இந்தியன் ஏர்போர்ஸில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு !


விமானப்படை நாட்டின் முப்படை ராணுவ பிரிவுகளில் ஒன்றாகும். தற்போது இந்த படைப்பிரிவில்கமிஷண்டு ஆபீசர்பணியில் தகுதியான இளைஞர்களை சேர்க்க அறிவிக்கப்பட்டுள்ளது.


அப்கேட்:
அப்கேட் (AFCAT 2/2018) என்ற தேர்வு, என்சிசி  மூலம் பிளையிங், டெக்னிக்கல், கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவுகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்திய குடியுரிமை பெற்ற ஆண்/ பெண் பட்டதாரிகள் இந்த பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்



பணியின் பெயர்
இந்தியன் ஏர்போர்ஸ்
வயது வரம்பு
20 முதல் 25 வயது வரை
கல்வித் தகுதி
10,+2, பட்டப்படிப்பு,எம்பிஏ, எம்சிஏ,
பணியிடங்கள் எண்ணிக்கை
182
சம்பளம்
ரூபாய் 56,100 முதல்1,10700
பணியிடம்
இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது


வயது வரம்பு
பிளையிங் பிரிவில் சேரும் விண்ணப்பதாரர்கள் 1-1-2019 தேதியில் 20 முதல் 24 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது 2-7-1995 மற்றும் 1-7-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். பைலட் பயிற்சி பெற்றவர்கள் 26 வயதுடியயோர் விண்ணப்பிக்க தகுதியுடையோர்கள் ஆவார்கள்

டெக்னிக்கல் பிரிவு மற்றும் கிரவுண்ட் டியூட்டி விண்ணப்பதாரர்கள் 20 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1993 மற்றும் 1-7-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இக்காலத்தில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

 கல்வித்தகுதி
பிளையிங் பிரிவு பணிக்கு 3 ஆண்டு கால பட்டப்படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 10, 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்

பி.., பி.டெக். படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஏரோனாட்டிகல் என்ஜினீயரிங் மற்றும் இது சார்ந்த பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை படித்தவர்கள் டெக்னிக்கல் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்

பல்வேறு விதமான பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, முதுநிலை டிப்ளமோ, சி.. போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் பணிகள் காத்திருக்கின்றன

தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் அந்தந்த பணிக்கான உயரம், எடை, மார்பளவு, பார்வைத்திறன் மற்றும் உடல் மனநலம் பெற்றிருக்க வேண்டும். நிலை-1, நிலை-2 என இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும்

விமானப்படை பொது சேர்க்கைத் தேர்வு (அப்கேட்) எனப்படும் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி, உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்காணல் ஆகியவை இதில் அடங்கும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட காலம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணி நியமனம் பெறலாம்.

விண்ணப்ப கட்டணம்
தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்இணையதளம் வழியாகவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.   இந்திய ஏர்போர்ஸில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 15.7.2018 ஆகும்



மேலும் படிக்க:

ஆர்ஆர்பி வங்கியில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு!  

Post a Comment

0 Comments