சிலேட் குச்சியின் புதியமுறை விளக்கம் படிங்க டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்லுங்க!

             விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு

1. வேலூர் கலகம் (1806)
ஆங்கிலேயர்கள் இராணுவத்தில் புகுத்திய கட்டுப்பாடுகள் வேலூர் கலகத்திற்கு வழி வகுத்தது.
இந்து வீரர்கள் தங்கள் நெற்றியில் சமயக்குறி இடக்கூடாது என்றும்,
முஸ்லிம்கள் தங்கள் தாடி மீசைகளை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே.
இந்திய வீரர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்படத் தூண்டியது அத்துடன்  இதில் திப்புவின் மகன் பத்தே ஹைதர் முக்கிய பங்கு வகித்தார்.


2. சென்னை மாகாணசபை
1852 ஆம் ஆண்டு சென்னை சுதேசி சங்கம் ஏற்படுத்தப்பட்டது.
இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது.
சென்னை சுதேசி சங்கம் 1884 ஆம் ஆண்டு சென்னை மாகாண சபையுடன் இணைக்கப்பட்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியது.

சென்னை சுதேசி சங்கங்களை தோற்றுவித்தவர்கள்
• ஹார்லி லட்சுமி நரசுசெட்டி
• சீனிவாச பிள்ளை

சென்னை மாகாணசபையினை தோற்றுவித்தவர்கள்
• எஸ் . ராமசாமி முதலியார்
• பி.இரங்கய்யா நாயுடு
• அனந்தாசாருலு
சென்னை மாகாணசபையின் முதல் தலைவர் (பி. இரங்கையா நாயுடு)
சென்னை மாகாணசபை 1920 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது.
1896 அக்டோபர் 24ஆம் நாள் தேசத்தந்தை மகாத்மா காந்தி மாகாணசபையில் உரையாற்றினார்.
இச்சபையின் பொன்விழாவில் ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டார்.

3. தென்னிந்திய புரட்சி (1800 -1801)
தென்னிந்தியபுரட்சியை தலைமை ஏற்று நடத்தியவர் மருது பாண்டியர்.
தென்னிந்திய புரட்சி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான
வெறுப்பின் வெளிப்பாடே காரணம்.

4. பாளையக்காரர்கள் கிளர்ச்சி (1799)
விஜயநகரப் பேரரசின் ஆட்சியின்போது வரிவசூல் செய்யும் உரிமையை பாளையக்காரர்கள் பெற்றிருந்தனர்.
பாளையக்காரர்கள் முறையை புகுத்தியவர் விஸ்வநாத நாயக்கர்.

5. மருது பாண்டியர் சிவகங்கையை ஆண்ட முத்துவடுகநாதரின் கீழ் பணிபுரிந்தார்.
மருது பாண்டியர்களுக்கு எதிராக படையை அனுப்பியவர் அக்னியூ.
மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட ஆண்டு 1801

6. வீரபாண்டிய கட்டபொம்மன்
வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை.
வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி ஜக்கம்மாள்.
வீரபாண்டிய கட்டபொம்மனை வரியை கட்டுமாறு ஆங்கிலேய ஆட்சியர் ஜாக்சன் கடிதம் எழுதினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் மருது பாண்டியர்கள் மற்றும் பாளையக்காரர்களுடன் கூட்டமைப்பினை ஏற்படுத்தி ஆங்கிலேயரை எதிர்த்தார்.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு 1799 அக்டோபர் 16 ஆம் நாள் இடம் கயத்தாறு.

கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் டிஎன்பிஎஸ்சியால் கேட்க வாய்ப்புள்ள கேள்வி பதில்களின் தொகுப்பு இணைப்பு இங்கு கிளிக் செய்து படியுங்க.

மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சி கனவு வாரியம் வெல்ல கேள்விகளின் தொகுப்பு !
டிஎன்பிஎஸ்சி கனவு வாரியம் வெல்ல கேள்வி-பதில்களின் தொகுப்பு !

Post a Comment

0 Comments