டிஎன்பிஎஸ்சி கனவு வாரியம் வெல்ல கேள்வி-பதில்களின் தொகுப்பு !

டிஎன்பிஎஸ்சி கனவுவாரியம் நோக்கி நாம் படித்து கொண்டிருப்போம். உங்களுக்காக சிலேட் குச்சி தொகுத்துள்ள சில கேள்விகளுக்கான விடைகள் விளக்கங்களுடன் கிழே கொடுத்துள்ளோம். படியுங்க தேர்வை வெல்லுங்க.


1. சீனாவை எல்லையாகக் கொண்ட மாநிலம் ஐந்து வகையான மக்களை கொண்ட மாநிலம் மேலும் அதன் முக்கிய பயிராக உள்ளது எந்த மாநிலம்?
விடை: இமாச்சல பிரதேசம்
விளக்கம்:

இமாச்சலப் பிரதேசம் ஏப்ரல் 15, 1948இல்  இதன் தலைநகரம் சிம்லா ஆகும். காடி, இன்னார், குஜ்ஜார்ஷ், பங்கன்வால், லாகூலிஸ் என்ற  ஐந்து வகை மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

2. மூன்று நாடுகளை தனது எல்லையாகக் கொண்ட மாநிலம் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் அது?
விடை: சிக்கிம்
விளக்கம்:

பூட்டான், நேபால், சீனா என்ற நாடுகளை தனது எல்லையாக கொண்டது சிக்கிம் மாநிலம். இந்தியாவின் இரண்டாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் ஆகும். பல இன மக்களும், பல மொழிகளை பேசும் மாநிலம் சிக்கிம் ஆகும்.

3. நாடாளுமன்ற குழுக்கள் பொதுவாக எத்தனை வகைப்படும்?
விடை: இருவகைப்படும்
விளக்கம்:

 நாடாளுமன்ற நிலைக்குழு இரு வகைப்படும் முதலாவது நிலைக்குழு ஸ்டே ண்டிங் கமிட்டி என்றும் இரண்டாவது நிலைக்குழு தற்காலிக குழுவும், மதிப்பீட்டு கமிட்டி, பொது கணக்கு குழு,  அரசின் நிதி ஒதுக்கீடு, அரசின் நிதி  கணக்கு மற்றும் தலைமை கணக்கு அத்துடன் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையையும் ஆராய்கின்றது.

4. எக்கோ மார்க் என்ற திட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள பொருட்கள் யாவை?
விடை: உணவு, அழகு சாதன பொருட்கள்
விளக்கம்: 
மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உருவாக்கப்பட்டுள்ள எக்கோ மார்க் அதன் கீழ் பயன்படுத்தப்படும் உணவு, அழகு சாதன பொருட்கள்  முழுவதும் பாதுகாப்பானதாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காதவையாக  இருக்க வேண்டும்.

5. பொது இடங்களை பயன்படுத்துதல் குறித்து சாதி, சமயம், பாலினம் அத்தகைய காரணங்களை கொண்டு எந்த பாகுபாடும் காட்டுதல் கூடாது என எந்த உறுப்பு இதனை கூறுகின்றது?
விடை:உறுப்பு 15 (2)
விளக்கம்:

உறுப்பு 15(1) சாதி பாலினம் பிறந்த இடம் போன்ற எந்த ஒரு காரணங்களினாலும் அரசு எந்த ஒரு குடிமக்களுக்கும் வேற்றுமை காட்டக்கூடாது என கூறுகின்றது. பெண்கள், குழந்தைகளுக்கும் சிறப்பு வகை முறைகளை கொண்டு வர அரசுக்கு உறுப்பு 15(3) அதிகாரம் அளிக்கின்றது.

6.  உலக பாரம்பரிய தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
விடை:ஏப்ரல் 18
விளக்கம்:

ஏப்ரல் 18 முதல் பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகின்றது. உலக பாரம்பரிய தளங்கள், அத்தளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவைகளைப் பாதுகாத்து கொண்டாடுவது இதன் நோக்கமாகும் ஆகும். 1982 ஆம் ஆண்டு உலக நினைவுச்சின்ன மாநாட்டில் பாரம்பரிய தினம் அறிவிக்கப்பட்டு. 1983 யுனெஸ்கோவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

7.  தேசியக்கொடி சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
விடை: 2002
விளக்கம்:

தேசிய கொடி சட்டம் 2000 ஆம் ஆண்டு  பல்வேறு விதிமுறைகளுடன் அறிவிக்கப்பட்டது. தேசிய கொடியை விளம்பரத்திற்கு பயன்படுத்தக்கூடாது,  தேசிய கொடியை எரித்தல, அவமதித்தல், கிழித்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

8. அசோகர் கலிங்க நாட்டின் மீது படையெடுத்த ஆண்டு எது?
விடை: கி.மு.261
விளக்கம்:
அசோகர் கலிங்க நாட்டின் மீது கி.மு 261இல் படை எடுத்தார். அசோகர்  மேற்கொண்ட கலிங்கப் போரில் லட்சக்கணக்கான வீரர்கள் மரணம் அடைந்தனர். மேலும் பல லட்சக்கணக்கான வீரர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இதனைக் கண்டு அசோகர் மனம் வருந்தினார். இனி எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என புத்த மதத்திற்கு மாறினார்.

9. சாரநாத் தூண் யாரால் நிறுவப்பட்டது?
விடை: அசோகர்
விளக்கம்: 
புத்தர் தனது முதல் போதனையை சாரணத்தில் வெளியிட்டார். அசோகர் அவ்விடத்தில் உயரமான கல்தூணை நிறுவினார். அதன் உச்சியில் சிங்கங்களும் மற்ற உருவங்களும் பொறிக்கப்பட்டன. தர்மசக்கரம் அடி பீடத்தின்  மையத்தில் இருந்தது.

10. தேசிய சின்னம் எப்பொழுது ஏற்றுகொள்ளப்பட்டது?
விடை: 1950 ஜனவரி 26
விளக்கம்: 
1950,  26 அன்று இந்தியா குடியரசு நாடான தினத்தில் தேசிய சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாதவ் சாஹ்னி என்பவர் அசோக தூணிலிருந்து  சின்னத்தை  கொண்டு  1958 ஆம் ஆண்டில் வடிவமைத்தார்.

Post a Comment

0 Comments