நான் உன்னை நேசிக்கிறேன் என்ற அன்பான வார்த்தை போதும் !

அன்பான வார்த்தைகள்  உறவுகளுக்கிடையே எப்பொழுதும் பிணைப்பு ஏற்படுத்தும்.  "நான் இன்று உனக்காக இன்றிரவு பாத்திரம் கழுவ உதவுகிறேன்" என்று ஒரு வார்த்தை காதல் மொழிகளில் புரிதலுடன் கூறிப்பாருங்கள், உங்களவள் எவ்வளவு கலைப்பாக இருந்தாலும் உங்களுக்கு வேலை தருவதை விரும்ப மாட்டாள். ஆனால் அதையும் மீறி நீங்கள்  உங்களவளுக்காக செய்யும் வேலை, பகிர்தல் என்பதெல்லாம் உங்களைப் பற்றிய மதிப்பையும் தனிப்பட்ட  அளவில் அன்பை அதிகப் படுத்தும். 


அன்பான வார்த்தைகள்: 
உங்கள் துணைவியிடம் நீங்கள் அன்பாக அனுசரனையோடு  வார்தைகளால் அணுகும் போது உங்களிடம் இருக்கும்  ஆத்மாத்மான பிணைப்பு அதிகரிக்கச் செய்யும். இரண்டு வெவ்வேறு வார்த்தைகள் உறவின் பலம் மற்றும் பலமற்ற உறவை நிர்ணயிக்கின்றன. ஒன்று சாந்தமாக பற்றுதலோடு பேசுதல் மற்றொன்று உங்களுக்கு  ஏற்படும் ஏமாற்றங்களை ஏமாற்றதோடு அப்படியே உங்கள் துணையிடம் வெறுமையாக தெரிவித்தல், ஏமாற்றங்களை கடிந்த வார்த்தைகளால தெரியப்படுத்துவதால் கிடைக்கும் ரியாக்ஷ்னைவிட ஏமாற்றத்தை கனிவுடன் நேர்மையுடன் தெரிவிக்கும் பொழுது நேரடியாக உங்கள் துணையை பாதித்து தவறுக்கு வருத்தம் தெரிவிக்க செய்யும். 


பெண்கள் மனநிலை: 
கணவனிடம் அனுபான வார்த்தைகள்  மற்றும் தன்னைப் பற்றிய   புரிதலுடன் அறிந்திருந்தருக்க  வேண்டும் என பெண்கள் எதிர்பார்ப்பார்கள். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் உணர்வை பகிர்ந்துகொள்ள தன் துணையுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.  தன் மனதில் ஏற்படும் காயங்கள், சந்தோசம் எதுவானாலும் கலந்தாய்வு செய்ய விரும்புவாள் அதற்கான வாய்ப்பை தன் துணையிடம் எதிர்ப்பார்பாள். அதனை ஆண்கள் புரிந்து செயல்பட்டால் புரிதலுடன் வாழ்க்கை  நகரும். 

கோபச்சொல் கூடாது: 
இருவருக்கிடையே எப்பொழுதும் கோபச்சொல் என்பது கூடாது. ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து பேசுதல் வேண்டும். கோபமாக நீங்க எரியும் வார்த்தைகளை விட அன்பாக தெரிவிக்கும் விருப்பங்கள் நிச்சயம் 100 மடங்கு மாற்றங்களை  துணையிடம் ஏற்படுத்தும். குரலில் இருக்கும் கத்தல் போக்கு குறைத்து   மெல்லிய  போக்கினை பயன்படுத்தினால் இருவருக்குமான கலந்தாடல்  இன்னும் பலப்படும். 

கணவரிடம் பேசும் போது அவருடைய இடத்தில் இருந்து பேச வேண்டும். அப்பொழுது காதலில் இருவருக்கும் இருக்க வேண்டியது பக்குமாவமான அனுகுமுறை இருவருக்கும் இருக்கும் பொழுது வாழ்வு என்பது செழிக்கச் செய்யும். நாம்  பேசும் வார்த்தைகள் அதுவும் நமது துணையோடு பேசும் போது இருக்கும்  மெல்லிய போக்கு எப்பொழுதும் பந்தத்தை நிலைக்கச் செய்யும். வாழ்வின் எந்த நிலையிலும் வார்த்தை பிரயோகம் இரு பந்தங்களையும் உறுதியாக்க உதவும். ஆகையால் துணையிடம் நான் உன்னை நேசிக்கிறேன், நீ என் வாழ்வின் ஆதாரம் என  மெல்லிய குரலில் உபயோகித்து பாருங்கள் இருவரும் பரஸ்பரம் உபயோகிக்கும் பொழுது அதன் போக்கு வேறுமாதிரியாக இருப்பதுடன் உறவின் வலிமையை உயர்த்தும்.

Post a Comment

0 Comments