வீட்டிலிருந்தே கிளென்சர் செய்து முகப்பொலிவை அதிகப்படுத்துதலாம் !

அழகு என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமாகிவிட்டது. அதற்காக ஆயிரக்கணக்கில் நாம் செலவு செய்ய துணிந்து விட்டோம். உங்க அழகை நீங்களே பராமரிக்கலாம். வீட்டிலிருந்து உங்களை நீங்களே அழகுபடுத்திக்கொள்ள இங்கு சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதனை முழுமையாக பயன்படுத்தவும். சிலேட்டுகுச்சியில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து டிப்ஸ்களும் குறைந்தபட்சம் வீட்டிலிருந்தே செய்து கொள்ளலாம். பார்லர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொருளாதார ரீதியில் சிக்கனமும் செய்து பணத்தை மிச்சப்படுத்தலாம்.

சரும அழகு:
இன்றைய காலகட்டத்தில் காற்று மாசுபாடு காரணமாக நாம் வெளியே சென்று வரும்போது அதிகபட்சமான தூசுகள் முகத்தின் பாதிப்போடு நமது கைகால்கள் அனைத்தும் கருப்பு அடைந்து காணப்படும். அதன் காரணம் காற்றில் உள்ள மாசு ஆகும்.மேலும் சூரியஒளி வெப்பமும் ஒரு காரணம் ஆகும். இவற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ள எளிய முறையில் அழகு பொருட்களை வீட்டிலிருந்தே தயாரிப்பதை கற்றுக் கொள்ளுங்கள் தினமும் அதனை பயன்படுத்தி சருமப் பொலிவு பெறுங்கள் பெறுங்கள்.

கிளென்சர்: 
கிளென்சர் தயாரிக்க முக்கியமாக பொருட்களாக ஆலோவீரா ஜெல் எனப்படும் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்கள் வீடு, மற்றும் தோட்டங்களில் வளரும் கற்றாழை ஜெல் அல்லது கடைகளில் கிடைக்கும் கற்றாழை ஜெல், பாதாம் எண்ணெய், வைட்டமின் ஈ ஆயில் அத்துடன் ரோஸ் வாட்டர் இவை நான்கும் சருமப் பொலிவு மற்றும் இயற்கை அழகு இருக்கு உதவியாக இருக்கும்.

பயன்படுத்தும் முறை:
ஆலோவீரா ஜெல் ஒரு ஸ்பூன், பாதாம் எண்ணெய் ஒரு ஸ்பூன், வைட்டமின் ஈ ஆயில்  இரண்டு மாத்திரைகள், ரோஸ் வாட்டர் சிறிதளவு இது நான்கையும் நன்கு கலக்கவும் அதனை காற்றுப்புகாத கண்டெய்னரில் சேர்த்து ஒரு மாதம் பயன்படுத்தலாம்.

கிளின்சரை தினமும் முகத்தில் கொஞ்சம் தடவி மசாஜ் செய்து ஐந்து நிமிடம் அப்படியே விடவும் அதன்பின்பு நீரால் முகத்தை துடைத்து விடவும். இம்முறையை தினமும் பயன்படுத்தலாம். எளிதாக வீட்டிலே செய்யலாம் தேவையற்ற கிரீம்களை பயன்படுத்தி சரும அழகை  பொலிவை செயற்கை ஆக்காதீர்கள்.

கிளென்சர் பயன்படுத்துவதன் மூலம், இயற்கை அழகு, பொலிவு, சர்மம்  உயிர்ப்பான ஆரோக்கியம் போன்றவை பெறலாம். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் மகளிர்களுக்கு இது உதவியாக இருக்கும். இன்றைய மாசுபட்ட சுற்றுச்சூழலில் எவ்விடத்திற்கு சென்று வந்தாலும் முகமும் சருமமும் பொலிவுடன் பாதுகாக்கலாம்.

Post a Comment

0 Comments