வங்கி வேலை கனவா விண்ணப்பியுங்கள் சௌத் இந்தியன் வங்கி பணிக்கு!

சௌத் இண்டியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கவும். 

இந்தியா முழுவது பணியிடம் கொண்ட சௌத் இண்டியன் வங்கியில் பிஒ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 


பணியின் பெயர்
பிஒ பணியிடம்
வயது வரம்பு
20 முதல் 25 வயது வரை
கல்வித் தகுதி
10,+2, ஏதேனும் பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
100
சம்பளம்
ரூபாய் 23,700 முதல் 42,020
பணியிடம்
இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது

 

தேர்வுசெய்யும் முறை:
இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 100 ஆகும், ஆன்லைன்  டெஸ்ட் நடைபெறும் தேர்வு, குரூப் டிஸ்கஷன் மற்றும்  நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள்  தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். 

வயது  வரம்பு:
சௌத் இண்டியன் வங்கியில் பிஒ பணிக்கு விண்ணப்பிக்க எஸ்சி/ எஸ்டி பிரிவினர்களுக்கு ஐந்து வருடம் வயது வரம்பில் சலுகை உண்டு.

விண்ணப்ப கட்டணம் : 
விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 800 தொகை செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூபாய் 200 செலுத்தினால் போதுமானது. ஜீன் 26, 2018 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு ஜூலை 7,2018 நாள் நடைபெறும். 

மேலும் 



மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments