குகின்றது. இயற்கையிலேயே தலைமுடிக்கான  சீரம் செய்ய  தேவையான பொருட்கள் கிழே கொடுத்துள்ளோம்.
கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர், தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் மற்றும்  கேஸ்டர் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்று, வைட்டமின் சி  கேப்சூல்,  தண்ணீர் இவைகளை கொண்டு  தரமான ஹேர் சீரம்  தயாரிக்கலாம். 

செய்முறை: 
ஒரு அறை கிளாஸ்  தண்ணீர் சிறிய கண்டெய்னரில் ஊற்றி அவற்றுடன் இரண்டு வைட்டமின் இ கேப்சூல் கலந்துவிட்டு மேலும்  5 டிராப் பாதாம் எண்ணெய், ஆலோவீரா ஜெல் இரண்டு சிட்டிக்கையுடன்,  4 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து  நன்கு கலக்கவும். வீட்டிலேயே ஹேர் சீரம் தயாரித்தப்பின் அதனை தினமும் தடவலாம். குளித்த பின்  தலைமுடியில் தடவலாம்.  

வீட்டிலேயே செய்த ஹேர் சீரம் தினமும் பயன்படுத்தலாம் ஒரு மாதத்திற்கு இதனை பயன்படுத்தலாம்.  வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு எளிதாக செய்யும் ஹேர் சீரம் அனைவருக்கும் வலுவலான பட்டுபோன்ற பளப்பளான  முடி அழகினை கொடுக்கும். 

வீட்டிலேயே உங்களுக்கான அழகு பொருட்களை பயன்படுத்தும் பொழுது  செலவினை குறைத்து சேமிக்க முடியும். மற்றும் இயற்கையான பயன்பாடு இன்னும் அழகுறச் செய்யும். கூந்தலும்  அழகு பெற்று  பாதுகாப்பாகும்.

கற்றாழையையின் பயன்கள் குறித்து ஒவ்வொன்றாக  தெரிந்து கொண்டு வீட்டில் கற்றாழை வளர்க்க ஆரம்பியுங்கள். வீட்டை சுற்றி 10  மூலீகை செடிகள் போதும் எளிதில் நம்மை ஆரோக்கியத்துடன் அழகு படுத்தலாம்.

Post a Comment

0 Comments